By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 8 Feb 2026 Paper 2 Tamil Language Question Paper with Answer Key

You are reading the question paper with answers. This is not the timed test: no clock is running and nothing is being scored.

Go to the timed test →

Passage

பத்தியைப் படித்து அதனைத் தொடர்ந்து வரும் வினாக்களுக்குச் சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து எழுதவும் (கே.எண். 91 - 99)
இசைத்தமிழின் மாண்பினை அறிந்த பழந்தமிழர் இயல், இசை, நாடகம் என்னும் மூன்று கூறுகளையும் கொண்ட முத்தமிழ் இசையை நடுவில் வைத்துப் போற்றி மகிழ்ந்தனர். மிகத் தொன்மையான தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம், இசை நூலை “நரம்பின் மறை” என்று குறிப்பிட்டுள்ளது. இந்நூலுள் இசை பற்றிய பல குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. சங்க நூல்களாகிய பரிபாடல், பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை முதலிய நூல்களிலும், கல்லாடம் போன்ற நூல்களிலும், இசைத்தமிழ் பற்றிய பல செய்திகள் உள்ளன. முத்தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரம் ஓர் இசைக் கருவூலமாகவே விளங்குகிறது. பிற்காலத்தில் தோன்றிய பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணம் போன்றவற்றிலும் இசை பற்றிய குறிப்புகள் உள்ளன.
பழங்காலத்தில் இசைத்தமிழ் இலக்கண நுல்களாக விளங்கிய பெருங்குருகு, பெருநாரை, இந்திர காளியம், இசை நுணுக்கம் போன்ற நூல்களெல்லாம் அழிந்து போயின. சிலப்பதிகாரத்தில் ஓர் இயக்கில் (ஸ்தாயி) உள்ள அலகுகள் (சுருதிகள்), யாழ், குழல் தண்ணுமை போன்ற இசைக்கருவிகள், யாழாசிரியன், இசையாசிரியன் குழலோன் தண்ணுமையோன் ஆகியோரின் அமைதிகள் (தகைமைகள்) அக்காலத்தில் வழக்கில் இருந்த பண்கள் முதலிய இசைத்தமிழ் பற்றிய அறிய உண்மைகள் காணக்கிடைக்கின்றன. சங்க காலத்திலும் அதற்கு பின்னரும் தமிழ் இலக்கியமும் இசைக்கூத்து போன்ற அறுசுவைகளும் அரசர்களின் ஆதரவு பெற்று செழித்தோங்கின. கி.பி மூன்றாம் நூற்றாண்டில் இருந்து ஆறாம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் தமிழகத்தில் களப்பிரரின் ஆட்சி ஏற்பட்டபோது, அருங்கலைகளான இசையும் கூத்தும் ஆதரவற்றுப் போயின என்று ஆய்வாளர் கூறுகின்றனர். களப்பிரர் பாலி, பிராகிருதம் ஆகிய மொழிகளை அரசு மொழிகளாகக் கொண்டனர். அதன் விளைவாகத் தமிழ் வளர்ச்சி அடையவோ தமிழ்ப்புலவோர் சிறப்புடன் வாழவோ இயலாமல் போய்விட்டது. இதன் காரணமாகவே வரலாற்று ஆசிரியர்கள் களப்பிரரின் ஆட்சி காலத்தை இருண்ட காலம் என்று குறிப்பிட்டனர்.

Q91

‘மகிழ்ந்தனர்’ என்னும் சொல்லின் சாரியை ______ ஆகும்.

  1. (1) த்
  2. (2) அன்
  3. (3) ழ்
  4. (4) அர்
See answer and solution
Q92

களப்பிரர் ஆட்சிக்காலத்தில் தமிழிசையும், கூத்தும் நலிந்து போனதற்கான காரணம் :

  1. (1) களப்பிரர்கள் இசை ஆர்வம் இல்லாதவர்கள்
  2. (2) களப்பிரர்கள் பாலியையும், பிராகிருதத்தையும் ஆட்சி மொழிகளாக ஏற்று இருந்தார்கள்
  3. (3) களப்பிரர்கள் இசை மற்றும் கூத்து அல்லாத வேறு கலைகளில் ஆர்வம் காட்டினர்
  4. (4) களப்பிரர்களின் இசை ஆர்வம் யாழ், குழல் போன்ற கருவிகளில் இருந்தது
See answer and solution
Q93

‘குழலோன்’ என்பதன் இலக்கணக்குறிப்பு :

  1. (1) பண்புத்தொகை
  2. (2) வினையாலணையும் பெயர்
  3. (3) தொழிற்பெயர்
  4. (4) உம்மைத்தொகை
See answer and solution
Q94

பின்வருவனவற்றுள் எது இசைத் தமிழ் இலக்கியங்களில் இன்றும் நிலைத்து இருக்கிறது ?

  1. (1) பெருங்குருகு
  2. (2) இந்திரகாளியம்
  3. (3) பெருநாரை
  4. (4) தொல்காப்பியம்
See answer and solution
Q95

இசையில் அம்சங்களான ‘இயக்கி’ மற்றும் ‘சுருதிகள்’ இடம் பெறும் நூல் எது ?

  1. (1) பரிபாடல்
  2. (2) திருவிளையாடல்புராணம்
  3. (3) சிலப்பதிகாரம்
  4. (4) நரம்பின் மறை
See answer and solution
Q96

‘தகைமை’ என்னும் சொல்லின் பொருள் :

  1. (1) தண்ணுமை
  2. (2) குணம்
  3. (3) தெவிட்டல்
  4. (4) தீங்கு
See answer and solution
Q97

‘நரம்பின் மறை’ என்னும் சொற்றொடரில் ‘நரம்பு’ என்னும் சொல் ______ நரம்பை குறிக்கிறது.

  1. (1) விலங்கின்
  2. (2) இசைக்கருவியின்
  3. (3) மனிதரின்
  4. (4) பூவிதழின்
See answer and solution
Q98

களப்பிரர் ஆட்சிக் காலம் எத்தனை நூற்றாண்டுகள் நீடித்தன ?

