By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 14 Dec 2024 Paper 2 Tamil Language Question Paper with Answer Key

You are reading the question paper with answers. This is not the timed test: no clock is running and nothing is being scored.

Go to the timed test →

Passage

பத்தியைப் படித்து அதனைத் தொடர்ந்து வரும் வினாக்களுக்குச் சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து எழுதவும் (கே.எண். 91 - 99)
பழைய சாசன எழுத்துக்களின் ஆராய்ச்சியும், பழம் பொருள்களின் ஆராய்ச்சியும் அண்மைக் காலத்திலே மேல் நாடுகளில் புத்தம் புதிதாக ஏற்பட்ட சாத்திரக் கலைகளாகும். இவை பழைய எழுத்துச் சாசனங்களை ஆராய்வதும், பழைய கலை நாகரிகம் முதலியவைகளை ஆராய்வதும் ஆகும். இவ்வாராய்ச்சிகளினாலே பன்னூற்றாண்டுகளுக்கு முன்னமே மறைந்துபோன பல செய்திகளை அறியலாம். நமது நாட்டை அரசாண்ட ஆங்கிலேயர் இந்த ஆராய்ச்சிக் கலைகளை நமது நாட்டிலே சென்ற 19 -ஆம் நூற்றாண்டிலே அமைத்தார்கள். இந்தக் கலைத் துறைகளை ஆராயும் இலாகா ஏற்பட்ட பிறகு, நமது இந்திய நாட்டிலே பல நூற்றாண்டுகளாக மறைந்து கிடந்த பல சரித்திர உண்மைகள் புத்தம் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த இலாகாவினால் தமிழ் நாட்டுக்குப் பெரும் பயன் ஏற்பட்டிருக்கிறது. இந்த இலாகாவினால் ஏற்படும் நன்மைகளைப் பொது ஜனங்கள் இன்னும் நன்றாகத் தெரிந்து கொள்ளவில்லை. இவ்வாறு ஓர் இலாகா இருக்கிறது என்பதையே பலர் அறியாமலிருக்கின்றனர். மறைந்துபோன பழைய தமிழரின் கலை, நாகரிகம், சரித்திரம், பண்பாடு முதலியவற்றை அறிந்து கொள்ள இந்த ஆராய்ச்சித் துறை பேருதவியாக இருப்பதுடன் தமிழ் இலக்கியம் சம்பந்தமாகவும் பல செய்திகளைத் தெரிந்து கொள்ளப் பேருதவியாக இருக்கின்றது.
ஆங்கிலேயக் கிழக்கு இந்தியக் கம்பெனியார் இந்திய தேசத்துக்கு வந்து வாணிகம் செய்து கொண்டே சிறிது சிறிதாக நாட்டைக் கைப்பற்றி ஆட்சி செய்யத் தலைப்பட்டனர். ஆங்கில அரசாங்க ஊழியர்களாக இங்கிலாந்து தேசத்திலிருந்து பலர் இங்கு வந்தார்கள். அவர்களில் சர் வில்லியம் ஜோன்ஸ் என்பவரும் ஒருவர். இவர் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமனம் பெற்றுக் கி.பி. 1783 -ஆம் ஆண்டு கல்கத்தாவுக்கு வந்தார்.
இவர் வந்து அலுவல் செய்யத் தொடங்கியபின், கிழக்கிந்திய நாடுகளின் கலைகளையும், இலக்கியங்களையும் ஆராய்ந்தறிய ஒரு நிலையத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கருதினார். அதன்படியே 1784 -ஆம் ஆண்டு ஜனவரித் திங்களில் கல்கத்தா நகரத்தில் ஒரு கூட்டம் கூட்டப்பட்டு ஆசிய சங்கம் என்னும் பெயருடைய ஒரு சங்கம் ஏற்படுத்தப்பட்டது. இந்தச் சங்கத்தின் ஆதரவில் “ஆசிய நாட்டு ஆராய்ச்சிகள்” என்னும் திங்கள் இதழ் ஆங்கிலத்தில் வெளியாயிற்று. பழைய கட்டடங்கள், பழைய சிற்பக்கலைகள், பழைய சாசனங்கள், பழைய நாணயங்கள், இந்திய மொழிகளின் இலக்கியங்கள் முதலியவற்றின் ஆராய்ச்சிக் கட்டுரைகள் இந்தத் திங்கள் இதழில் எழுதப்பட்டன.

Q91

______ என்னும் பெயருடைய ஒரு சங்கம் ______ நடந்த கூட்டம் ஒன்றில் ______.

  1. (1) ஆசிய சங்கம், கல்கத்தா நகரில், வெளியிடப்பட்டது
  2. (2) ஆசிய நாட்டு ஆராய்ச்சிகள், கல்கத்தா நகரில், ஏற்படுத்தப்பட்டது
  3. (3) ஆசிய சங்கம், கல்கத்தா நகரில், ஏற்படுத்தப்பட்டது
  4. (4) ஆசிய சங்கம், இங்கிலாந்து தேசத்தில், ஏற்படுத்தப்பட்டது
See answer and solution
Q92

______ முன்னர் மறைந்து போன ______ அறிய சாசன, பழம் பொருள் ______ உதவுகிறது.

  1. (1) சில நூற்றாண்டுகளுக்கு, கட்டடங்களை, ஆராய்ச்சிக் கலை
  2. (2) பன்னூற்றாண்டுகளுக்கு, நகரங்களை, ஆராய்ச்சிக் கலை
  3. (3) பன்னூற்றாண்டுகளுக்கு, பல செய்திகளை ஆராய்ச்சிக் கலை
  4. (4) ஆராய்ச்சிகளுக்கு, பல செய்திகளை, ஆராய்ச்சி இலாகா
See answer and solution
Q93

பழைய எழுத்துச் சாசனங்கள், கலை, நாகரிகம் முதலியவற்றை ஆராயும் கலையால் தமிழருக்கு அறியக் கிடைத்தவை :

  1. (1) பழந்தமிழர் கலை, நாகரிகம், சரித்திரம், பண்பாடு
  2. (2) பழந்தமிழர் சாசனம், கல்வெட்டு, இலக்கியம், சரித்திர உண்மைகள்
  3. (3) கலை, பண்பாடு, நாணயம், சிற்பம், மொழிகள்
  4. (4) சரித்திர உண்மைகள், மறைந்துபோன சாசனங்கள்
See answer and solution
Q94

ஆசிய நாட்டு ஆராய்ச்சிகள் என்னும் திங்கள் இதழ் பழமையான ______, ______, ______, ______ பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டது.

