‘நரம்பின் மறை’ என்னும் சொற்றொடரில் ‘நரம்பு’ என்னும் சொல் ______ நரம்பை குறிக்கிறது.
- (1) விலங்கின்
- (2) இசைக்கருவியின்
- (3) மனிதரின்
- (4) பூவிதழின்
பத்தியைப் படித்து அதனைத் தொடர்ந்து வரும் வினாக்களுக்குச் சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து எழுதவும் (கே.எண். 91 - 99)
இசைத்தமிழின் மாண்பினை அறிந்த பழந்தமிழர் இயல், இசை, நாடகம் என்னும் மூன்று கூறுகளையும் கொண்ட முத்தமிழ் இசையை நடுவில் வைத்துப் போற்றி மகிழ்ந்தனர். மிகத் தொன்மையான தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம், இசை நூலை “நரம்பின் மறை” என்று குறிப்பிட்டுள்ளது. இந்நூலுள் இசை பற்றிய பல குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. சங்க நூல்களாகிய பரிபாடல், பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை முதலிய நூல்களிலும், கல்லாடம் போன்ற நூல்களிலும், இசைத்தமிழ் பற்றிய பல செய்திகள் உள்ளன. முத்தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரம் ஓர் இசைக் கருவூலமாகவே விளங்குகிறது. பிற்காலத்தில் தோன்றிய பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணம் போன்றவற்றிலும் இசை பற்றிய குறிப்புகள் உள்ளன.
பழங்காலத்தில் இசைத்தமிழ் இலக்கண நுல்களாக விளங்கிய பெருங்குருகு, பெருநாரை, இந்திர காளியம், இசை நுணுக்கம் போன்ற நூல்களெல்லாம் அழிந்து போயின. சிலப்பதிகாரத்தில் ஓர் இயக்கில் (ஸ்தாயி) உள்ள அலகுகள் (சுருதிகள்), யாழ், குழல் தண்ணுமை போன்ற இசைக்கருவிகள், யாழாசிரியன், இசையாசிரியன் குழலோன் தண்ணுமையோன் ஆகியோரின் அமைதிகள் (தகைமைகள்) அக்காலத்தில் வழக்கில் இருந்த பண்கள் முதலிய இசைத்தமிழ் பற்றிய அறிய உண்மைகள் காணக்கிடைக்கின்றன. சங்க காலத்திலும் அதற்கு பின்னரும் தமிழ் இலக்கியமும் இசைக்கூத்து போன்ற அறுசுவைகளும் அரசர்களின் ஆதரவு பெற்று செழித்தோங்கின. கி.பி மூன்றாம் நூற்றாண்டில் இருந்து ஆறாம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் தமிழகத்தில் களப்பிரரின் ஆட்சி ஏற்பட்டபோது, அருங்கலைகளான இசையும் கூத்தும் ஆதரவற்றுப் போயின என்று ஆய்வாளர் கூறுகின்றனர். களப்பிரர் பாலி, பிராகிருதம் ஆகிய மொழிகளை அரசு மொழிகளாகக் கொண்டனர். அதன் விளைவாகத் தமிழ் வளர்ச்சி அடையவோ தமிழ்ப்புலவோர் சிறப்புடன் வாழவோ இயலாமல் போய்விட்டது. இதன் காரணமாகவே வரலாற்று ஆசிரியர்கள் களப்பிரரின் ஆட்சி காலத்தை இருண்ட காலம் என்று குறிப்பிட்டனர்.
‘நரம்பின் மறை’ என்னும் சொற்றொடரில் ‘நரம்பு’ என்னும் சொல் ______ நரம்பை குறிக்கிறது.
CBSE answer: (2)
விடை: (2) இசைக்கருவியின்
கவனம்: ‘நரம்பு’ என்றவுடன் மனித உடல் நரம்பு என எண்ணக் கூடாது; இங்குப் பேசப்படும் சூழல் இசை.