  1. (1) 3
  2. (2) 2
  3. (3) 5
  4. (4) 4
See answer and solution
Q99

பின்வருவனவற்றுள் எதில் இசைத் தமிழ் பற்றிய செய்தி இடம்பெறவில்லை ?

  1. (1) பெரும்பாணாற்றுப்படை
  2. (2) தொல்காப்பியம்
  3. (3) சிலப்பதிகாரம்
  4. (4) தண்ணுமையோன்
See answer and solution

Passage

பாடலைப் படித்து அதனைத் தொடர்ந்து வரும் வினாக்களுக்குச் சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து எழுதவும் (கே.எண். 100 - 105)
வையம் புகழ்ஞானி வள்ளுவன் மக்களெலாம்
உய்யும் படிமுப்பால் ஓதினான் - ஐயமின்றி
இம்மை மறுமை யிரண்டுக்கும் நேர்வழியைச்
செம்மையிற் கண்ட தெளிந்து.
ஜாதி மதபேதம் சற்றேனு மின்றி நடு
நீதி நிலைகண்ட நீள்புகழோன் - கோதிலாச்
செந்தமிழ்ச் செல்வன் திருவள் ளுவன்பாதம்
சிந்தையிற் கொள்வோம் தினம்.
புத்தகம் நூறு புரட்டிக் களைப்புற்றச்
சித்தம் கலங்கித் திகைப்பதேன் ? வித்தகன்
தெய்வப் புலவன் திருவள் ளுவன்சொன்ன
பொய்யில் மொழியிருக்கும் போது.

Q100

சரியான இணையைக் கண்டறிக.
உறுதிக்கூற்று : திருவள்ளுவரை உலகம் போற்றும் புகழ்ஞானி எனக் கவிஞர் புகழ்ந்துரைக்கின்றார்.
காரணம் : உலக மக்கள் அனைவரும் உய்யும்படி திருக்குறளைப் பாடினார்.

  1. (1) (உ) சரி, (கா) தவறு.
  2. (2) (உ) சரி, (கா) சரி.
  3. (3) (உ) தவறு, (கா) தவறு.
  4. (4) (உ) தவறு, (கா) சரி.
See answer and solution
Q101

‘கோதிலா’ என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைப்பது :

  1. (1) கோதில் + இலா
  2. (2) கோது + இலா
  3. (3) கோதில் + இல்லா
  4. (4) கோது + இல்லாத
See answer and solution
Q102

ஓரெதுகைச் சொற்களைக் கண்டறிக.

  1. (1) வையம், வள்ளுவன்
  2. (2) செந்தமிழ், சிந்தை
  3. (3) இம்மை, மறுமை
  4. (4) புத்தகம், புரட்டி
See answer and solution
Q103

‘நடு நீதி நிலைகண்ட நீள் புகழோன்’ எனக் கவிஞர் புகழ்வது யாரை ?

  1. (1) ஞானி
  2. (2) செந்தமிழ்ச் செல்வன்
  3. (3) திருவள்ளுவர்
  4. (4) வித்தகன்
See answer and solution
Q104

‘செம்மை’, ‘இம்மை’, ‘மறுமை’ - இலக்கணக் குறிப்புத் தருக.

  1. (1) அன்மொழித் தொகை
  2. (2) உம்மைத் தொகை
  3. (3) அடுக்குத் தொடர்
  4. (4) பண்புத் தொகை
See answer and solution
Q105

அனைவரும் தினமும் சிந்தையில் கொள்வோம் எனக் கவிஞர் கூறுவது எதனை ?

  1. (1) வள்ளுவன் பாதத்தை
  2. (2) செந்தமிழை
  3. (3) நடு நீதி நிலையை
  4. (4) நீள் புகழை
See answer and solution
Q106

பின்வருவனவற்றுள் எது நிறுவன எழுத்துகளின் கீழ் வராதது ஆகும் ?

  1. (1) இரங்கல் குறிப்பு
  2. (2) தொழில்சார்ந்த கடிதம்
  3. (3) சுய விபர குறிப்புகள்
  4. (4) சீராய்வுகள்
See answer and solution
Q107

மொழி கைவரப்பெறுதல் மற்றும் மொழிக்கற்றலில் ‘மொழி உட்பொதித்திருத்தல் எடுகோள்’ என்பது என்ன ?

  1. (1) அனைத்து மொழிகளும் இலக்கணங்களை பெற்றுள்ளன மற்றும் எல்லா குழந்தைகளும் அவற்றை அவரவர் வழி கற்கின்றனர் என்ற யோசனையை இது நிராகரிக்கிறது.
  2. (2) அனைத்து மனிதர்களும் உடல் டிரில்லிங் மற்றும் சீரமைத்தல் மூலமாக மொழிகளை கற்க இயலும் என்பதை நம்புகிறது.
  3. (3) அனைத்து மாந்தர்களும் பிறவியிலேயே மொழி அறிவு பெற்றுள்ளனர் என்பதை நம்புகிறது.
  4. (4) பழக்கம் உருவாக்குதலின் விளைவாக மொழி கற்கப்படுகிறது என்பதை நம்புகிறது.
See answer and solution
Q108

‘உள்ளடக்கம் சார்ந்த மொழி உள்ளீடு’ என்பது எதனை குறிக்கிறது ?

  1. (1) மொழி எப்படி உபயோகிக்கப்படுகிறது என்று கவனம்செலுத்தும் மொழி உள்ளீடு
  2. (2) உள்ளீடுகள் வழங்கல் மற்றும் அதன் செயல்முறைகள்
  3. (3) தகவலை மையப்படுத்தும் மொழி உள்ளீடுகள்
  4. (4) சொல்வளம், உச்சரிப்பு, இலக்கணம் முதலானவை
See answer and solution
Q109

மொழிக்கற்றலுக்கான எந்த அணுகுமுறை வார்த்தைகள் மற்றும் வார்த்தை தொடர்களை, மொழிக்கற்றலுக்கான அடிப்படை என பரிந்துரைக்கிறது ?