  1. (1) தமிழர் கலை, நாகரிகம், எழுத்துச் சாசனங்கள், இந்திய மொழிகள்
  2. (2) கட்டடங்கள், சிற்பக் கலைகள், சாசனங்கள், நாணயங்கள்
  3. (3) சரித்திரங்கள், பண்பாடுகள், நாணயங்கள், சாசனங்கள்
  4. (4) கட்டடங்கள், நாகரிகம், இலக்கியம், எழுத்துகள்
See answer and solution
Q95

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக ______ கல்கத்தாவுக்கு வந்தார், கிழக்கிந்திய நாடுகளின் ______ இலக்கியங்களையும் ஆராய்ந்தறிய ______ ஏற்படுத்தக் கருதினார்.

  1. (1) சர் வில்லியம் ஜோன்ஸ், கலைகளையும், ஓர் ஆட்சி முறையை
  2. (2) சர் வில்லியம் ஜோன்ஸ், கலைகளையும், ஒரு நிலையத்தை
  3. (3) கிழக்கிந்தியக் கம்பெனியார், கலைகளையும், ஒரு நிலையத்தை
  4. (4) சர் வில்லியம் ஜோன்ஸ், ஆட்சிகளையும், ஒரு நிலையத்தை
See answer and solution
Q96

______ மறைந்து கிடந்த ______ உண்மைகள் ______ கண்டுபிடிக்கப்பட்டன.

  1. (1) பழம் பொருள்களில், சரித்திர, புத்தம் புதிதாகக்
  2. (2) தமிழ்நாட்டில், பல சரித்திர, மீண்டும்
  3. (3) பல நூற்றாண்டுகளாக, சாசன எழுத்தின், புதிதாகக்
  4. (4) பல நூற்றாண்டுகளாக, பல சரித்திர, புத்தம் புதிதாகக்
See answer and solution
Q97

______ செய்து கொண்டே ______ ஆட்சி செய்யத் தலைப்பட்ட கிழக்கு இந்திய கம்பெனியின் ______ இங்கிலாந்து தேசத்திலிருந்து இங்கு வந்தார்கள்.

  1. (1) வாணிகம், நாட்டைக் கைப்பற்றி, ஆட்சியாளர்கள் சிலர்
  2. (2) வாணிகம், நாட்டுக்கு வெளியே, ஊழியர்கள்
  3. (3) ஆராய்ச்சிகள், நாட்டின் மீது, ஊழியர்கள்
  4. (4) வாணிகம், நாட்டைக் கைப்பற்றி, ஊழியர்கள் பலர்
See answer and solution
Q98

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் அமைத்தது :

  1. (1) சரித்திர உண்மைகளை புத்தம் புதிதாகக் கண்டறியும் இலாகா
  2. (2) பழம் பொருள் ஆராய்ச்சிக் கூடம்
  3. (3) பழைய சாசனம் மற்றும் பழம் பொருள்கள் ஆராய்வதற்கான இலாகா
  4. (4) பழைய சாசனங்களை பொது ஜனங்களுக்குக் கற்பிக்கும் இலாகா
See answer and solution
Q99

மேல் நாடுகளில் புத்தம் புதிதாக ஏற்பட்ட சாத்திரக் கலைகள் :

  1. (1) மறைந்துபோன செய்திகளைக் கண்டறிந்து சாசனங்களாக்கும் கலைகள்
  2. (2) சாசன எழுத்துக்களின் பழமையையும், பழம் கலைப்பொருள்களின் தன்மையையும் ஆராயும் கலைகள்
  3. (3) பழமையான சாசனங்களை உருவாக்கி ஆராய்ச்சிக்கு உட்படுத்தும் கலைகள்
  4. (4) பழைய சாசன எழுத்துகள் மற்றும் பழம் பொருள்கள் பற்றிய ஆராய்ச்சிக் கலைகள்
See answer and solution

Passage

பாடலைப் படித்து அதனைத் தொடர்ந்து வரும் வினாக்களுக்குச் சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து எழுதவும் (கே.எண். 100 - 105)
காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன் !
கடற்பரப்பில், ஒளிப்புனலில் கண்டேன் ! அந்தச்
சோலையிலே, மலர்களிலே, தளிர்கள் தம்மில்,
தொட்ட இடம் எலாம்கண்ணில் தட்டுப் பட்டாள் !
மாலையிலே மேற்றிசையில் இலகு கின்ற
மாணிக்கச் சுடரிலவள் இருந்தாள் ! ஆலஞ்
சாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டந்
தனில்அந்த ‘அழகெ’ன்பாள் கவிதை தந்தாள்.

சிறுகுழந்தை விழியினிலே ஒளியாய் நின்றாள்;
திருவிளக்கில் சிரிக்கின்றாள்; நாரெ டுத்து
நறுமலரைத் தொடுப்பாளின் விரல்வ ளைவில்
நாடகத்தைச் செய்கின்றாள்; அடடே செந்தோள்
புறத்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும்
புது நடையில் பூரித்தாள்; விளைந்த நன்செய்
நிறத்தினிலே என்விழியை நிறுத்தினாள்; என்
நெஞ்சத்தில் குடியேறி மகிழ்ச்சி செய்தாள்.

Q100

______ கலப்பையுடன் செல்லும் ______ புது நடையில் அழகின் ______.

  1. (1) விளைந்த, உழவனின், பூரிப்பு
  2. (2) புறத்தில், உழவனின், பூரிப்பு
  3. (3) தோளில், உழவனின், குடியேற்றம்
  4. (4) தோளில், உழவனின், பூரிப்பு
See answer and solution
Q101

எழும் கதிரவன் ______, கடற்பரப்பில் தோன்றுவது ______.

