‘நடு நீதி நிலைகண்ட நீள் புகழோன்’ எனக் கவிஞர் புகழ்வது யாரை ?
- (1) ஞானி
- (2) செந்தமிழ்ச் செல்வன்
- (3) திருவள்ளுவர்
- (4) வித்தகன்
பாடலைப் படித்து அதனைத் தொடர்ந்து வரும் வினாக்களுக்குச் சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து எழுதவும் (கே.எண். 100 - 105)
வையம் புகழ்ஞானி வள்ளுவன் மக்களெலாம்
உய்யும் படிமுப்பால் ஓதினான் - ஐயமின்றி
இம்மை மறுமை யிரண்டுக்கும் நேர்வழியைச்
செம்மையிற் கண்ட தெளிந்து.
ஜாதி மதபேதம் சற்றேனு மின்றி நடு
நீதி நிலைகண்ட நீள்புகழோன் - கோதிலாச்
செந்தமிழ்ச் செல்வன் திருவள் ளுவன்பாதம்
சிந்தையிற் கொள்வோம் தினம்.
புத்தகம் நூறு புரட்டிக் களைப்புற்றச்
சித்தம் கலங்கித் திகைப்பதேன் ? வித்தகன்
தெய்வப் புலவன் திருவள் ளுவன்சொன்ன
பொய்யில் மொழியிருக்கும் போது.
‘நடு நீதி நிலைகண்ட நீள் புகழோன்’ எனக் கவிஞர் புகழ்வது யாரை ?
CBSE answer: (3)
விடை: (3) திருவள்ளுவர்
கவனம்: ‘செந்தமிழ்ச் செல்வன்’, ‘ஞானி’, ‘வித்தகன்’ ஆகியவை வள்ளுவருக்குக் கவிஞர் சூட்டிய அடைமொழிகள்; புகழப்படும் நபர் திருவள்ளுவரே.