  1. (1) இடுபணி அடிப்படையில் அமைந்த மொழி கற்றல் (Task based language learning)
  2. (2) தகவல்பரிமாற்று அணுகுமுறை (Communicative approach)
  3. (3) முழுசொல் அணுகுமுறை (Lexical approach)
  4. (4) இலக்கண மொழிப்பெயர்ப்பு முறை (Grammar translation method)
See answer and solution
Q110

பள்ளிக்கல்வியில், பின்வரும் எது பன்மொழித்துவத்தின் குறிக்கோளாக இருக்காது ?

  1. (1) பள்ளியில் கற்பித்தல் - கற்றலுக்காக, கற்போரின் மொழிகளை உபயோகிக்கப்படுத்துதல்
  2. (2) தாய்மொழியை ஒரு மொழியாகவும் மற்றும் கற்கும் ஊடகமாகவும் முடிந்தவரை கற்றல்
  3. (3) மும்மொழி கொள்கையின் அடிப்படையில், தாய்மொழி, இந்தி மற்றும் ஆங்கிலம் கற்றல்
  4. (4) அனைத்து குழந்தைகளும் அவர்களின் தாய்மொழியை வைத்து பள்ளிக் கல்வியை துவங்கி பல மொழிகளை (குறைந்தபட்சம் இரண்டு) கற்றலில் சேர்த்துக் கொண்டே செல்கின்றனர்.
See answer and solution
Q111

ஒரு பனுவலின் (உரையின்) பொதுவான கருத்தினை பெற, வாணி ஒரு கட்டுரையைப் படிக்கிறார். அவளின் வாசிப்பு எவ்வாறு அறியப்படுகிறது ?

  1. (1) அனுமானம் செய்தல் (ஊகம் செய்தல்)
  2. (2) நுணுக்கமாக வாசித்தல்
  3. (3) மேலோட்ட வாசித்தல்
  4. (4) ஆய்வறிந்து வாசித்தல்
See answer and solution
Q112

பள்ளி சார்ந்த மதிப்பிடுதலை வளர்த்தெடுக்க இரண்டு தகுந்த வாசித்தல்களை தேர்ந்தெடுக்க :
(a) கற்போர் மற்றும் ஆசிரியர் இவர்கள் இருவருக்குமிடையே தானே இயங்குதலை வளர்த்தெடுக்க உதவுகிறது
(b) பள்ளி தானே திட்டமிட வாய்ப்பு தருகிறது
(c) தேர்வு வாரியத்தின் அதிகாரத்தை உணரச் செய்கிறது
(d) மதிப்பிடல் திட்டமிடும் செயல்முறைகளில் கற்பவரை ஒரு முனைப்பான பங்குதாரராக ஈடுபடுத்துவதில்லை

  1. (1) (a) மற்றும் (b)
  2. (2) (b) மற்றும் (c)
  3. (3) (c) மற்றும் (d)
  4. (4) (d) மற்றும் (a)
See answer and solution
Q113

எந்த கல்வித் தத்துவம் பின்வருவதை பரிந்துரைக்கிறது ?
உண்மை உலக அமைப்புகள் அல்லது பின்னணி அடிப்படையிலான கற்றல் போன்ற கற்றல் சூழல்கள், முன்தீர்மானிக்கப்பட்ட பயிற்றுவிப்பு தொடருக்கு (வரிசைக்கு) பதிலாக உபயோகிக்கப்படுத்தப்படுகின்றன.

  1. (1) இருப்பிடவாதம்
  2. (2) கட்டமைப்புவாதம்
  3. (3) ஒலிமொழிவாதம்
  4. (4) கருத்துணர்வாதம்
See answer and solution
Q114

ராகுல் எனும் ஆறாம் வகுப்பு மாணவர் புதியதாக ஒரு இலக்கண வடிவத்தை கற்கும்போது அதனை தான் ஏற்கனவே கற்றதோடு தொடர்புபடுத்தி பார்க்கும் வல்லமை பெறுகிறார். பின்வரும் உத்திகளில் எது இதிலிருந்து வருகிறது ?

  1. (1) அனுபவம் மூலம் புதியன கண்டறியும் உத்தி (Heuristic Strategies)
  2. (2) கருத்துணர் உத்திகள் (Cognitive Strategies)
  3. (3) மீஉயர் கருத்துணர் உத்திகள் (Metacognitive Strategies)
  4. (4) கருத்துணர் மற்றும் மீஉயர் கருத்துணர் உத்திகள் (Cognitive and Metacognitive Strategies)
See answer and solution
Q115

ஏழு வாக்கியங்கள் கொண்ட சுருக்கமான ஒரு உரையை (பனுவலை) ஏழாம் வகுப்பு ஆசிரியர் ஒருவர் படித்துக் காட்டுகிறார். பிறகு அவர் மாணவர்களை கவனமாக அதனை கேட்கும்படியும், துல்லியமாக அதே போன்று அல்லாமல் அதற்கு அருகாமையில் உள்ளது போன்ற ஒரு உரையை மறுஉருவாக்கம் செய்யவும் வைக்கிறார். இந்த உத்தி என்னவென்று அறியப்படுகிறது ?

  1. (1) ஸ்கீமா உருவாக்கல்
  2. (2) மேலிருந்து-கீழ் உத்தி
  3. (3) கீழிருந்து-மேல்நோக்கிய உத்தி
  4. (4) பத்தி சொல்லி எழுத வைத்தல்
See answer and solution
Q116

கற்றல் விளைப்பயன்களின் நோக்கங்களை பொறுத்தமட்டில் பின்வரும் எந்த கூற்று உண்மையானது ?
(a) பாட உள்ளடக்கம் சார்ந்த கற்றலை காட்டிலும் திறன்-அடிப்படையிலான கற்றலை வளர்த்தல்
(b) மாணவர்களை மொழியை படைப்பாற்றலுடன் உபயோகிக்கும்படி செய்ய, அவர்களை மொழித்திறன்களில் வல்லமைப் பெறச் செய்யும் திறமையை அளித்தல்
(c) பாட உள்ளடக்கத்தை நன்கு கற்றறியவும் மற்றும் அதனை பின்னால் பயன்படுத்தும் திறமை பெறச் செய்தல்
(d) குறிப்பிட்ட காரணங்களுக்காக மொழியை உபயோகிக்க கற்பதற்கு மாணவர்களை திறம்பட செய்தல்

  1. (1) (c) மட்டும் உண்மையானவை
  2. (2) (b) மற்றும் (c) உண்மையானவை
  3. (3) (d) மற்றும் (c) உண்மையானவை
  4. (4) (a) மற்றும் (d) உண்மையானவை
See answer and solution
Q117

இலக்கணம் கற்றலில் ‘செயல்முறை அறிவை’ பின்வரும் எந்த கூற்று மிகச் சரியாக விளக்குகிறது ?