  1. (1) ஒளிப்புனல், மாணிக்கச் சுடர்
  2. (2) சுடர் ஒளி, இளம்பரிதி
  3. (3) இளம்பரிதி, ஒளிப்புனல்
  4. (4) இளம்பரிதி, மாணிக்கச் சுடர்
See answer and solution
Q102

______ நிறத்தில் ______ நிறுத்தியவள் ______ குடியேறி ______ செய்கிறாள்.

  1. (1) நன்செய், அழகை, விழியில், மகிழ்ச்சி
  2. (2) நன்செய், விழியை, நெஞ்சத்தில், மகிழ்ச்சி
  3. (3) விளைந்த, விழியை, நெஞ்சத்தில், மகிழ்ச்சி
  4. (4) நன்செய், நெஞ்சத்தை, விழியில், மகிழ்ச்சி
See answer and solution
Q103

அழகின் நாடகம் ______ தொடுப்பவனின் ______ நடக்கிறது.

  1. (1) விரல்களால் நாரைத், வளைவில்
  2. (2) மலரை நாரெடுத்துத், புது நடையில்
  3. (3) நறுமலரை நாரெடுத்துத், விரல் வளைவில்
  4. (4) நறுமலரைத், விரல்களில்
See answer and solution
Q104

தொட்ட இடம் இவை எனவும், கண்ணில் அழகு தட்டுப்படும் இடம் எனவும் சொல்லப்படுவன :

  1. (1) மலர்கள், தளிர்கள், மாணிக்கம்
  2. (2) சோலை, மலர்கள், தளிர்கள்
  3. (3) சாலை, கிளை, கிளிக் கூட்டம்
  4. (4) சோலை, திருவிளக்கு, மாலை
See answer and solution
Q105

ஒளியாய் ______ நிற்கிறாள், ______ சிரிக்கிறாள்.

  1. (1) திருவிளக்கில், குழந்தையின் விழியில்
  2. (2) விரல் வளைவில், திருவிளக்கில்
  3. (3) சிறு குழந்தையின் விழியில், நன்செய் நிறத்தில்
  4. (4) சிறு குழந்தையின் விழியில், திருவிளக்கில்
See answer and solution
Q106

துல்லியமான பாடநூல் என்பது :

  1. (1) குழந்தைகள் வீட்டிலிருந்து எடுத்துவரும் நூல்
  2. (2) ஆசிரியர்களால் தன் மாணவர்களுக்காக எழுதப்பட்ட நூல்
  3. (3) வல்லுநர்களால் எழுதப்பட்ட நூல்
  4. (4) எதார்த்த வாழ்வின் பொருளைக் கொண்டு எழுதிய நூல்
See answer and solution
Q107

அபர்ணா என்ற ஐந்தாம் வகுப்பு மாணவி, கேட்டல் என்பது ஒவ்வொரு ஒலி, வார்த்தைகள் பிறகு வாக்கியங்கள் பேச்சின் பொருளைப் பெறுகிறது என்று புரிந்து கொள்கிறாள். இதில் என்ன அணுகுமுறையை கற்றலில், கேட்டல் பற்றி நம்புகிறாள் ?

  1. (1) மேலிருந்து கீழ், கீழிருந்து மேல் என இரண்டு அணுகுமுறையும் அல்ல
  2. (2) மேலிருந்து கீழ் அணுகுமுறை
  3. (3) கீழிருந்து மேல் அணுகுமுறை
  4. (4) கீழிருந்து மேல், மேலிருந்து கீழ் என இரண்டு அணுகுமுறை
See answer and solution
Q108

மொழிக் கற்றலில் முறையாகப் புரிந்து கொள்ளும் திறன் என்றால் என்ன ?

  1. (1) எல்லா மொழிகளுக்குமான ஒரு அமைப்பை மனிதர்கள் பெற்றிருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுதல்
  2. (2) மொழிகள் முறையான அமைப்பைக் கொண்டுள்ளன என்பதைப் புரிந்து கொள்ளுதலும், பயன்படுத்துதலும்
  3. (3) மொழிகள் ஒரு இலக்கண அமைப்பைக் கொண்டுள்ளன என்பதைப் புரிந்து கொள்ளுதலும், பயன்படுத்துதலும்
  4. (4) எல்லா மொழிகளும் ஒரு பொதுவான முறை அமைப்பைக் கொண்டுள்ளன என்பதைப் புரிந்து கொள்ளுதல்
See answer and solution
Q109

கீழ்க்கண்ட பத்தியைப் படித்து அது எந்த வகை மொழிப் பதிவைக் கொண்டது என்பதைக் கண்டுபிடி.
இந்திய அரசியல் அமைப்பின்படி அனைவரும் சமம். இது நாட்டின் ஒவ்வொரு குடிமகனும், ஆணும், பெண்ணும், எல்லா சாதியினரும், மதத்தினரும், பூர்வகுடிகளும், எந்த பொருளாதாரப் பின்புலத்தைக் கொண்டவராயிருப்பினும் அனைவரும் சமம் என்பதைக் குறிக்கிறது. இதற்கு சமநிலையின்மை இருக்கிறது என்பது பொருள் அல்ல. இல்லை என்றே பொருள். சுதந்திர இந்தியாவில் அனைவரும் சமம் என்பது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

  1. (1) அறிவியல்
  2. (2) அரசியல்
  3. (3) சமூக அறிவியல்
  4. (4) சட்டம்
See answer and solution
Q110

ஒரு ஆறாம் வகுப்பு ஆசிரியர், ஆயத்தம் செய்து கொள்ள படிக்கப்போகும் பாடத்துடன் தங்களின் முன் அறிவையும், அனுபவங்களையும் தொடர்பு படுத்திக் கொள்ள கேட்கிறார். ஆனால், அவர் மாணவர்களுக்கு பாடம் நடத்த துவங்கும் முன்னர் பாடப்பொருளை விளக்கும் படத்தை கவனிக்கச் சொல்கிறார். மாணவர்களுக்கு அவர் என்ன செய்ய விழைகிறார் ?

