__________ இருந்து வந்த __________ சட்டவகையில் தடை செய்யப்பட்டுள்ளது.
- (1) சமூக நீதியில், பெண்ணடிமைத்தனம்
- (2) பழங்காலத்தில், பெண்ணடிமைத்தனம்
- (3) அரசியலில், பெண்ணடிமைத்தனம்
- (4) காலம் காலமாக, பெண்ணடிமைத்தனம்
பத்தியைப் படித்து அதனைத் தொடர்ந்து வரும் வினாக்களுக்குச் சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து எழுதவும் (கே.எண். 129 - 135)
நம் அரசமைப்புச் சட்டத்தை வடிவமைத்த மாமேதை அம்பேத்கர் இந்தியச் சமூகத்தை நீதியின் வழி அமைந்த, சமத்துவம் உடைய சமூகமாக அமைப்பதற்கான அடிப்படைகளை உருவாக்கித் தந்துள்ளார். அதனை நம் தேசத்தின் மாபெரும் தலைவர்கள் புகழ்ந்து ஏற்றுக் கொண்டனர். அண்ணல் காந்தியின் கொள்கைகளும் இந்திய அரசியலுக்கு மாபெரும் பங்கை ஆற்றியுள்ளன. கிராம முன்னேற்றம், அனைவருக்குமான வாழ்வுரிமை, அனைவருக்குமான கல்வி என்பவை நம் நாட்டின் முக்கிய கொள்கைகளாக அமைந்துள்ளன.
பெண்களுக்கான சம உரிமையை உறுதி செய்துள்ள நமது அரசியல் அமைப்புச் சட்டம் காலங்காலமாக இருந்து வந்த பெண்ணடிமைத்தனத்தை சட்டவகையில் தடை செய்துள்ளது. பலவகையான சமத்துவம், பலவகையான உரிமைகளை அளித்துள்ள நம் இந்திய அரசியல் ஒவ்வொருவருக்குமான கடமைகளையும் வரையறுத்துள்ளது. இவற்றைப் புரிந்துகொண்டு, சமூக நீதியை மதித்து நடப்பது நம் அனைவரின் கடமையாகும். ஒவ்வொருவருக்குமான மனித உரிமைகளை மதிப்பதும், சுயமரியாதையுடன் அனைவரையும் நடத்துவதும் நவீன இந்தியச் சமூகத்தின் அடிப்படைக் கொள்கையாக அமைந்துள்ளது. இதனைப் புரிந்துகொள்ளும்போது மொழி, பண்பாடு, மதம் என்பவற்றால் நாம் வேறுபட்டு இருந்தாலும் இந்தியர் என்ற வகையில் இணைந்தவர்களாகிறோம். இதனை அனைவருக்கும் புரியவைப்பதுதான் இந்தியக் கல்வி முறையின் அடிப்படைத் தேவையாக உள்ளது.
__________ இருந்து வந்த __________ சட்டவகையில் தடை செய்யப்பட்டுள்ளது.
CBSE answer: (4)
விடை: (4) காலம் காலமாக, பெண்ணடிமைத்தனம்
கவனம்: (2) 'பழங்காலத்தில்' என்பது தொடர்ச்சியைக் காட்டவில்லை; பத்தியின் சொல் 'காலங்காலமாக'.