  1. (1) வடிவம் பற்றி தெரிந்து கொள்ளுதல்
  2. (2) இலக்கண வடிவம் என்றால் என்ன என்றும் அதை உபயோகிப்பது பற்றியும் அறிதல்
  3. (3) இலக்கணத்தின் விதிகளை கற்று பிறகு அதனை மறுஉருவாக்கம் செய்தல்
  4. (4) ஒரு இலக்கண புத்தகத்தில் எப்படி ஒரு இலக்கண வடிவம் செயல்படுகிறது என்பதை புரிந்து கொள்ளுதல்
See answer and solution
Q118

திருமதி உஷாராணி எனும் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியை, தனது மாணவர்களை அன்றாட பயன்பாட்டுக்கான மொழியை உபயோகிக்கச் செய்தும் மற்றும் (மொழியின்) சூத்திர பயன்பாடுகளை அவர்களுக்கு கற்பித்தும் அவர்கள் ஆங்கில மொழி பேசுவதற்கு உதவுகிறார். அவர் மாணவர்களிடையே என்ன திறன்களை வளர்த்தெடுக்க முயல்கிறார் ?

  1. (1) தகவல் பரிமாற்றும் திறன்கள்
  2. (2) ஒருவருக்கு-ஒருவர் உடனான திறன்கள்
  3. (3) கருத்துணர் கல்வி மொழி தேர்ச்சி
  4. (4) அடிப்படை பரஸ்பர தகவல்தொடர்பு திறன்கள்
See answer and solution
Q119

ஓர் ஆசிரியர் ஏழாம் வகுப்பு மாணவர்களின் பிழைகளில் ஒரு குறிப்பிட்ட வடிவத்தை திரட்டி மற்றும் மாதம் ஒரு முறை அம்மாணவர்களை அவர்களின் பிழைகளைத் தெரிந்துகொள்ள வைக்கிறார். அவர் யார் அந்த பிழைகளை செய்தனர் என்பதை வெளியிடவில்லை. மேலும் அவர் மாணவர்களை அவர்களின் பிழைகளைப் பற்றி நினைத்துப் பார்க்கச் செய்கிறார். இந்த பயிற்சி எவ்வாறு அறியப்படுகிறது ?

  1. (1) இலக்கணத்தை ஆய்வதும் மற்றும் அதோடு ஈடுபாடு கொள்வதும்
  2. (2) இலக்கணம் கற்பித்தல்
  3. (3) பின்னூட்டம் அளித்தல்
  4. (4) பிழை அன்வயப்படுத்துதல் (பகுப்பாய்வு செய்தல்)
See answer and solution
Q120

நாம் கேட்கும் அல்லது பார்க்கும்போது அடையாளம் காணும் வார்த்தைகள் எவ்வாறு அறியப்படுகின்றன ?

  1. (1) அகராதி சொல் (Lexis)
  2. (2) உருவாக்கம் செய்ய உதவும் சொல்வளம் (Productive vocabulary)
  3. (3) உள்வாங்கும் சொல்வளம் (Receptive vocabulary)
  4. (4) ஈடுபடுத்தும் சொல்வளம் (Engaging vocabulary)
See answer and solution

Passage

பத்தியைப் படித்து அதனைத் தொடர்ந்து வரும் வினாக்களுக்குச் சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து எழுதவும் (கே.எண். 121 - 128)

மோனாட்ரோபா யூனிபுளோரா (Monotropa uniflora) என்னும் தாவரத்தைப் பேய்ச்செடி, பேய்க் குழாய் செடி அல்லது இந்திய குழாய்த் தாவரம் என்று அழைக்கின்றனர். இது இமயமலை, கிழக்கு ஆசியா, அலாஸ்கா, பனாமா, கொலம்பியா, வட அமெரிக்கா, வட தென் அமெரிக்கா போன்றப் பகுதிகளில் காணப்படுகிறது. ஒளிச்சேர்க்கை இல்லாமல் வாழக்கூடிய பூக்கும் தாவரங்களில் இதுவும் ஒன்றாகும். மேலும் இது எந்த வெளிச்சமும் இல்லாமல், இருண்ட பகுதியிலும் வாழக்கூடியது.

இந்தத் தாவரம் 5 முதல் 30 செ.மீ. உயரம் வரை வளரும். தண்டில் 5 முதல் 10 மி.மீ. நீளமுள்ள மிகவும் சிறிய இலைகள் உள்ளன. இதற்கு காம்புகள் கிடையாது. இவை செதில்கள் போன்றவை. இதன் கட்டமைப்பு மெலிந்தும், சிறியதாகவும், ஒளி கசியும் தன்மை கொண்டதாகவும் உள்ளது.

இந்தத் தாவரம் வெண்மையானது. சில சமயம் இளம் சிவப்பு நிறத்திலும் காணப்படும். இத்தாவரத்தில் வெள்ளை மலர்கள் தோன்றுகின்றன. 3 முதல் 8 இதழ்கள் உள்ளன. இதில் ஒளி ஊடுருவும். மேலும் இதில் 10 முதல் 12 மகரந்தங்கள் இருக்கின்றன. இலையுதிர் காலத்தில், ஆரம்பத்தில் பெரும்பாலும் மழைக்கு சில நாட்களுக்குப் பிறகு பூக்கும். தேனீக்கள், ஈக்கள் மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது.