  1. (1) விளக்கப்படத்தைப் புரிந்து கொள்ளச் செய்தல்
  2. (2) விளக்கப்படம் மூலம் கற்பனை செய்து கொள்ளல்
  3. (3) விளக்கப்படத்தை பாராட்டுதல்
  4. (4) படிக்கப்போகும் பாடம் குறித்து முன் அறிவு பெறச் செய்தல்
See answer and solution
Q111

கற்றலில் தொடர் பதிவேடு என்பது :

  1. (1) நிலையறி நுண்தேர்வு
  2. (2) செயல் தொகுப்பு
  3. (3) தொடர் முழுமைக் கணக்கீடு
  4. (4) வல்லமை மதிப்புக் கணக்கீடு
See answer and solution
Q112

கீழே கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் உள்வாங்கும் திறன் என்று அறியப்படுவது :

  1. (1) கேட்டல் மற்றும் படித்தல்
  2. (2) கேட்டல் மற்றும் எழுதுதல்
  3. (3) படித்தல் மற்றும் பேசுதல்
  4. (4) பேசுதல் மற்றும் எழுதுதல்
See answer and solution
Q113

பல இந்தியர்கள் வேலைக்காக வெளிநாடு செல்லும்போது அங்குள்ள மொழியைக் கற்கின்றனர். இந்த தூண்டுதல் என்னவாக அறியப்படுகிறது ?

  1. (1) இண்டராகேட்டிவ் தூண்டுதலும் அல்ல. இன்ஸ்ரூமெண்டல் தூண்டுதலும் அல்ல
  2. (2) இண்டராக்டிவ் மற்றும் இன்ஸ்ரூமெண்டல் தூண்டுதல்
  3. (3) இண்டராகேட்டிவ் தூண்டுதல்
  4. (4) இன்ஸ்ரூமெண்டல் தூண்டுதல்
See answer and solution
Q114

கீழே கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் எது செம்மொழி அல்ல ?

  1. (1) இந்தி
  2. (2) தமிழ்
  3. (3) சமஸ்கிருதம்
  4. (4) தெலுங்கு
See answer and solution
Q115

அயல் மொழிக் கற்றல் குறித்து தேசியக் கல்விக் கொள்கை 2020 கூறுவதில் கீழ்க்கண்ட எது ஒன்று தவறானது ?

  1. (1) பிரெஞ்ச் மொழி கற்றல் என்பது கூடுதல் விருப்பமாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
  2. (2) அயல் மொழிகளைக் கற்றல் என்பது மேனிலைக் கல்வியில் மாணவர்களின் கூடுதல் விருப்பம்
  3. (3) அயல் மொழிகளைக் கற்றல் என்பது மும்மொழிக் கொள்கையின் கீழ் உள்ளடங்குகிறது.
  4. (4) அயல் மொழிகளைக் கற்றல் என்பது மும்மொழிக் கொள்கையின் கீழ் உள்ளடங்கியது அல்ல.
See answer and solution
Q116

மொழி பற்றி அறிதல் என்பது :

  1. (1) செயல் திட்ட அறிவு
  2. (2) எடுத்துரைத்தல் அறிவு
  3. (3) நடைமுறை அறிவு
  4. (4) இலக்கண அறிவு
See answer and solution
Q117

ஆறாம் வகுப்பு ஆசிரியர் ஒருவர் பேசுதல் பயிற்சிக்காக கீழ்க்கண்டவாறு ஒரு இடுபணி தயார் செய்கிறார்.
‘பாலைவனத்தைப் பற்றியும், அதன் காலநிலை குறித்தும் ஐந்து வாக்கியங்கள் பேசுக’.
இது ஒரு நல்ல இடுபணியா (task) அல்லவா என்பதை கீழ்க்கண்டனவற்றிலிருந்து உனது பதில் மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் தேர்ந்தெடு.

  1. (1) இது ஒரு நல்ல இடுபணி அல்ல. ஏனென்றால் பாலைவனத்தைப் பற்றியும், அதன் காலநிலைகளைப் பற்றியும் பேச தரவும், சூழ்நிலையும் இங்கு இல்லை.
  2. (2) இது ஒரு நல்ல இடுபணி. ஏனென்றால் மாணவர்கள் தங்களது புவியியல் பாட வகுப்பில் பாலைவனத்தைப் பற்றி படித்திருக்கக் கூடும், அதிலிருந்து குறிப்புகளைக் கொண்டு பேசவும் முடியும்.
  3. (3) இது ஒரு நல்ல இடுபணி. ஏனென்றால் பாலைவனத்தைப் பற்றி மாணவர்கள் ஏதேனும் இங்கு பேச முடியும்.
  4. (4) இது ஒரு நல்ல இடுபணி அல்ல. ஏனென்றால் சில மாணவர்கள் பாலைவனத்தைப் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை.
See answer and solution
Q118

ஒரு மொழியின் வட்டார வழக்கு குறித்த கீழ்க்கண்ட கூற்றுகளுள் எது சரியானது ?

  1. (1) சில நேரங்களில் ஒரு மொழியின் பல வட்டார வழக்குகளைப் பல சமூகக் குழுக்கள் பேசுவர்.
  2. (2) மொழியின் வட்டார வழக்கு இடத்திற்கு இடம் வேறுபடும்.
  3. (3) ஒரு மொழியின் பல வட்டார வழக்குகளைப் பேசுகின்ற மக்களுள் அடுத்தவர் பேசுகின்ற வட்டார வழக்கைப் புரிந்து கொள்வர்.
  4. (4) வட்டார வழக்கு என்பது பெரிய தொகுதி, மொழி என்பது சிறிய தொகுதி.
See answer and solution
Q119

கீழ்க்கண்டனவற்றுள் எந்த இடுபணி ஒருங்கிணைந்த கற்றலை ஊக்கப்படுத்துகிறது ?

