By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 14 Dec 2024 Paper 2 Tamil, Question 123

Topic: Reading comprehension

Passage

பத்தியைப் படித்து அதனைத் தொடர்ந்து வரும் வினாக்களுக்குச் சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து எழுதவும் (கே.எண். 121 - 128)
அச்சியந்திரங்கள் ஏற்பட்ட பிறகுதான் எல்லா நாடுகளிலும் பத்திரிகைகள் வெளிவரத் தொடங்கின. நமது நாட்டிலே அச்சியந்திரம் அதிகமாக ஏற்பட்ட பத்தொன்பதாம் நூற்றாண்டிலே வார இதழ், திங்கள் இதழ் முதலிய வெளியீடுகள் தோன்றின. பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முன்னர் பத்திரிகைகள் தமிழில் வெளிவந்ததாகத் தெரியவில்லை. முதன் முதலாகத் தமிழில் வார இதழ், திங்கள் இதழ் முதலிய பத்திரிகைகளை வெளியிட்டவர்கள் கிருஸ்துவப் பாதிரிமார்களே. சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் அச்சுக் கூடங்களை வைக்கும் உரிமை ஐரோப்பியப் பாதிரிமார்களுக்கும், அரசாங்கத்தாருக்கும் மட்டும் இருந்தது. மற்றச் சுதேசிகளுக்கு அந்த உரிமை இல்லாமலிருந்தது. சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பியப் பாதிரிமார்கள் அச்சுக் கூடங்களை வைத்திருந்தபடியினாலும், ஐரோப்பிய நாடுகளில் வார, மாத இதழ்கள் வெளிவருவதைக் கண்டவர்களானபடியினாலும், அவர்கள் தமிழில் முதன் முதலாகத் தமிழ் இதழ்களை வெளியிட்டார்கள். அவர்கள் கிறிஸ்துவரானபடியினால் அவர்களின் வெளியீடுகள் எல்லாம் கிறிஸ்துமதச் சார்புடையனவாய் இருந்தன. சுதேசிகளுக்கும் அச்சுக்கூடம் வைக்கும் உரிமை ஏற்பட்ட பிறகு, இந்துக்களும், முஸ்லிம்களும் பத்திரிகைகளை வெளியிட்டார்கள். பொதுவாகப் பத்திரிகைகள் நெடுங்காலம் தொடர்ந்து நடைபெறுவது இல்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டிலே தோன்றிச் சில காலம் நடந்து பின்னர் மறைந்துபோன தமிழ்ப் பத்திரிகைகள் பல.

Q123

அச்சுக் கூடங்களை வைக்கும் உரிமை, சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் :

  1. (1) அரசாங்கத்தாருக்கும், சுதேசிகளுக்கும் இருந்தது.
  2. (2) கிருஸ்து மதச்சார்பாகவும், பிறநாட்டுச் சார்பாகவும் இருந்தது.
  3. (3) ஐரோப்பிய பாதிரிமார்களுக்கு மட்டும் இருந்தது.
  4. (4) ஐரோப்பிய பாதிரிமார்களுக்கும், அரசாங்கத்தாருக்கும் மட்டும் இருந்தது.Correct answer

Solution.

CBSE answer: (4)

விடை: (4) ஐரோப்பிய பாதிரிமார்களுக்கும், அரசாங்கத்தாருக்கும் மட்டும் இருந்தது.

  1. சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் அச்சுக் கூடம் வைக்கும் உரிமை இந்த இரு தரப்பினருக்கு மட்டுமே இருந்தது என்று பத்தி கூறுகிறது.
  2. சுதேசிகளுக்கு அந்த உரிமை இல்லை.

கவனம்: (3) பாதிரிமார்களை மட்டும் சொல்லி அரசாங்கத்தை விட்டுவிடுகிறது; (1) சுதேசிகளைச் சேர்ப்பது தவறு; (2) உரிமையைப் பற்றிப் பேசாமல் சார்பைப் பற்றிப் பேசுகிறது.