இத்தாவரத்தில் குளோரோபில் கிடையாது சூரிய ஒளியில் இருந்து ஆற்றலை உருவாக்க முடியாது. இது சூரிய ஒளியை சார்ந்து வளருவது கிடையாது. அடர்ந்த காடுகளின் அடிவாரத்தில் மிகவும் இருண்ட சூழலில் வளர்கிறது.

இது குளோரோபில் உற்பத்தி செய்யும் தாவரங்களில் இருந்து பூஞ்சைகளின் நிலத்தடி மைக்கோரைசல் நெட்வொர்க்குகள் வழியாகத் தனக்கு வேண்டிய ஆற்றலை பெறுகிறது. ஆக இது ஒரு ஒட்டுண்ணி தாவரமாகும். இது பெரும்பாலும் பீச் மற்றும் ஹெம்லாக் மரங்கள் நிறைந்த பகுதிகளில் மட்டுமே வளர்கிறது. பூஞ்சைகள் இல்லை என்றால் இதனால் உயிர் வாழ முடியாது.

Q121

பேய்ச்செடி என்று இது மிக முக்கியமாக அழைக்கப்படக் காரணம் :

  1. (1) இது இருளில் வாழ்வதினால் மட்டுமே
  2. (2) இது சூரிய ஒளியைச் சார்ந்து வாழ்வதில்லை
  3. (3) மைக்ரோ நெட்வொர்க்குகள் வழியாகத் தனக்கு வேண்டிய ஆற்றலை பெறுகிறது
  4. (4) இவற்றில் எதுவும் இல்லை
See answer and solution
Q122

பின்வரும் பகுதியில் எங்கு பேய்ச்செடி காணப்படுவதில்லை ?

  1. (1) வட அமெரிக்கா
  2. (2) பனாமா
  3. (3) அலாஸ்கா
  4. (4) பெரு
See answer and solution
Q123

பேய்ச்செடியின் மற்ற பெயர் :

  1. (1) குழாய்ச் செடி
  2. (2) குழாய் மரம்
  3. (3) இந்திய குழாய்த் தாவரம்
  4. (4) குழாய்ச் செடி மற்றும் இந்திய குழாய்த் தாவரம்
See answer and solution
Q124

பேய்ச்செடியின் தனித்தன்மை __________ ஆகும்.

  1. (1) இதில் பேய்கள் மட்டுமே வாழும்
  2. (2) இது இருண்ட பகுதியில் வாழக்கூடியது
  3. (3) ஒளிச்சேர்க்கை இல்லாமல் வாழக்கூடியது
  4. (4) இது இருண்ட பகுதியில் வாழக்கூடியது மற்றும் ஒளிச்சேர்க்கை இல்லாமல் வாழக்கூடியது
See answer and solution
Q125

‘பீச்’ மற்றும் ‘ஹெம்லாக்’ உள்ள இடங்களில் பேய்ச்செடி இருப்பதால் இது __________ என்று அறியப்படுகிறது.

  1. (1) சாறுண்ணி
  2. (2) விலங்குண்ணி
  3. (3) தாவரஉண்ணி
  4. (4) ஒட்டுண்ணி
See answer and solution
Q126

பின்வரும் கூற்றுக்களில் எது பேய்ச்செடியைப் பற்றியத் தவறான கூற்றாகும் ?

  1. (1) இதில் 12 மகரந்தம் வரை இருக்கும்
  2. (2) இது தனக்கு வேண்டிய ஆற்றலைச் சூரிய ஒளியில் இருந்து பெறுகிறது
  3. (3) இது 30 சென்டிமீட்டர் வரை வளரும்
  4. (4) இது இருண்ட சூழலில் வளரும்
See answer and solution
Q127

பேய்ச்செடியில் மகரந்த சேர்க்கைக்குக் காரணமானவை :

  1. (1) தேனீக்கள், பறவைகள்
  2. (2) ஈக்கள், வெளவால்கள்
  3. (3) தேனீக்கள், ஈக்கள்
  4. (4) மேம்பூச்சிகள், மரவட்டைகள்
See answer and solution
Q128

‘குளோரோஃபில்’ என்பதன் தமிழ்ச்சொல் __________ ஆகும்.

  1. (1) மகரந்தம்
  2. (2) அல்லி
  3. (3) குளோரோஃபார்ம்
  4. (4) பச்சையம்
See answer and solution

Passage

பத்தியைப் படித்து அதனைத் தொடர்ந்து வரும் வினாக்களுக்குச் சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து எழுதவும் (கே.எண். 129 - 135)

சினிமா முதன் முதலில் மேல்நாட்டில்தான் உதயமாயிற்று என்பதில் சந்தேகமே இல்லை. சினிமா உற்பத்தியான அந்நாளில் முதல் முதலாக சலனப்படங்கள்தான் (Silent Pictures) கண்டுபிடிக்கப்பட்டது. கால வெள்ளத்தில், விஞ்ஞான வளர்ச்சியால் ஒலியை (Sound) ஒளியாக்கி (Light) அவ்வொளியைப் படங்களின் (Film) வலது புற ஓரத்தில் பதிவு செய்து அப்படம் ப்ரொஜெக்டரின் மூலம் ஓடும் போது ஆர்க் (Arc) என்ற பிரகாசம் பொருந்திய விளக்கின் வாயிலாகப் பதிவு செய்யப்பட்ட ஒளியின் நின்று ஒளியைத் தொனிக்கச் செய்து பேசும் படங்களாகத் தயாரித்தனர். இதுதான் இன்றைய பேசும் படம். சினிமா தோன்றாத அக்காலத்தில் நம் நாட்டில் சினிமாவைப் பூலோகத்தின் எட்டாவது அதிசயமாகக் கருதி இருந்தார்கள். வெகு நாளைக்குப் பிறகு மெதுவாக இந்தியாவில் (முதன் முதல் வட இந்தியாவில்) சினிமா படங்களைத் தயாரிக்கலானார்கள். அவைகளும் சலனப் படங்களே. நாளடைவில் சலனப் படம் போய் பேசும் படமாகவும் தயாரித்தனர். அதுவும் நம் தமிழ்நாட்டில் அல்ல என்பதை நினைவுறுத்துகிறேன்.