  1. (1) கட்டுரை எழுதுதல்
  2. (2) பங்கேற்பு
  3. (3) ஒப்படைப்பு
  4. (4) செயல் திட்டப் பணி
See answer and solution
Q120

கீழே கொடுக்கப்பட்டுள்ள எந்த கற்பித்தல் முறை பயன்பாட்டு இலக்கணம் கற்பித்தல் என்று அறியப்படுகிறது ?
மொழியின் கூறுகளைப் பயன்பாட்டு நோக்கில் அறிமுகப்படுத்துதல், அதை மாணவர்களைக் கவனிக்கச் செய்தல், அன்றாட இயல்பு வாழ்க்கைச் சூழலில் பயன்படுத்தி தானே கண்டறிந்து கற்பதற்குத் தூண்டுதல்.

  1. (1) கான்சியஸ் ரெய்சிங்
  2. (2) கிரியேட்டிவ் ஸ்கீமா
  3. (3) டிடக்டிவ் முறை
  4. (4) டிஸ்கவரி முறை
See answer and solution

Passage

பத்தியைப் படித்து அதனைத் தொடர்ந்து வரும் வினாக்களுக்குச் சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து எழுதவும் (கே.எண். 121 - 128)
அச்சியந்திரங்கள் ஏற்பட்ட பிறகுதான் எல்லா நாடுகளிலும் பத்திரிகைகள் வெளிவரத் தொடங்கின. நமது நாட்டிலே அச்சியந்திரம் அதிகமாக ஏற்பட்ட பத்தொன்பதாம் நூற்றாண்டிலே வார இதழ், திங்கள் இதழ் முதலிய வெளியீடுகள் தோன்றின. பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முன்னர் பத்திரிகைகள் தமிழில் வெளிவந்ததாகத் தெரியவில்லை. முதன் முதலாகத் தமிழில் வார இதழ், திங்கள் இதழ் முதலிய பத்திரிகைகளை வெளியிட்டவர்கள் கிருஸ்துவப் பாதிரிமார்களே. சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் அச்சுக் கூடங்களை வைக்கும் உரிமை ஐரோப்பியப் பாதிரிமார்களுக்கும், அரசாங்கத்தாருக்கும் மட்டும் இருந்தது. மற்றச் சுதேசிகளுக்கு அந்த உரிமை இல்லாமலிருந்தது. சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பியப் பாதிரிமார்கள் அச்சுக் கூடங்களை வைத்திருந்தபடியினாலும், ஐரோப்பிய நாடுகளில் வார, மாத இதழ்கள் வெளிவருவதைக் கண்டவர்களானபடியினாலும், அவர்கள் தமிழில் முதன் முதலாகத் தமிழ் இதழ்களை வெளியிட்டார்கள். அவர்கள் கிறிஸ்துவரானபடியினால் அவர்களின் வெளியீடுகள் எல்லாம் கிறிஸ்துமதச் சார்புடையனவாய் இருந்தன. சுதேசிகளுக்கும் அச்சுக்கூடம் வைக்கும் உரிமை ஏற்பட்ட பிறகு, இந்துக்களும், முஸ்லிம்களும் பத்திரிகைகளை வெளியிட்டார்கள். பொதுவாகப் பத்திரிகைகள் நெடுங்காலம் தொடர்ந்து நடைபெறுவது இல்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டிலே தோன்றிச் சில காலம் நடந்து பின்னர் மறைந்துபோன தமிழ்ப் பத்திரிகைகள் பல.

Q121

பத்திரிகைகள் வெளிவர __________ காரணமாக அமைந்தது, __________ அது நம் நாட்டில் அதிகமாக ஏற்பட்டது.

  1. (1) அரசாங்கம், பத்தொன்பதாம் நூற்றாண்டில்
  2. (2) திங்கள் இதழ்கள், பத்தொன்பதாம் நூற்றாண்டில்
  3. (3) அச்சியந்திரங்கள், பத்தொன்பதாம் நூற்றாண்டில்
  4. (4) அச்சியந்திரங்கள், சுதேசிகளால்
See answer and solution
Q122

தொடக்க கால வெளியீடுகள் __________ சார்புடன் இருந்தது, அதற்கான அச்சுக் கூடங்கள் __________ பாதிரிமார்களிடம் இருந்தது.

  1. (1) இந்துமதச், ஐரோப்பிய
  2. (2) கிறிஸ்துமதச், ஐரோப்பிய
  3. (3) ஆங்கிலச், ஐரோப்பிய
  4. (4) கிறிஸ்துமதச், ஆங்கில நாட்டுப்
See answer and solution
Q123

அச்சுக் கூடங்களை வைக்கும் உரிமை, சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் :

  1. (1) அரசாங்கத்தாருக்கும், சுதேசிகளுக்கும் இருந்தது.
  2. (2) கிருஸ்து மதச்சார்பாகவும், பிறநாட்டுச் சார்பாகவும் இருந்தது.
  3. (3) ஐரோப்பிய பாதிரிமார்களுக்கு மட்டும் இருந்தது.
  4. (4) ஐரோப்பிய பாதிரிமார்களுக்கும், அரசாங்கத்தாருக்கும் மட்டும் இருந்தது.
See answer and solution
Q124

__________ அச்சுக் கூடம் வைக்கும் __________ ஏற்பட்ட பிறகு __________, __________ பத்திரிகைகள் வெளியிடத் தொடங்கினார்கள்.

  1. (1) சுதேசிகளுக்கு, பயிற்சி, இந்துக்கள், தமிழில்
  2. (2) ஐரோப்பியர்களுக்கு, உரிமை, இந்துக்கள், முஸ்லிம்கள்
  3. (3) தமிழ்நாட்டில், உரிமை, இந்துக்கள், சுதேசிகள்
  4. (4) சுதேசிகளுக்கு, உரிமை, இந்துக்கள், முஸ்லிம்கள்
See answer and solution
Q125

பல தமிழ்ப் பத்திரிகைகள் __________ பின்னர் மறைந்து போயின, அவை __________ நடைபெறுவதில்லை.

