______ நிறத்தில் ______ நிறுத்தியவள் ______ குடியேறி ______ செய்கிறாள்.
- (1) நன்செய், அழகை, விழியில், மகிழ்ச்சி
- (2) நன்செய், விழியை, நெஞ்சத்தில், மகிழ்ச்சி
- (3) விளைந்த, விழியை, நெஞ்சத்தில், மகிழ்ச்சி
- (4) நன்செய், நெஞ்சத்தை, விழியில், மகிழ்ச்சி
பாடலைப் படித்து அதனைத் தொடர்ந்து வரும் வினாக்களுக்குச் சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து எழுதவும் (கே.எண். 100 - 105)
காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன் !
கடற்பரப்பில், ஒளிப்புனலில் கண்டேன் ! அந்தச்
சோலையிலே, மலர்களிலே, தளிர்கள் தம்மில்,
தொட்ட இடம் எலாம்கண்ணில் தட்டுப் பட்டாள் !
மாலையிலே மேற்றிசையில் இலகு கின்ற
மாணிக்கச் சுடரிலவள் இருந்தாள் ! ஆலஞ்
சாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டந்
தனில்அந்த ‘அழகெ’ன்பாள் கவிதை தந்தாள்.
சிறுகுழந்தை விழியினிலே ஒளியாய் நின்றாள்;
திருவிளக்கில் சிரிக்கின்றாள்; நாரெ டுத்து
நறுமலரைத் தொடுப்பாளின் விரல்வ ளைவில்
நாடகத்தைச் செய்கின்றாள்; அடடே செந்தோள்
புறத்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும்
புது நடையில் பூரித்தாள்; விளைந்த நன்செய்
நிறத்தினிலே என்விழியை நிறுத்தினாள்; என்
நெஞ்சத்தில் குடியேறி மகிழ்ச்சி செய்தாள்.
______ நிறத்தில் ______ நிறுத்தியவள் ______ குடியேறி ______ செய்கிறாள்.
CBSE answer: (2)
விடை: (2) நன்செய், விழியை, நெஞ்சத்தில், மகிழ்ச்சி
கவனம்: (3)-இல் 'விளைந்த நிறத்தில்' என்பது பொருந்தாது; 'நிறம்' என்ற சொல்லுக்கு நேர் முன் வருவது 'நன்செய்'.