நம் இந்தியாவில் முதன் முதல் சினிமாவைத் தயாரித்தவர் நாசிக் ஜில்லாவை சேர்ந்த ஸ்ரீ தந்தி ராஜ கோவிந்த பால்கே என்பவர்தான். அவர் பல நாட்களாக செய்த அனுபவ ஆராய்ச்சியின் பயனாக 1912 -ம் வருஷம் ஹரிச்சந்திரா என்னும் பேசாப் படத்தைத் தயாரித்தார்; பிறகு தொடர்ந்தார்போல் பல சலனப்படங்களைத் தயாரிக்கலானார். இதைக் கண்டு ஆங்கிலேயர்களே மகிழ்ந்தனர். அவரை இந்திய சினிமா கலையின் பிதா எனக் கொள்ளலாம். வருஷங்கள் பல ஓடி மறைந்தன. 1927 ஆம் வருஷத்தில் பேசும் படம் கண்டுபிடிக்கப்பட்டது; அதன் பிறகு மூன்று வருடங்கள் கழித்துதான் அதாவது 1930 ஆம் வருஷத்தில் நம் வட இந்தியாவிலும் பேசும் படம் தயாரிக்கப்பெற்றன.

முதன்முதல் இந்தியாவிலேயே பேசும் படம் தயாரித்தவர் கான் பகதூர் ஆர்தேஸ்-இராணி என்னும் வடநாட்டார்தான். அதுவரை பம்பாயிலேயே சலனப் படங்களைத் தயாரித்துப் பெரும் புகழ் அடைந்திருந்த அவர் திடீரென்று ஒரு பேசும் படத்தைத் தயாரிக்க வேண்டும் என்று எண்ணினார். அதற்கேற்ற சாதனங்களும் அவருக்கு கிடைத்திருந்ததால் 1930 -ம் வருஷம் ‘ஆலமரா’ என்ற பெயருடன் ஒரு பேசும் படத்தைத் துணிகரமாகத் தயாரித்தார் ஹிந்தியில்.

Q129

தந்திராஜ கோவிந்த பால்கே சார்ந்த பகுதி :

  1. (1) பம்பாய்
  2. (2) நாசிக்
  3. (3) டெல்லி
  4. (4) கான்பூர்
See answer and solution
Q130

இந்திய சினிமா கலையின் பிதா என்று அறியப்படுபவர் :

  1. (1) தந்திராஜ கோவிந்த பால்கே
  2. (2) ஆர்தேஸ் - இராணி
  3. (3) சத்யஜித்ரே
  4. (4) மகாதேவ கோவிந்த ராண்டே
See answer and solution
Q131

ஆர்தேஸ்-இராணி பேசும்படம் தயாரிக்கக் காரணம் :

  1. (1) இராணியிடம் பேசும்படம் தயாரிப்பதற்கான எண்ணம் இருந்தது
  2. (2) இராணிக்கு பெரும் பொருள் லாட்டரியில் கிடைத்திருந்தது
  3. (3) இராணிக்கு பேசும் படம் தயாரிக்கும் சாதனங்கள் கிடைக்கப்பெற்றன
  4. (4) இராணியிடம் பேசும்படம் தயாரிப்பதற்கான எண்ணம் இருந்தது மற்றும் இராணிக்கு பேசும் படம் தயாரிக்கும் சாதனங்கள் கிடைக்கப்பெற்றன
See answer and solution
Q132

மேற்கண்ட பத்திகளின் நிகழும் செய்திகள் எவ்வகை விவரித்தலைப் பின்பற்றுகிறது ?

  1. (1) முதல் நபர் விவரித்தல்
  2. (2) இரண்டாம் நபர் விவரித்தல்
  3. (3) மூன்றாம் நபர் விவரித்தல்
  4. (4) இவற்றில் எதுவுமில்லை
See answer and solution
Q133

நீங்கள் ‘சலனப்படங்கள்’ எனும் தொடரை ஆங்கிலத்தில் மேலும் மொழிபெயர்க்க நேர்ந்தால், பின்வரும் எதனைத் தமிழில் மிக சரியான இணையாகக் கொள்வீர்கள் ?

  1. (1) Motion pictures
  2. (2) Acting pictures
  3. (3) Oscillating pictures
  4. (4) Still pictures
See answer and solution
Q134

பூலோகத்தில் எட்டாவது அதிசயம் __________ ஆகும்.

  1. (1) பேசும்படம்
  2. (2) வண்ணப்படம்
  3. (3) பேசாப்படம்
  4. (4) இவை எதுவும் அல்ல
See answer and solution
Q135

பேசும் படங்கள் தயாரிக்கும் சரியான படிநிலை செயல்முறை பின்வருமாறு அமையும் :

  1. (1) ஒலி - ஒளி - பதிவு செய்தல் - புரொஜெக்டரில் ஓட்டுதல் - ஆர்க் விளக்கு - ஒளி - ஒலி
  2. (2) ஒளி - ஒலி - புரொஜெக்டரில் ஓட்டுதல் - ஒலி - ஒளி - ஆர்க் விளக்கு
  3. (3) புரொஜெக்டரில் ஓட்டுதல் - ஒலி - ஒளி - ஆர்க் விளக்கு - ஒளி - ஒலி
  4. (4) ஒளி - ஒலி - ஒலி - ஒளி - ஆர்க் விளக்கு - புரொஜெக்டர் ஓட்டுதல்
See answer and solution
Q136

ஓர் ஆசிரியர் 8 -ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பின்வரும் ஒப்படைப்பை தருகிறார். இது எந்த வகையான எழுதுதல் திறமாக விவரிக்கப்படலாம் ?
ஜோடிகளில், மூளை உள்நுழைதல், யோசனைகளை குறித்து வைத்தல் மற்றும் அவைகளை, இரண்டு ஆதரவாகவும், இரண்டு தலைப்புக்கு எதிராகவும் இருக்குமாறு செய்தல், “மாணவர்கள் அச்சிடப்பட்ட புத்தகங்களை இனியும் வைத்து இருக்க வேண்டாம்.”