  1. (1) வெளியான, சில காலம்
  2. (2) சில காலம் நடந்து, நெடுங்காலம் தொடர்ந்து
  3. (3) சில காலம் நடந்து, காலந்தோறும்
  4. (4) அச்சுக்கு வந்த, சில காலத்திற்குப் பிறகு
See answer and solution
Q126

அச்சியந்திரங்கள் __________ ஐரோப்பியர் உரிமையாக இருந்து, பிறகு __________ அந்த உரிமை கிடைத்து __________ பத்திரிகைகள் வளர்ந்தது பற்றி இங்கு கூறப்படுகிறது.

  1. (1) தொடக்கத்தில், அரசாங்கத்தாருக்கு, வார மாத
  2. (2) தொடக்கத்தில், இந்தியர்களுக்கும், தமிழ்நாட்டில்
  3. (3) தொடக்கத்தில், பாதிரியார்களுக்கு, தமிழ்நாட்டில்
  4. (4) வெளிநாடுகளில், இந்தியர்களுக்கும், தமிழ்நாட்டில்
See answer and solution
Q127

__________ தமிழில் __________ வெளியிட்டவர்கள் கிருஸ்துவப் பாதிரிமார்கள்.

  1. (1) முதன் முதலாகத், வார இதழ்களும், திங்கள் இதழ்களும்
  2. (2) முதன் முதலாகத், திங்கள் இதழ்
  3. (3) முதன் முதலாகத், வெளியீடுகள்
  4. (4) முதன் முதலாகத், அச்சியந்திரங்களை
See answer and solution
Q128

ஐரோப்பிய நாடுகளில் __________, __________ இதழ்கள் வெளிவருவதைக் கண்ட __________ தமிழிலும் __________ வெளியிட்டார்கள்.

  1. (1) வார, மாத, இந்துக்கள், அச்சு நூல்களை
  2. (2) வார, மாத, பாதிரிமார்கள், இதழ்களை
  3. (3) அச்சு, வெளியீட்டு, அரசாங்கத்தினர், இதழ்களை
  4. (4) வார, மாத, சுதேசிகளும், பத்திரிகையினை
See answer and solution

Passage

பத்தியைப் படித்து அதனைத் தொடர்ந்து வரும் வினாக்களுக்குச் சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து எழுதவும் (கே.எண். 129 - 135)
நம் அரசமைப்புச் சட்டத்தை வடிவமைத்த மாமேதை அம்பேத்கர் இந்தியச் சமூகத்தை நீதியின் வழி அமைந்த, சமத்துவம் உடைய சமூகமாக அமைப்பதற்கான அடிப்படைகளை உருவாக்கித் தந்துள்ளார். அதனை நம் தேசத்தின் மாபெரும் தலைவர்கள் புகழ்ந்து ஏற்றுக் கொண்டனர். அண்ணல் காந்தியின் கொள்கைகளும் இந்திய அரசியலுக்கு மாபெரும் பங்கை ஆற்றியுள்ளன. கிராம முன்னேற்றம், அனைவருக்குமான வாழ்வுரிமை, அனைவருக்குமான கல்வி என்பவை நம் நாட்டின் முக்கிய கொள்கைகளாக அமைந்துள்ளன.
பெண்களுக்கான சம உரிமையை உறுதி செய்துள்ள நமது அரசியல் அமைப்புச் சட்டம் காலங்காலமாக இருந்து வந்த பெண்ணடிமைத்தனத்தை சட்டவகையில் தடை செய்துள்ளது. பலவகையான சமத்துவம், பலவகையான உரிமைகளை அளித்துள்ள நம் இந்திய அரசியல் ஒவ்வொருவருக்குமான கடமைகளையும் வரையறுத்துள்ளது. இவற்றைப் புரிந்துகொண்டு, சமூக நீதியை மதித்து நடப்பது நம் அனைவரின் கடமையாகும். ஒவ்வொருவருக்குமான மனித உரிமைகளை மதிப்பதும், சுயமரியாதையுடன் அனைவரையும் நடத்துவதும் நவீன இந்தியச் சமூகத்தின் அடிப்படைக் கொள்கையாக அமைந்துள்ளது. இதனைப் புரிந்துகொள்ளும்போது மொழி, பண்பாடு, மதம் என்பவற்றால் நாம் வேறுபட்டு இருந்தாலும் இந்தியர் என்ற வகையில் இணைந்தவர்களாகிறோம். இதனை அனைவருக்கும் புரியவைப்பதுதான் இந்தியக் கல்வி முறையின் அடிப்படைத் தேவையாக உள்ளது.

Q129

வேறுபாடுகள் __________, __________, __________ இவற்றில் உள்ளது, கல்வி முறையின் மூலம் இதனைக் கடந்த __________ ஏற்பட்டு __________ புரிதல் ஏற்படுகிறது.

  1. (1) மொழி, பண்பாடு, மதம், உரிமை, இந்தியர் என்ற
  2. (2) சட்டம், உரிமை, கடமை, இணைப்பு, இந்தியர் என்ற
  3. (3) மொழி, பண்பாடு, மதம், இணைப்பு, இந்தியர் என்ற
  4. (4) சமத்துவம், சமூகம், நீதி, இணைப்பு, இந்தியர் என்ற
See answer and solution
Q130

இந்திய அரசியல் அனைவருக்குமான __________ பல வகை__________ அளித்துள்ளது, அத்துடன் __________ வரையறுத்துள்ளது.

  1. (1) மொழி, பண்பாடுகளை, கடமைகளை
  2. (2) சமத்துவம், உரிமைகளை, கடமைகளை
  3. (3) கடமைகள், உரிமைகளை, சமத்துவத்தை
  4. (4) சட்டம், சமூக நீதிகளை, மொழிகளை
See answer and solution
Q131

இந்திய அரசியலுக்கு __________ கொள்கைகளும் பங்காற்றியுள்ளன, அதன் முக்கிய பகுதிகள் __________, __________, __________.

