‘குளோரோஃபில்’ என்பதன் தமிழ்ச்சொல் __________ ஆகும்.
- (1) மகரந்தம்
- (2) அல்லி
- (3) குளோரோஃபார்ம்
- (4) பச்சையம்
பத்தியைப் படித்து அதனைத் தொடர்ந்து வரும் வினாக்களுக்குச் சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து எழுதவும் (கே.எண். 121 - 128)
மோனாட்ரோபா யூனிபுளோரா (Monotropa uniflora) என்னும் தாவரத்தைப் பேய்ச்செடி, பேய்க் குழாய் செடி அல்லது இந்திய குழாய்த் தாவரம் என்று அழைக்கின்றனர். இது இமயமலை, கிழக்கு ஆசியா, அலாஸ்கா, பனாமா, கொலம்பியா, வட அமெரிக்கா, வட தென் அமெரிக்கா போன்றப் பகுதிகளில் காணப்படுகிறது. ஒளிச்சேர்க்கை இல்லாமல் வாழக்கூடிய பூக்கும் தாவரங்களில் இதுவும் ஒன்றாகும். மேலும் இது எந்த வெளிச்சமும் இல்லாமல், இருண்ட பகுதியிலும் வாழக்கூடியது.
இந்தத் தாவரம் 5 முதல் 30 செ.மீ. உயரம் வரை வளரும். தண்டில் 5 முதல் 10 மி.மீ. நீளமுள்ள மிகவும் சிறிய இலைகள் உள்ளன. இதற்கு காம்புகள் கிடையாது. இவை செதில்கள் போன்றவை. இதன் கட்டமைப்பு மெலிந்தும், சிறியதாகவும், ஒளி கசியும் தன்மை கொண்டதாகவும் உள்ளது.
இந்தத் தாவரம் வெண்மையானது. சில சமயம் இளம் சிவப்பு நிறத்திலும் காணப்படும். இத்தாவரத்தில் வெள்ளை மலர்கள் தோன்றுகின்றன. 3 முதல் 8 இதழ்கள் உள்ளன. இதில் ஒளி ஊடுருவும். மேலும் இதில் 10 முதல் 12 மகரந்தங்கள் இருக்கின்றன. இலையுதிர் காலத்தில், ஆரம்பத்தில் பெரும்பாலும் மழைக்கு சில நாட்களுக்குப் பிறகு பூக்கும். தேனீக்கள், ஈக்கள் மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது.
இத்தாவரத்தில் குளோரோபில் கிடையாது சூரிய ஒளியில் இருந்து ஆற்றலை உருவாக்க முடியாது. இது சூரிய ஒளியை சார்ந்து வளருவது கிடையாது. அடர்ந்த காடுகளின் அடிவாரத்தில் மிகவும் இருண்ட சூழலில் வளர்கிறது.
இது குளோரோபில் உற்பத்தி செய்யும் தாவரங்களில் இருந்து பூஞ்சைகளின் நிலத்தடி மைக்கோரைசல் நெட்வொர்க்குகள் வழியாகத் தனக்கு வேண்டிய ஆற்றலை பெறுகிறது. ஆக இது ஒரு ஒட்டுண்ணி தாவரமாகும். இது பெரும்பாலும் பீச் மற்றும் ஹெம்லாக் மரங்கள் நிறைந்த பகுதிகளில் மட்டுமே வளர்கிறது. பூஞ்சைகள் இல்லை என்றால் இதனால் உயிர் வாழ முடியாது.
‘குளோரோஃபில்’ என்பதன் தமிழ்ச்சொல் __________ ஆகும்.
CBSE answer: (4)
விடை: (4) பச்சையம்
கவனம்: 'குளோரோஃபார்ம்' ஒலியில் ஒத்தாலும் அது ஒரு வேதிப்பொருள், நிறமி அல்ல.