By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 14 Dec 2024 Paper 2 Tamil, Question 95

Topic: Reading comprehension

Passage

பத்தியைப் படித்து அதனைத் தொடர்ந்து வரும் வினாக்களுக்குச் சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து எழுதவும் (கே.எண். 91 - 99)
பழைய சாசன எழுத்துக்களின் ஆராய்ச்சியும், பழம் பொருள்களின் ஆராய்ச்சியும் அண்மைக் காலத்திலே மேல் நாடுகளில் புத்தம் புதிதாக ஏற்பட்ட சாத்திரக் கலைகளாகும். இவை பழைய எழுத்துச் சாசனங்களை ஆராய்வதும், பழைய கலை நாகரிகம் முதலியவைகளை ஆராய்வதும் ஆகும். இவ்வாராய்ச்சிகளினாலே பன்னூற்றாண்டுகளுக்கு முன்னமே மறைந்துபோன பல செய்திகளை அறியலாம். நமது நாட்டை அரசாண்ட ஆங்கிலேயர் இந்த ஆராய்ச்சிக் கலைகளை நமது நாட்டிலே சென்ற 19 -ஆம் நூற்றாண்டிலே அமைத்தார்கள். இந்தக் கலைத் துறைகளை ஆராயும் இலாகா ஏற்பட்ட பிறகு, நமது இந்திய நாட்டிலே பல நூற்றாண்டுகளாக மறைந்து கிடந்த பல சரித்திர உண்மைகள் புத்தம் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த இலாகாவினால் தமிழ் நாட்டுக்குப் பெரும் பயன் ஏற்பட்டிருக்கிறது. இந்த இலாகாவினால் ஏற்படும் நன்மைகளைப் பொது ஜனங்கள் இன்னும் நன்றாகத் தெரிந்து கொள்ளவில்லை. இவ்வாறு ஓர் இலாகா இருக்கிறது என்பதையே பலர் அறியாமலிருக்கின்றனர். மறைந்துபோன பழைய தமிழரின் கலை, நாகரிகம், சரித்திரம், பண்பாடு முதலியவற்றை அறிந்து கொள்ள இந்த ஆராய்ச்சித் துறை பேருதவியாக இருப்பதுடன் தமிழ் இலக்கியம் சம்பந்தமாகவும் பல செய்திகளைத் தெரிந்து கொள்ளப் பேருதவியாக இருக்கின்றது.
ஆங்கிலேயக் கிழக்கு இந்தியக் கம்பெனியார் இந்திய தேசத்துக்கு வந்து வாணிகம் செய்து கொண்டே சிறிது சிறிதாக நாட்டைக் கைப்பற்றி ஆட்சி செய்யத் தலைப்பட்டனர். ஆங்கில அரசாங்க ஊழியர்களாக இங்கிலாந்து தேசத்திலிருந்து பலர் இங்கு வந்தார்கள். அவர்களில் சர் வில்லியம் ஜோன்ஸ் என்பவரும் ஒருவர். இவர் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமனம் பெற்றுக் கி.பி. 1783 -ஆம் ஆண்டு கல்கத்தாவுக்கு வந்தார்.
இவர் வந்து அலுவல் செய்யத் தொடங்கியபின், கிழக்கிந்திய நாடுகளின் கலைகளையும், இலக்கியங்களையும் ஆராய்ந்தறிய ஒரு நிலையத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கருதினார். அதன்படியே 1784 -ஆம் ஆண்டு ஜனவரித் திங்களில் கல்கத்தா நகரத்தில் ஒரு கூட்டம் கூட்டப்பட்டு ஆசிய சங்கம் என்னும் பெயருடைய ஒரு சங்கம் ஏற்படுத்தப்பட்டது. இந்தச் சங்கத்தின் ஆதரவில் “ஆசிய நாட்டு ஆராய்ச்சிகள்” என்னும் திங்கள் இதழ் ஆங்கிலத்தில் வெளியாயிற்று. பழைய கட்டடங்கள், பழைய சிற்பக்கலைகள், பழைய சாசனங்கள், பழைய நாணயங்கள், இந்திய மொழிகளின் இலக்கியங்கள் முதலியவற்றின் ஆராய்ச்சிக் கட்டுரைகள் இந்தத் திங்கள் இதழில் எழுதப்பட்டன.

Q95

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக ______ கல்கத்தாவுக்கு வந்தார், கிழக்கிந்திய நாடுகளின் ______ இலக்கியங்களையும் ஆராய்ந்தறிய ______ ஏற்படுத்தக் கருதினார்.

  1. (1) சர் வில்லியம் ஜோன்ஸ், கலைகளையும், ஓர் ஆட்சி முறையை
  2. (2) சர் வில்லியம் ஜோன்ஸ், கலைகளையும், ஒரு நிலையத்தைCorrect answer
  3. (3) கிழக்கிந்தியக் கம்பெனியார், கலைகளையும், ஒரு நிலையத்தை
  4. (4) சர் வில்லியம் ஜோன்ஸ், ஆட்சிகளையும், ஒரு நிலையத்தை

Solution.

CBSE answer: (2)

விடை: (2) சர் வில்லியம் ஜோன்ஸ், கலைகளையும், ஒரு நிலையத்தை

  1. சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக 1783-இல் கல்கத்தா வந்தவர் சர் வில்லியம் ஜோன்ஸ்.
  2. அவர் கிழக்கிந்திய நாடுகளின் கலைகளையும் இலக்கியங்களையும் ஆராய ஒரு நிலையத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கருதினார்.

கவனம்: 'ஆட்சி முறை', 'ஆட்சிகள்' என்பன கம்பெனியின் செயலோடு தொடர்புடையவை; ஜோன்ஸின் எண்ணத்தோடு அல்ல.