By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 14 Dec 2024 Paper 2 Tamil, Question 126

Topic: Reading comprehension

Passage

பத்தியைப் படித்து அதனைத் தொடர்ந்து வரும் வினாக்களுக்குச் சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து எழுதவும் (கே.எண். 121 - 128)
அச்சியந்திரங்கள் ஏற்பட்ட பிறகுதான் எல்லா நாடுகளிலும் பத்திரிகைகள் வெளிவரத் தொடங்கின. நமது நாட்டிலே அச்சியந்திரம் அதிகமாக ஏற்பட்ட பத்தொன்பதாம் நூற்றாண்டிலே வார இதழ், திங்கள் இதழ் முதலிய வெளியீடுகள் தோன்றின. பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முன்னர் பத்திரிகைகள் தமிழில் வெளிவந்ததாகத் தெரியவில்லை. முதன் முதலாகத் தமிழில் வார இதழ், திங்கள் இதழ் முதலிய பத்திரிகைகளை வெளியிட்டவர்கள் கிருஸ்துவப் பாதிரிமார்களே. சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் அச்சுக் கூடங்களை வைக்கும் உரிமை ஐரோப்பியப் பாதிரிமார்களுக்கும், அரசாங்கத்தாருக்கும் மட்டும் இருந்தது. மற்றச் சுதேசிகளுக்கு அந்த உரிமை இல்லாமலிருந்தது. சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பியப் பாதிரிமார்கள் அச்சுக் கூடங்களை வைத்திருந்தபடியினாலும், ஐரோப்பிய நாடுகளில் வார, மாத இதழ்கள் வெளிவருவதைக் கண்டவர்களானபடியினாலும், அவர்கள் தமிழில் முதன் முதலாகத் தமிழ் இதழ்களை வெளியிட்டார்கள். அவர்கள் கிறிஸ்துவரானபடியினால் அவர்களின் வெளியீடுகள் எல்லாம் கிறிஸ்துமதச் சார்புடையனவாய் இருந்தன. சுதேசிகளுக்கும் அச்சுக்கூடம் வைக்கும் உரிமை ஏற்பட்ட பிறகு, இந்துக்களும், முஸ்லிம்களும் பத்திரிகைகளை வெளியிட்டார்கள். பொதுவாகப் பத்திரிகைகள் நெடுங்காலம் தொடர்ந்து நடைபெறுவது இல்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டிலே தோன்றிச் சில காலம் நடந்து பின்னர் மறைந்துபோன தமிழ்ப் பத்திரிகைகள் பல.

Q126

அச்சியந்திரங்கள் __________ ஐரோப்பியர் உரிமையாக இருந்து, பிறகு __________ அந்த உரிமை கிடைத்து __________ பத்திரிகைகள் வளர்ந்தது பற்றி இங்கு கூறப்படுகிறது.

  1. (1) தொடக்கத்தில், அரசாங்கத்தாருக்கு, வார மாத
  2. (2) தொடக்கத்தில், இந்தியர்களுக்கும், தமிழ்நாட்டில்Correct answer
  3. (3) தொடக்கத்தில், பாதிரியார்களுக்கு, தமிழ்நாட்டில்
  4. (4) வெளிநாடுகளில், இந்தியர்களுக்கும், தமிழ்நாட்டில்

Solution.

CBSE answer: (2)

விடை: (2) தொடக்கத்தில், இந்தியர்களுக்கும், தமிழ்நாட்டில்

  1. தொடக்கத்தில் அச்சுக் கூட உரிமை ஐரோப்பியரிடம் இருந்தது.
  2. பிறகு சுதேசிகளுக்கு, அதாவது இந்தியர்களுக்கும், அந்த உரிமை கிடைத்தது.
  3. அதன் பின் இந்துக்களும் முஸ்லிம்களும் வெளியிட்டதால் தமிழ்ப் பத்திரிகைகள் வளர்ந்தன.

கவனம்: (1) அரசாங்கத்துக்கு உரிமை தொடக்கத்திலேயே இருந்தது; (3) பாதிரியார்கள் ஐரோப்பியரே, பிறகு உரிமை பெற்றவர்கள் அல்லர்; (4) உரிமை தொடங்கியது வெளிநாடுகளில் அல்ல, நம் நாட்டில்.