By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 14 Dec 2024 Paper 2 Tamil, Question 132

Topic: Reading comprehension

Passage

பத்தியைப் படித்து அதனைத் தொடர்ந்து வரும் வினாக்களுக்குச் சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து எழுதவும் (கே.எண். 129 - 135)
நம் அரசமைப்புச் சட்டத்தை வடிவமைத்த மாமேதை அம்பேத்கர் இந்தியச் சமூகத்தை நீதியின் வழி அமைந்த, சமத்துவம் உடைய சமூகமாக அமைப்பதற்கான அடிப்படைகளை உருவாக்கித் தந்துள்ளார். அதனை நம் தேசத்தின் மாபெரும் தலைவர்கள் புகழ்ந்து ஏற்றுக் கொண்டனர். அண்ணல் காந்தியின் கொள்கைகளும் இந்திய அரசியலுக்கு மாபெரும் பங்கை ஆற்றியுள்ளன. கிராம முன்னேற்றம், அனைவருக்குமான வாழ்வுரிமை, அனைவருக்குமான கல்வி என்பவை நம் நாட்டின் முக்கிய கொள்கைகளாக அமைந்துள்ளன.
பெண்களுக்கான சம உரிமையை உறுதி செய்துள்ள நமது அரசியல் அமைப்புச் சட்டம் காலங்காலமாக இருந்து வந்த பெண்ணடிமைத்தனத்தை சட்டவகையில் தடை செய்துள்ளது. பலவகையான சமத்துவம், பலவகையான உரிமைகளை அளித்துள்ள நம் இந்திய அரசியல் ஒவ்வொருவருக்குமான கடமைகளையும் வரையறுத்துள்ளது. இவற்றைப் புரிந்துகொண்டு, சமூக நீதியை மதித்து நடப்பது நம் அனைவரின் கடமையாகும். ஒவ்வொருவருக்குமான மனித உரிமைகளை மதிப்பதும், சுயமரியாதையுடன் அனைவரையும் நடத்துவதும் நவீன இந்தியச் சமூகத்தின் அடிப்படைக் கொள்கையாக அமைந்துள்ளது. இதனைப் புரிந்துகொள்ளும்போது மொழி, பண்பாடு, மதம் என்பவற்றால் நாம் வேறுபட்டு இருந்தாலும் இந்தியர் என்ற வகையில் இணைந்தவர்களாகிறோம். இதனை அனைவருக்கும் புரியவைப்பதுதான் இந்தியக் கல்வி முறையின் அடிப்படைத் தேவையாக உள்ளது.

Q132

நவீன இந்தியச் சமூகத்தின் அடிப்படைக் கொள்கை :

  1. (1) சுயமரியாதையை அனைவருக்கும் உறுதி செய்வது
  2. (2) மனித உரிமைகளை மதிப்பது, சுயமரியாதையுடன் அனைவரையும் நடத்துவதுCorrect answer
  3. (3) மொழி, பண்பாடு, மதம் இவற்றால் இணைவது
  4. (4) மனித உரிமைகளைக் கோருவது

Solution.

CBSE answer: (2)

விடை: (2) மனித உரிமைகளை மதிப்பது, சுயமரியாதையுடன் அனைவரையும் நடத்துவது

  1. 'ஒவ்வொருவருக்குமான மனித உரிமைகளை மதிப்பதும், சுயமரியாதையுடன் அனைவரையும் நடத்துவதும்' நவீன இந்தியச் சமூகத்தின் அடிப்படைக் கொள்கை என்று பத்தி கூறுகிறது.
  2. இரண்டு பகுதிகளையும் சேர்த்துச் சொல்வது (2) மட்டுமே.

கவனம்: (1), (4) ஒரு பகுதியை மட்டும் சொல்கின்றன; (4)-இல் 'கோருவது' பத்தியில் இல்லை.