  1. (1) அம்பேத்கரின், பெண்ணுரிமை, சட்டம், கடமைகள்
  2. (2) மாபெரும் தலைவர்களின், முன்னேற்றம், வாழ்வுரிமை, கல்வி
  3. (3) அண்ணல் காந்தியின், கிராம முன்னேற்றம், அனைவருக்குமான வாழ்வுரிமை, அனைவருக்குமான கல்வி
  4. (4) அண்ணல் காந்தியின், முன்னேற்றம், வாழ்வுரிமை, கல்வி
See answer and solution
Q132

நவீன இந்தியச் சமூகத்தின் அடிப்படைக் கொள்கை :

  1. (1) சுயமரியாதையை அனைவருக்கும் உறுதி செய்வது
  2. (2) மனித உரிமைகளை மதிப்பது, சுயமரியாதையுடன் அனைவரையும் நடத்துவது
  3. (3) மொழி, பண்பாடு, மதம் இவற்றால் இணைவது
  4. (4) மனித உரிமைகளைக் கோருவது
See answer and solution
Q133

__________ இருந்து வந்த __________ சட்டவகையில் தடை செய்யப்பட்டுள்ளது.

  1. (1) சமூக நீதியில், பெண்ணடிமைத்தனம்
  2. (2) பழங்காலத்தில், பெண்ணடிமைத்தனம்
  3. (3) அரசியலில், பெண்ணடிமைத்தனம்
  4. (4) காலம் காலமாக, பெண்ணடிமைத்தனம்
See answer and solution
Q134

மாமேதை அம்பேத்கர் அமைத்த அரசமைப்புச் சட்ட அடிப்படைக் கருத்து :

  1. (1) கிராம முன்னேற்றம், அனைவருக்குமான கல்வி
  2. (2) நீதிவழி அமைந்த சமத்துவம் உடைய இந்தியச் சமூகம்
  3. (3) நீதியும், அமைதியும் கொண்ட இந்தியச் சமூகம்
  4. (4) சமத்துவம் உடைய இந்தியச் சமூகம்
See answer and solution
Q135

__________ மதித்து நடப்பது __________ கடமை, இது இந்திய அரசியலின் வரையறைக்குள் இருப்பதை புரிந்து கொள்ளும்போது நிகழ்வது.

  1. (1) பண்பாடுகளை, இந்தியர்களின்
  2. (2) இந்தியர்களை, அரசியலின்
  3. (3) சமூக நீதியை, இந்தியர் அனைவரின்
  4. (4) சமூக நீதியை, மொழிகளின்
See answer and solution
Q136

அஸ்வினுக்கு ஒடியா மொழி பிறந்ததிலிருந்தே தெரியும். மேலும் ஆங்கிலமும், இந்தியும் படிக்கிறார்கள். இக்கூற்றின்படி கீழ்கண்ட எது ஒன்று தவறானது ?

  1. (1) ஆங்கிலம் படித்தல் என்பது மொழி கற்றல்
  2. (2) ஒடியா படித்தல் என்பது மொழி கற்றல்
  3. (3) இந்தி படித்தல் என்பது மொழி படித்தல்
  4. (4) ஆங்கிலம் படித்தல் என்பது மொழி படித்தல்
See answer and solution
Q137

இன்ரூமெண்டல் ஊக்கம் நிகழ்வது :

  1. (1) புத்தகம் எழுதுவதற்காக மொழிக் கற்றல்
  2. (2) ஒருவர் வேலை நிமித்தம் பயன்பாட்டிற்காக மொழியைக் கற்றல்
  3. (3) தாய்மொழி பேசுவோரிடம் மிகவும் நெருங்கி இருப்பதால் மொழிக் கற்றல்
  4. (4) ஒருவர் தான் சார்ந்த குழுவின் மத, சமூக நிகழ்வுகளுக்காக மொழிக் கற்றல்
See answer and solution
Q138

கிருபா மற்றும் கிரன் என்னும் இரட்டையர் மணிப்புரி மொழியின் ஒரு வட்டார வழக்கைப் பேசுகின்றனர், எனினும் அவர்கள் பேச்சில் மாறுபடுகின்றனர். அவர்களின் வட்டார வழக்குப் பேச்சு எவ்வாறு அறியப்படுகிறது ?

  1. (1) மணிப்புரி
  2. (2) தனிநபர் பேச்சு வழக்கு
  3. (3) வட்டார வழக்கு
  4. (4) பேச்சு நிலை
See answer and solution
Q139

இந்திய அரசியலமைப்பில் ஆங்கில மொழிக்கு என்ன தகுதி கொடுக்கப்பட்டுள்ளது ?

  1. (1) சட்ட மொழி
  2. (2) அலுவல் மொழி
  3. (3) இணை அலுவல் மொழி
  4. (4) அயல் மொழி
See answer and solution
Q140

தனி ஒரு மாணவனின் ஒரு குறிப்பிட்ட பாடப் பகுதியின் பலத்தையும், பலவீனத்தையும் கண்டறியும் பொருட்டு நடத்தப்படும் தேர்வு!

  1. (1) வளர்நிலைத் தேர்வு
  2. (2) புறவயத் தேர்வு
  3. (3) ஏற்புமைத் தேர்வு
  4. (4) நிலையறி தேர்வு
See answer and solution
Q141

ஆதித்திக்கு இறந்த கால வினையெச்சத் தொடரின் விதி குறித்து தெரியும். ஆனால் நடைமுறையில் அவளால் பயன்படுத்த முடியாது. இது எந்த வகையான அறிவு முறையினைச் சார்ந்தது ?

  1. (1) பயன்பாட்டு அறிவு
  2. (2) மொழி கையகப்படுத்தும் சாதனம் (LAD)
  3. (3) செயல்முறை அறிவு
  4. (4) அறிவிப்பு அறிவு
See answer and solution
Q142

கீழ்கண்டனவற்றுள் மொழி குறித்த தவறான கூற்று எது ?

  1. (1) சில மொழிகள் மட்டுமே அறிவியல் மற்றும் பொறியியல் கருத்துக்களை சிறப்பாக வெளிப்படுத்த முடியும்
  2. (2) மொழி ஒருவரின் அடையாளத்தை வெளிப்படுத்துகிறது
  3. (3) மொழி ஒரு வரலாற்றுப் பெட்டகம்
  4. (4) மொழி மனித அறிவு வளர்ச்சியில் பங்கு வகிக்கிறது
See answer and solution
Q143

மொழிப்பாட வகுப்பறையில் ஒரு திட்டப்பணியை வடிவமைத்து செயல்படுத்துவதில் என்னென்ன படிநிலைகள் உள்ளன ?

