______ கலப்பையுடன் செல்லும் ______ புது நடையில் அழகின் ______.
- (1) விளைந்த, உழவனின், பூரிப்பு
- (2) புறத்தில், உழவனின், பூரிப்பு
- (3) தோளில், உழவனின், குடியேற்றம்
- (4) தோளில், உழவனின், பூரிப்பு
பாடலைப் படித்து அதனைத் தொடர்ந்து வரும் வினாக்களுக்குச் சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து எழுதவும் (கே.எண். 100 - 105)
காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன் !
கடற்பரப்பில், ஒளிப்புனலில் கண்டேன் ! அந்தச்
சோலையிலே, மலர்களிலே, தளிர்கள் தம்மில்,
தொட்ட இடம் எலாம்கண்ணில் தட்டுப் பட்டாள் !
மாலையிலே மேற்றிசையில் இலகு கின்ற
மாணிக்கச் சுடரிலவள் இருந்தாள் ! ஆலஞ்
சாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டந்
தனில்அந்த ‘அழகெ’ன்பாள் கவிதை தந்தாள்.
சிறுகுழந்தை விழியினிலே ஒளியாய் நின்றாள்;
திருவிளக்கில் சிரிக்கின்றாள்; நாரெ டுத்து
நறுமலரைத் தொடுப்பாளின் விரல்வ ளைவில்
நாடகத்தைச் செய்கின்றாள்; அடடே செந்தோள்
புறத்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும்
புது நடையில் பூரித்தாள்; விளைந்த நன்செய்
நிறத்தினிலே என்விழியை நிறுத்தினாள்; என்
நெஞ்சத்தில் குடியேறி மகிழ்ச்சி செய்தாள்.
______ கலப்பையுடன் செல்லும் ______ புது நடையில் அழகின் ______.
CBSE answer: (4)
விடை: (4) தோளில், உழவனின், பூரிப்பு
கவனம்: (2)-இன் 'புறத்தில்' தனியே நின்றால் எந்த இடம் என்று தெரியாது; 'செந்தோள் புறத்தினிலே' என்றால் தோளின் மேல். (1)-இன் 'விளைந்த' நன்செய்யோடும், (3)-இன் 'குடியேற்றம்' நெஞ்சத்தோடும் வரும் சொற்கள்.