  1. (1) சுயம்சார்ந்த எழுதுதல்
  2. (2) விரிவாக்கி எழுதுதல்
  3. (3) இங்கொன்றும் அங்கொன்றுமாக எழுதுதல்
  4. (4) விளக்கி எழுதுதல்
See answer and solution
Q137

மொழி கைவரப்பெறுதல் மற்றும் மொழிக்கற்றலின் ‘பிறக்கும்போதே மொழி உள்ளடங்கு எடுகோளின்’ பின்வரும் எந்த கூற்று உண்மையானது ?

  1. (1) பெற்றோர்கள், சகத்தோழர்கள் மற்றும் குழந்தைக்கு மற்றும் மொழி கைவரப் பெறுதலுக்கு பொறுப்பான சூழ்நிலைக்கு அருகில் இருப்போரின் முயற்சிகள் ஆகும்.
  2. (2) மொழி மனிதர்களுக்கு மட்டும் தனித்துவமானது மேலும் மனிதரால் மட்டுமே ஒரு மொழியை பேச இயலும்.
  3. (3) குழந்தைகளுக்கு வரமாக அளிக்கப்படும் மொழித்திறன் அவர்களை சிறந்த பயிற்சி மற்றும் டிரில்லிங் மூலம் மொழியை உருவாக்க செய்கிறது.
  4. (4) குழந்தைகளுக்கு வரமாக அளிக்கப்படும் மொழித்திறன் குழந்தைகளின் மொழி உருவாக்கத்திற்கும், கையகப்படுத்துவதற்கும் பொறுப்பானது.
See answer and solution
Q138

பின்வருவனவற்றுள் எது கீழிருந்து-மேலாக செல்லும் கவனித்தல் செயல்பாடு ஆகும்?

  1. (1) சொல்லி எழுதவைத்தல், இடைவெளி கவனிப்பு பயிற்சி (cloze), கொள்குறி வினாக்களின் உபயோகம், நேர்மறை மற்றும் எதிர்மறையான கூற்றுகளை அடையாளம் கண்டுபிடித்தல்
  2. (2) சுருக்கி எழுதுதல், ஒட்டுமொத்த செய்தியையும் உற்றுகவனித்தல், பின்னணி அறிவினை உபயோகித்தல்
  3. (3) ஒருவர் கவனித்தல் செய்கையில் எகிறிப்போன வார்த்தைகளை வாக்கியமாக திரும்ப அமைக்கவும்
  4. (4) கவிதை ஒப்புவித்தல், தயார்படுத்தாத பேச்சு, விவாதம் மற்றும் கலந்துரையாடல்கள்
See answer and solution
Q139

மொழிக் கற்றலில் ‘பாடங்களின் கலைத்திட்ட அடைவு’ என்பதன் பொருள் என்ன ?

  1. (1) மொழிப்பாடத்திட்டத்தை மேம்படுத்த உட்பொதிந்த செயல்பாடுகள் மற்றும் பயிற்சிகள்
  2. (2) கலைத்திட்டத்தை ஆசிரியர் பின்பற்றும் வண்ணம் கலைத்திட்டத்தை பாடங்களில் உட்பொதியச் செய்தல்
  3. (3) ஆசிரியரை வகுப்பறையில் கலைத்திட்டத்தை புரிந்துக்கொள்ளுமாறு செய்தல்
  4. (4) வகுப்பறை உபயோகத்திற்கான பல்வேறுபட்ட கலைத்திட்ட உத்திகளை பட்டியலிடுதல்
See answer and solution
Q140

அனைத்து மாணவர்களும் பள்ளியில் தாய்மொழி கல்வி தொடர்கின்றனர் மற்றும் பள்ளியில் அவர்கள் தொடர்ந்து இயங்குகையில் பற்பல மொழிகளை சேர்த்துக் கொண்டே செல்கின்றனர். கல்விக் கொள்கையில்-மொழி என்னும் கருத்தில் இது எவ்வாறு அறியப்படுகிறது ?

  1. (1) கல்வி கொள்கையில் கலாச்சார சார்புகொண்ட மொழி
  2. (2) பள்ளி கல்விக்கான மும்மொழி கொள்கை
  3. (3) மொழிக்கல்விக்கு தாய்மொழியே அடித்தளம்
  4. (4) தாய்மொழி அடிப்படையில் அமைந்த பன்மொழித்துவம்
See answer and solution
Q141

சந்தியா சில தகவல்களைப் பெற எந்திர கற்றல் மீதான ஒரு கட்டுரையை வாசிக்கிறார். அவரது வாசித்தல் முறை எவ்வாறு அறியப்படுகிறது ?

  1. (1) கண்ணை ஓடவிட்டு வாசிக்கும் முறை
  2. (2) சீராய்வு வாசித்தல் முறை
  3. (3) மேலோட்டமாக வாசித்தல்
  4. (4) நுணுக்கமாக வாசித்தல்
See answer and solution
Q142

பின்வரும் பயிற்சி (Task) எவ்வாறு அறியப்படுகிறது ?
ஓர் உரையின் (பனுவல்) பகுதி இரண்டு வித்தியாசமான துண்டுகளாக ஆக்கப்படுகின்றன அல்லது ஒவ்வொரு வாக்கியத்தின் அடுத்து வரும் வாக்கியமும் இணையர்களுக்கு வழங்கப்பட்டு ஒருவர் மற்றவருக்கு எழுதச்சொல்லி வாசிக்கிறார் மற்றும் அதை மற்றவர் எழுதுகிறார். இந்த செயல்முறை மற்ற நபரை உன்னிப்பாக கேட்க, எழுத மற்றும் அந்த ஒட்டுமொத்த உரையையும் ஒன்றாக வேலை செய்து இறுதி செய்யும் வண்ணம் திரும்பச்செய்யப்படுகிறது.