  1. (1) ஆசிரியரும், மாணவர்களும் அவர்களின் விருப்பப்படி ஆய்வுத்திட்டம் தயாரித்தல்.
  2. (2) குழு அமைத்தல், திட்டமிடல், தரவு சேகரித்தல், தரவு விளக்கம், வரைவு எழுதுதல், தலைப்பைக் கண்டறிதல், அறிக்கை இறுதி செய்தல்.
  3. (3) குழு அமைத்தல், தலைப்பைக் கண்டறிதல், திட்டமிடல், தரவு சேகரித்தல், தரவு விளக்கம், வரைவு திட்டம் எழுதுதல் மற்றும் அறிக்கை இறுதி செய்தல்.
  4. (4) குழு அமைத்தல், தலைப்பைத் தேர்ந்தெடுத்தல், திட்டமிடல், தரவு சேகரித்தல், வரைவு எழுதுதல், தரவு விளக்கம், அறிக்கை தயார் செய்தல்.
See answer and solution
Q144

கேட்டலில், மேலிருந்து - கீழ் அணுகுமுறை என்பது :

  1. (1) ஒலி, வார்த்தை, தொடர், வாக்கியம் என அனைத்தையும் கேட்டல்
  2. (2) குறிப்பிட்ட ஒன்றின் மீது கவனத்தைச் செலுத்துதல்
  3. (3) பேச்சு அல்லது பாடக் கருத்தின் சாராம்சத்தைக் கேட்டல்
  4. (4) பேச்சு மற்றும் பாடத்தின் எல்லாக் கருத்துகளையும் கேட்டல்
See answer and solution
Q145

ஏழாம் வகுப்பு ஆசிரியர் ஒரு நபரைப் பற்றி எழுதுதல் இடுபணி கொடுக்க விரும்புகிறார். வகுப்பறைக்கு சென்று ஒரு வியாபாரியை அவரின் கூடையுடன் கூட்டி வருகிறார். ஆசிரியர் அவரை சுமார் ஏழு நிமிடம் அங்கு இருக்கக் கூறுகிறார். மேலும் மாணவர்களை அந்த நபரைப் பற்றி விவரித்து எழுதக் கூறுகிறார். இந்த செயல்பாட்டில் வியாபாரி பற்றி நீ அறிவது என்ன ?

  1. (1) கற்பித்தல் பொருள்
  2. (2) கற்பித்தலில் உதவியாளர்
  3. (3) வியாபாரி
  4. (4) ஒரு பங்கேற்பாளரின் செயல்பாடு
See answer and solution
Q146

ஆறாம் வகுப்பு ஆசிரியர் ஒருவர், தன் மாணவர்கள் பாடநூலில் உள்ள சமூகம், அதிகாரம், அடையாளம் ஆகியனவற்றைப் பற்றி சுருக்கமாக புரிந்து படிக்க வேண்டுமென விரும்புகிறார். கற்போரிடத்தில் அந்த ஆசிரியர் எதை வலியுறுத்துகிறார் ?

  1. (1) இலக்கியத் திறன்
  2. (2) மொழி அறிவு
  3. (3) விமர்சன அறிவு
  4. (4) பகுத்தாய்ந்து படித்தல்
See answer and solution
Q147

செம்மொழி கற்றல் குறித்து தேசியக் கல்விக் கொள்கை (2020) கூறும் கீழ்கண்ட கூற்றுகளுள் எது சரியானது ?

  1. (1) முக்கிய மொழியாக மேல் நிலையில் செம்மொழி கற்றல்
  2. (2) செம்மொழி கற்றல் மேல் நிலைக் கல்வியில் கூடுதல் விருப்பம்
  3. (3) செம்மொழி கற்றல் என்பது மும்மொழிக் கொள்கையில் உள்ளடங்குகிறது
  4. (4) முன்பருவ நிலையில் செம்மொழி கற்றல்
See answer and solution
Q148

கீழ்க்கண்ட பத்தியைப் படித்து அது எந்த வகையான மொழிப்பதிவை கொண்டது என்பதைக் கண்டறிக.
உலகத்தின் பல பகுதிகளில், ஆசியா, ஐரோப்பா உட்பட பல நாடுகளில் தனிமனித உரிமை மற்றும் சமூகத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. புரட்சிக்குப் பின், திடீரென இது சாத்தியமானது. இந்தியாவில் ராஜாராம் மோகன் ராயும், டிரோஜியோவும் பிரஞ்சுப் புரட்சியின் முக்கியத்துவத்தைப் பற்றிப்பேசினர். காலனியத்தின் வளர்ச்சி சமூக மாற்றத்தை ஏற்படுத்தியது.

  1. (1) புரட்சி
  2. (2) அறிவியல்
  3. (3) அரசியல்
  4. (4) சமூக அறிவியல்
See answer and solution
Q149

‘மொழித்தேர்வு பொதுவாக உள்வாங்கும் திறனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை’ என்று எட்டாம் வகுப்பு ஆசிரியர் சுபாஷ் கூறுகின்றார். அவர் ‘உள்வாங்கும் திறன்’ என்று எதைக் குறிப்பிடுகிறார் ?

  1. (1) பேசுதல் மற்றும் எழுதுதல்
  2. (2) கேட்டல் மற்றும் எழுதுதல்
  3. (3) பேசுதல் மற்றும் படித்தல்
  4. (4) கேட்டல் மற்றும் படித்தல்
See answer and solution
Q150

மொழி ஒரு அமைப்புடன் இயங்குகிறது என்பதை கற்போர் புரிந்து கொள்வதும், பயன்படுத்துவதும் :

  1. (1) மூலோபாய திறன்
  2. (2) தொடர்பு திறன்
  3. (3) முறை திறன்
  4. (4) சமூக மொழியியல் திறன்
See answer and solution