By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 14 Dec 2024 Paper 2 Tamil, Question 101

Topic: Poem comprehension

Passage

பாடலைப் படித்து அதனைத் தொடர்ந்து வரும் வினாக்களுக்குச் சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து எழுதவும் (கே.எண். 100 - 105)
காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன் !
கடற்பரப்பில், ஒளிப்புனலில் கண்டேன் ! அந்தச்
சோலையிலே, மலர்களிலே, தளிர்கள் தம்மில்,
தொட்ட இடம் எலாம்கண்ணில் தட்டுப் பட்டாள் !
மாலையிலே மேற்றிசையில் இலகு கின்ற
மாணிக்கச் சுடரிலவள் இருந்தாள் ! ஆலஞ்
சாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டந்
தனில்அந்த ‘அழகெ’ன்பாள் கவிதை தந்தாள்.

சிறுகுழந்தை விழியினிலே ஒளியாய் நின்றாள்;
திருவிளக்கில் சிரிக்கின்றாள்; நாரெ டுத்து
நறுமலரைத் தொடுப்பாளின் விரல்வ ளைவில்
நாடகத்தைச் செய்கின்றாள்; அடடே செந்தோள்
புறத்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும்
புது நடையில் பூரித்தாள்; விளைந்த நன்செய்
நிறத்தினிலே என்விழியை நிறுத்தினாள்; என்
நெஞ்சத்தில் குடியேறி மகிழ்ச்சி செய்தாள்.

Q101

எழும் கதிரவன் ______, கடற்பரப்பில் தோன்றுவது ______.

  1. (1) ஒளிப்புனல், மாணிக்கச் சுடர்
  2. (2) சுடர் ஒளி, இளம்பரிதி
  3. (3) இளம்பரிதி, ஒளிப்புனல்Correct answer
  4. (4) இளம்பரிதி, மாணிக்கச் சுடர்

Solution.

CBSE answer: (3)

விடை: (3) இளம்பரிதி, ஒளிப்புனல்

  1. 'காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன்' என்பதில் காலையில் எழும் கதிரவன் இளம்பரிதி.
  2. 'கடற்பரப்பில், ஒளிப்புனலில் கண்டேன்' என்பதால் கடல் மேல் தெரிவது ஒளிப்புனல் (ஒளி வெள்ளம்).
  3. பரிதி, கதிரவன், ஞாயிறு ஆகியவை சூரியனைக் குறிக்கும் சொற்கள்; புனல் என்றால் நீர் அல்லது வெள்ளம்.

கவனம்: 'மாணிக்கச் சுடர்' மாலையில் மேற்குத் திசையில் ஒளிர்வது; காலைக் கதிரவன் அல்ல.