  1. (1) மீள்உருவாக்கம்
  2. (2) பத்தி-சொல்லி எழுதச்செய்தல் (dictation)
  3. (3) பரஸ்பர சொல்லி எழுதச்செய்தல்
  4. (4) இலக்கண-சொல்லி எழுதுதல்
See answer and solution
Q143

கற்றல் என்பது பொருள் உணர்தலுக்கான தேடல் ஆகும். ஆதலால், கற்போர் முனைப்புடன் பொருள் உணர்ந்து கொள்ளும் பிரச்சினைகளை ஆதாரமாகக் கொண்டு கற்றல் அவசியம் தொடர வேண்டும்.
எந்த கல்வி தத்துவம் மேற்கண்ட சிந்தனையைப் பரிந்துரைக்கிறது ?

  1. (1) நடத்தையியல்
  2. (2) கட்டுமான அமைப்பியல்
  3. (3) பல்திறன் இயல்
  4. (4) வடிவமைப்பியல்
See answer and solution
Q144

‘வடிவம் சார்ந்த மொழி உள்ளீடு’ என்பது எதனை குறிக்கிறது ?

  1. (1) மொழி கற்பதற்கான உள்ளீடுகளின் அர்த்தம்
  2. (2) சொல்வளம், உச்சரிப்பு மற்றும் இலக்கணத்தின் பயன்பாடு
  3. (3) தகவலை குறியாக வைக்கும் உள்ளீடுகள்
  4. (4) எழுத கற்கும் உள்ளீட்டின் திறம்
See answer and solution
Q145

பின்வருவனவற்றுள் எது ‘கற்போருக்கான மதிப்பிடுதல்’ ஆகும் ?

  1. (1) கற்பித்தல்-கற்றல் செயல்முறையின்போது மாணவர்களின் முன்னேற்றத்தை கண்காணிக்கவும், மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட மதிப்பிடுதல்கள்
  2. (2) மாணவரின் முன்னேற்றத்தை ஆண்டு இறுதியில் அறிந்து கொள்வதற்காக வடிவமைக்கப்பட்ட மற்றும் அவர்களை (உயர்வகுப்பு) முன்னேற்ற கருதப்படும் மதிப்பிடுதல்கள்
  3. (3) ஒரு குறிப்பிட்டக் கட்டத்தில் மாணவர்களின் சாதனையை அறிந்து கொள்ள அரசால் நடத்தப்படும் மதிப்பிடல்கள்
  4. (4) ஒவ்வொரு பருவ முடிவிலும் மாணவரின் முன்னேற்றத்தை கண்காணிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட மதிப்பிடல்கள்
See answer and solution
Q146

உற்பத்திதிறன் வளர்க்கும் சொல்வளம் என்பது என்ன ?

  1. (1) எழுதுவதிலும் மற்றும் பேசுவதிலும் நாம் உபயோகிக்கும் வார்த்தைகள்
  2. (2) கேட்கும்போது நாம் அடையாளப்படுத்தும் வார்த்தைகள்
  3. (3) நாம் அடையாளப்படுத்த தவறும் வார்த்தைகள்
  4. (4) கேட்கும்போது நாம் சில நேரங்களில் நினைவு கூரும் வார்த்தைகள்
See answer and solution
Q147

கவிதை கற்பித்தல் - கற்றல் பற்றிய பின்வரும் எந்த கூற்றினை நீங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் ?

  1. (1) கற்போரின் கற்பனையை உபயோகிக்கச் செய்வதற்கான கவிதைகள்
  2. (2) கவிதை என்பது மொழியோடு செயல்புரிவதற்கானது
  3. (3) கவிதை மகிழ்ச்சிக்கானது
  4. (4) கவிதை இலக்கணம் கற்பதற்கானது
See answer and solution
Q148

ஓர் ஆசிரியர் பாடம் வழங்கும்போது மற்றும் மாணவருடன் கலந்துரையாடும் போது, பலதரப்பட்ட பாட உள்ளடக்கப் பகுதிகளில் மொழியை உபயோகிக்கிறார். இந்த வகையான மொழித்திறன் எவ்வாறு அறியப்படுகிறது ?

  1. (1) அடிப்படை பரஸ்பர தகவல்தொடர்பு திறன்கள்
  2. (2) உண்மை-வாழ்க்கை நோக்கங்களுக்கான மொழி
  3. (3) மொழி நடைமுறை
  4. (4) கருத்துணர் கல்விசார் மொழித் தேர்ச்சி
See answer and solution
Q149

எந்த வகையான இலக்கண அறிவு பற்றி பின்வரும் கூற்று பொருள் உணர்த்துகிறது ?
வடிவம் பற்றிய (இலக்கண) அறிவு, அதனை விளக்குதல் மற்றும் வரையறுக்கப்பட்ட பயிற்சியில் அவற்றை பயன்படுத்துதல்

  1. (1) திறம் (Competence)
  2. (2) மீஉயர்கருத்துணர் அறிவு (Metacognitive knowledge)
  3. (3) செயல்முறை அறிவு (Procedural knowledge)
  4. (4) செய்திசார் அறிவு (Declarative knowledge)
See answer and solution
Q150

பின்வரும் பயிற்சி எதனை குறிக்கிறது ?
மாணவர்களுக்கு ஒரு ஹோட்டலின் உணவுப்பட்டியல் தரப்படுகின்றது. அவர்கள் ரூபாய் 1,800/-க்கு நான்கு பேருக்கு உணவு ஆர்டர் செய்யவேண்டும். ஒருவர் சைவம் சாப்பிடுபவர், மற்றவர்கள் காளான் ஒத்துக் கொள்ளாதவர்கள். திரும்பி செல்வதற்கு அவர்கள் 70 ரூபாய் வைத்திருக்க வேண்டும். மாணவர்கள் என்ன ஆர்டர் செய்வார்கள், அவர்களின் விருப்பங்கள், மற்றும் விடுதிக்கு திரும்பி செல்வதற்கான பணம் வைத்திருத்தலைப் பற்றி பேசுகிறார்கள்.

  1. (1) உயர்தர சிந்திக்கும் திறன்கள்
  2. (2) ஆழ்ந்துபடி - ஈடுபடுத்து - சிந்தி - உபயோகி (மொழி)
  3. (3) கருத்துணர் உத்திகள்
  4. (4) வழங்கு - பயிற்சிசெய் - உருவாக்கு (மொழி)
See answer and solution