நீங்கள் ‘சலனப்படங்கள்’ எனும் தொடரை ஆங்கிலத்தில் மேலும் மொழிபெயர்க்க நேர்ந்தால், பின்வரும் எதனைத் தமிழில் மிக சரியான இணையாகக் கொள்வீர்கள் ?
- (1) Motion pictures
- (2) Acting pictures
- (3) Oscillating pictures
- (4) Still pictures
பத்தியைப் படித்து அதனைத் தொடர்ந்து வரும் வினாக்களுக்குச் சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து எழுதவும் (கே.எண். 129 - 135)
சினிமா முதன் முதலில் மேல்நாட்டில்தான் உதயமாயிற்று என்பதில் சந்தேகமே இல்லை. சினிமா உற்பத்தியான அந்நாளில் முதல் முதலாக சலனப்படங்கள்தான் (Silent Pictures) கண்டுபிடிக்கப்பட்டது. கால வெள்ளத்தில், விஞ்ஞான வளர்ச்சியால் ஒலியை (Sound) ஒளியாக்கி (Light) அவ்வொளியைப் படங்களின் (Film) வலது புற ஓரத்தில் பதிவு செய்து அப்படம் ப்ரொஜெக்டரின் மூலம் ஓடும் போது ஆர்க் (Arc) என்ற பிரகாசம் பொருந்திய விளக்கின் வாயிலாகப் பதிவு செய்யப்பட்ட ஒளியின் நின்று ஒளியைத் தொனிக்கச் செய்து பேசும் படங்களாகத் தயாரித்தனர். இதுதான் இன்றைய பேசும் படம். சினிமா தோன்றாத அக்காலத்தில் நம் நாட்டில் சினிமாவைப் பூலோகத்தின் எட்டாவது அதிசயமாகக் கருதி இருந்தார்கள். வெகு நாளைக்குப் பிறகு மெதுவாக இந்தியாவில் (முதன் முதல் வட இந்தியாவில்) சினிமா படங்களைத் தயாரிக்கலானார்கள். அவைகளும் சலனப் படங்களே. நாளடைவில் சலனப் படம் போய் பேசும் படமாகவும் தயாரித்தனர். அதுவும் நம் தமிழ்நாட்டில் அல்ல என்பதை நினைவுறுத்துகிறேன்.
நம் இந்தியாவில் முதன் முதல் சினிமாவைத் தயாரித்தவர் நாசிக் ஜில்லாவை சேர்ந்த ஸ்ரீ தந்தி ராஜ கோவிந்த பால்கே என்பவர்தான். அவர் பல நாட்களாக செய்த அனுபவ ஆராய்ச்சியின் பயனாக 1912 -ம் வருஷம் ஹரிச்சந்திரா என்னும் பேசாப் படத்தைத் தயாரித்தார்; பிறகு தொடர்ந்தார்போல் பல சலனப்படங்களைத் தயாரிக்கலானார். இதைக் கண்டு ஆங்கிலேயர்களே மகிழ்ந்தனர். அவரை இந்திய சினிமா கலையின் பிதா எனக் கொள்ளலாம். வருஷங்கள் பல ஓடி மறைந்தன. 1927 ஆம் வருஷத்தில் பேசும் படம் கண்டுபிடிக்கப்பட்டது; அதன் பிறகு மூன்று வருடங்கள் கழித்துதான் அதாவது 1930 ஆம் வருஷத்தில் நம் வட இந்தியாவிலும் பேசும் படம் தயாரிக்கப்பெற்றன.
முதன்முதல் இந்தியாவிலேயே பேசும் படம் தயாரித்தவர் கான் பகதூர் ஆர்தேஸ்-இராணி என்னும் வடநாட்டார்தான். அதுவரை பம்பாயிலேயே சலனப் படங்களைத் தயாரித்துப் பெரும் புகழ் அடைந்திருந்த அவர் திடீரென்று ஒரு பேசும் படத்தைத் தயாரிக்க வேண்டும் என்று எண்ணினார். அதற்கேற்ற சாதனங்களும் அவருக்கு கிடைத்திருந்ததால் 1930 -ம் வருஷம் ‘ஆலமரா’ என்ற பெயருடன் ஒரு பேசும் படத்தைத் துணிகரமாகத் தயாரித்தார் ஹிந்தியில்.
நீங்கள் ‘சலனப்படங்கள்’ எனும் தொடரை ஆங்கிலத்தில் மேலும் மொழிபெயர்க்க நேர்ந்தால், பின்வரும் எதனைத் தமிழில் மிக சரியான இணையாகக் கொள்வீர்கள் ?
CBSE answer: (1)
விடை: (1) Motion pictures
கவனம்: பத்தியில் அடைப்புக்குள் 'Silent Pictures' என்று இருந்தாலும் அது விடைகளில் இல்லை. (4) 'Still pictures' அசையாத படங்கள், எதிர்ப்பொருள். (3) 'Oscillating' என்பது ஊசலாடுதல், பொருந்தாது.