Q101
‘கோதிலா’ என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைப்பது :
- (1) கோதில் + இலா
- (2) கோது + இலா
- (3) கோதில் + இல்லா
- (4) கோது + இல்லாத
பாடலைப் படித்து அதனைத் தொடர்ந்து வரும் வினாக்களுக்குச் சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து எழுதவும் (கே.எண். 100 - 105)
வையம் புகழ்ஞானி வள்ளுவன் மக்களெலாம்
உய்யும் படிமுப்பால் ஓதினான் - ஐயமின்றி
இம்மை மறுமை யிரண்டுக்கும் நேர்வழியைச்
செம்மையிற் கண்ட தெளிந்து.
ஜாதி மதபேதம் சற்றேனு மின்றி நடு
நீதி நிலைகண்ட நீள்புகழோன் - கோதிலாச்
செந்தமிழ்ச் செல்வன் திருவள் ளுவன்பாதம்
சிந்தையிற் கொள்வோம் தினம்.
புத்தகம் நூறு புரட்டிக் களைப்புற்றச்
சித்தம் கலங்கித் திகைப்பதேன் ? வித்தகன்
தெய்வப் புலவன் திருவள் ளுவன்சொன்ன
பொய்யில் மொழியிருக்கும் போது.
‘கோதிலா’ என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைப்பது :
CBSE answer: (2)
விடை: (2) கோது + இலா
கவனம்: (4) ‘இல்லாத’ என்று பிரித்தால் புணர்ந்த சொல் ‘கோதில்லாத’ ஆகும்; பாடல் சொல்லுடன் பொருந்தாது.