By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 8 Feb 2026 Paper 2 Tamil, Question 105

Topic: Poem comprehension

Passage

பாடலைப் படித்து அதனைத் தொடர்ந்து வரும் வினாக்களுக்குச் சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து எழுதவும் (கே.எண். 100 - 105)
வையம் புகழ்ஞானி வள்ளுவன் மக்களெலாம்
உய்யும் படிமுப்பால் ஓதினான் - ஐயமின்றி
இம்மை மறுமை யிரண்டுக்கும் நேர்வழியைச்
செம்மையிற் கண்ட தெளிந்து.
ஜாதி மதபேதம் சற்றேனு மின்றி நடு
நீதி நிலைகண்ட நீள்புகழோன் - கோதிலாச்
செந்தமிழ்ச் செல்வன் திருவள் ளுவன்பாதம்
சிந்தையிற் கொள்வோம் தினம்.
புத்தகம் நூறு புரட்டிக் களைப்புற்றச்
சித்தம் கலங்கித் திகைப்பதேன் ? வித்தகன்
தெய்வப் புலவன் திருவள் ளுவன்சொன்ன
பொய்யில் மொழியிருக்கும் போது.

Q105

அனைவரும் தினமும் சிந்தையில் கொள்வோம் எனக் கவிஞர் கூறுவது எதனை ?

  1. (1) வள்ளுவன் பாதத்தைCorrect answer
  2. (2) செந்தமிழை
  3. (3) நடு நீதி நிலையை
  4. (4) நீள் புகழை

Solution.

CBSE answer: (1)

விடை: (1) வள்ளுவன் பாதத்தை

  1. ‘செந்தமிழ்ச் செல்வன் திருவள்ளுவன் பாதம் சிந்தையிற் கொள்வோம் தினம்’ என்று பாடல் கூறுகிறது.
  2. சிந்தையில் கொள்வது வள்ளுவரின் திருவடிகளை.

கவனம்: செந்தமிழ், நடுநீதி, நீள்புகழ் ஆகியவை வள்ளுவரைப் புகழும் சொற்கள்; அவற்றைச் சிந்தையில் கொள்வதாகப் பாடல் சொல்லவில்லை.