By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 8 Feb 2026 Paper 2 Tamil, Question 102

Topic: Grammar

Passage

பாடலைப் படித்து அதனைத் தொடர்ந்து வரும் வினாக்களுக்குச் சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து எழுதவும் (கே.எண். 100 - 105)
வையம் புகழ்ஞானி வள்ளுவன் மக்களெலாம்
உய்யும் படிமுப்பால் ஓதினான் - ஐயமின்றி
இம்மை மறுமை யிரண்டுக்கும் நேர்வழியைச்
செம்மையிற் கண்ட தெளிந்து.
ஜாதி மதபேதம் சற்றேனு மின்றி நடு
நீதி நிலைகண்ட நீள்புகழோன் - கோதிலாச்
செந்தமிழ்ச் செல்வன் திருவள் ளுவன்பாதம்
சிந்தையிற் கொள்வோம் தினம்.
புத்தகம் நூறு புரட்டிக் களைப்புற்றச்
சித்தம் கலங்கித் திகைப்பதேன் ? வித்தகன்
தெய்வப் புலவன் திருவள் ளுவன்சொன்ன
பொய்யில் மொழியிருக்கும் போது.

Q102

ஓரெதுகைச் சொற்களைக் கண்டறிக.

  1. (1) வையம், வள்ளுவன்
  2. (2) செந்தமிழ், சிந்தைCorrect answer
  3. (3) இம்மை, மறுமை
  4. (4) புத்தகம், புரட்டி

Solution.

CBSE answer: (2)

விடை: (2) செந்தமிழ், சிந்தை

  1. அடிகளில் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை.
  2. செ-ந்-தமிழ், சி-ந்-தை: இரண்டிலும் இரண்டாம் எழுத்து ‘ந்’; எனவே எதுகை.
  3. வையம், வள்ளுவன்; புத்தகம், புரட்டி: முதல் எழுத்து ஒன்றுவதால் இவை மோனை.
  4. இம்மை, மறுமை: இரண்டாம் எழுத்து ம், று என வேறுபடுகிறது.