By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 14 Dec 2024 Paper 2 Tamil, Question 122

Topic: Reading comprehension

Passage

பத்தியைப் படித்து அதனைத் தொடர்ந்து வரும் வினாக்களுக்குச் சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து எழுதவும் (கே.எண். 121 - 128)
அச்சியந்திரங்கள் ஏற்பட்ட பிறகுதான் எல்லா நாடுகளிலும் பத்திரிகைகள் வெளிவரத் தொடங்கின. நமது நாட்டிலே அச்சியந்திரம் அதிகமாக ஏற்பட்ட பத்தொன்பதாம் நூற்றாண்டிலே வார இதழ், திங்கள் இதழ் முதலிய வெளியீடுகள் தோன்றின. பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முன்னர் பத்திரிகைகள் தமிழில் வெளிவந்ததாகத் தெரியவில்லை. முதன் முதலாகத் தமிழில் வார இதழ், திங்கள் இதழ் முதலிய பத்திரிகைகளை வெளியிட்டவர்கள் கிருஸ்துவப் பாதிரிமார்களே. சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் அச்சுக் கூடங்களை வைக்கும் உரிமை ஐரோப்பியப் பாதிரிமார்களுக்கும், அரசாங்கத்தாருக்கும் மட்டும் இருந்தது. மற்றச் சுதேசிகளுக்கு அந்த உரிமை இல்லாமலிருந்தது. சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பியப் பாதிரிமார்கள் அச்சுக் கூடங்களை வைத்திருந்தபடியினாலும், ஐரோப்பிய நாடுகளில் வார, மாத இதழ்கள் வெளிவருவதைக் கண்டவர்களானபடியினாலும், அவர்கள் தமிழில் முதன் முதலாகத் தமிழ் இதழ்களை வெளியிட்டார்கள். அவர்கள் கிறிஸ்துவரானபடியினால் அவர்களின் வெளியீடுகள் எல்லாம் கிறிஸ்துமதச் சார்புடையனவாய் இருந்தன. சுதேசிகளுக்கும் அச்சுக்கூடம் வைக்கும் உரிமை ஏற்பட்ட பிறகு, இந்துக்களும், முஸ்லிம்களும் பத்திரிகைகளை வெளியிட்டார்கள். பொதுவாகப் பத்திரிகைகள் நெடுங்காலம் தொடர்ந்து நடைபெறுவது இல்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டிலே தோன்றிச் சில காலம் நடந்து பின்னர் மறைந்துபோன தமிழ்ப் பத்திரிகைகள் பல.

Q122

தொடக்க கால வெளியீடுகள் __________ சார்புடன் இருந்தது, அதற்கான அச்சுக் கூடங்கள் __________ பாதிரிமார்களிடம் இருந்தது.

  1. (1) இந்துமதச், ஐரோப்பிய
  2. (2) கிறிஸ்துமதச், ஐரோப்பியCorrect answer
  3. (3) ஆங்கிலச், ஐரோப்பிய
  4. (4) கிறிஸ்துமதச், ஆங்கில நாட்டுப்

Solution.

CBSE answer: (2)

விடை: (2) கிறிஸ்துமதச், ஐரோப்பிய

  1. அச்சுக் கூடங்களை வைத்திருந்தவர்கள் ஐரோப்பியப் பாதிரிமார்கள் என்று பத்தி தெளிவாகச் சொல்கிறது.
  2. அவர்கள் கிறிஸ்துவர்கள் என்பதால் அவர்களின் வெளியீடுகள் கிறிஸ்துமதச் சார்புடையனவாய் இருந்தன.
  3. (1) 'இந்துமதச்' தவறு; இந்துக்கள் பத்திரிகை வெளியிட்டது சுதேசிகளுக்கு உரிமை கிடைத்த பிறகே. (3) 'ஆங்கிலச்' என்பது மதச் சார்பைக் குறிக்காது.

கவனம்: (4)-இல் 'ஆங்கில நாட்டுப்' என்பது பத்தியில் இல்லை; பத்தி 'ஐரோப்பிய' என்றே கூறுகிறது.