By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 14 Dec 2024 Paper 2 Tamil, Question 105

Topic: Poem comprehension

Passage

பாடலைப் படித்து அதனைத் தொடர்ந்து வரும் வினாக்களுக்குச் சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து எழுதவும் (கே.எண். 100 - 105)
காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன் !
கடற்பரப்பில், ஒளிப்புனலில் கண்டேன் ! அந்தச்
சோலையிலே, மலர்களிலே, தளிர்கள் தம்மில்,
தொட்ட இடம் எலாம்கண்ணில் தட்டுப் பட்டாள் !
மாலையிலே மேற்றிசையில் இலகு கின்ற
மாணிக்கச் சுடரிலவள் இருந்தாள் ! ஆலஞ்
சாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டந்
தனில்அந்த ‘அழகெ’ன்பாள் கவிதை தந்தாள்.

சிறுகுழந்தை விழியினிலே ஒளியாய் நின்றாள்;
திருவிளக்கில் சிரிக்கின்றாள்; நாரெ டுத்து
நறுமலரைத் தொடுப்பாளின் விரல்வ ளைவில்
நாடகத்தைச் செய்கின்றாள்; அடடே செந்தோள்
புறத்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும்
புது நடையில் பூரித்தாள்; விளைந்த நன்செய்
நிறத்தினிலே என்விழியை நிறுத்தினாள்; என்
நெஞ்சத்தில் குடியேறி மகிழ்ச்சி செய்தாள்.

Q105

ஒளியாய் ______ நிற்கிறாள், ______ சிரிக்கிறாள்.

  1. (1) திருவிளக்கில், குழந்தையின் விழியில்
  2. (2) விரல் வளைவில், திருவிளக்கில்
  3. (3) சிறு குழந்தையின் விழியில், நன்செய் நிறத்தில்
  4. (4) சிறு குழந்தையின் விழியில், திருவிளக்கில்Correct answer

Solution.

CBSE answer: (4)

விடை: (4) சிறு குழந்தையின் விழியில், திருவிளக்கில்

  1. 'சிறுகுழந்தை விழியினிலே ஒளியாய் நின்றாள்; திருவிளக்கில் சிரிக்கின்றாள்' என்பது பாடல் வரி.
  2. ஒளியாய் நிற்கும் இடம் குழந்தையின் விழி; சிரிக்கும் இடம் திருவிளக்கு.
  3. இவ்வாறு அழகு எங்கும் நிறைந்திருப்பதைக் கவிஞர் ஒரு பெண்ணாக உருவகித்துப் பாடுகிறார்.

கவனம்: (1) அதே இரண்டு இடங்களை மாற்றி வைத்துள்ளது; வரிசையைக் கவனிக்க வேண்டும்.