By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 14 Dec 2024 Paper 1 Tamil Language Question Paper with Answer Key

You are reading the question paper with answers. This is not the timed test: no clock is running and nothing is being scored.

Go to the timed test →

Passage

பத்தியைப் படித்து அதனைத் தொடர்ந்து வரும் வினாக்களுக்குச் சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து எழுதவும். (கே.எண். 91 - 99)

கடைச் சங்க காலத்திலே, தமிழகம் ஆறு நாடுகளாகப் பிரிந்திருந்தது. அந்தப் பிரிவுகள், துளு நாடு, சேர நாடு, பாண்டி நாடு, சோழ நாடு, அருவா நாடு, கொங்கு நாடு என்பவை. இந்த ஆறு நாடுகளில் துளு நாடும், சேர நாடும் மேற்குக் கடற்கரையோரத்தில் இருந்தன. துளு நாடு இப்போது தென் கன்னடம், வட கன்னடம் என்று பெயர் பெற்று மைசூர் இராச்சியத்தோடு இணைந்திருக்கின்றது. சேர நாடு இப்போது கேரள நாடு என்று பெயர் பெற்று மலையாளம் பேசும் நாடாக மாறிப் போயிற்று. தமிழகத்தின் தென் கோடியில் பாண்டி நாடு மூன்று கடல்கள் சூழ்ந்த நாடாக இருந்தது. சோழ நாடும், அருவா நாடும் (தொண்டை நாடு) கிழக்குக் கடற்கரையோரமாக அமைந்துள்ளன. கொங்கு நாடு தமிழகத்தின் இடை நடுவே கடற்கரை இல்லாத உள்நாடாக அமைந்திருந்தது. கொங்கு நாடு இப்போது சேலம் வட்டம், கோயம்புத்தூர் வட்டங்களில் அடங்கியிருப்பதாகக் கூறுவர். பிற்காலத்திலே சுருங்கிப்போன கொங்கு நாட்டைத்தான் அதாவது கோயம்புத்தூர், சேலம் வட்டங்களைத்தான், இக்காலத்தில் கொங்கு நாடு என்று கூறுகின்றோம். சங்க காலத்திலிருந்த கொங்கு நாடு இப்போதுள்ள கொங்கு நாட்டை விட மிகப் பெரியதாக இருந்தது. பிற்காலத்துச் செய்யுள்கள் கொங்கு நாட்டின் எல்லையைக் குறுக்கிக் கூறுகின்றன. ஆனால், மிக முற்காலத்திலே, கடைச்சங்க காலத்தில் கொங்கு நாடு பரந்து விரிவாக இருந்தது.

அதன் தெற்கு எல்லைக்கு அப்பால் பாண்டி நாடு இருந்தது. அதன் மேற்கு எல்லை, சையகிரி (மேற்குத் தொடர்ச்சி) மலைகள், மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு மேற்கே சேர நாடும், துளு நாடும் இருந்தன. கொங்கு நாட்டின் கிழக்கு எல்லைக்கப்பால் சோழ நாடும், தொண்டை நாடும் இருந்தன. அதன் வடக்கு எல்லை, மைசூரில் பாய்கிற காவிரியாறு வரையில் இருந்தது.

இவ்வாறு பழங்கொங்கு நாட்டின் பரப்பும், எல்லையும் மிகப் பெரியதாக இருந்தன. இப்போது பாண்டி நாட்டுடன் இணைந்து இருக்கிற வையாவி நாடு (பழனி மலை வட்டாரம்) அக்காலத்தில் கொங்கு நாட்டின் தென்பகுதியாக இருந்தது. பழனி மலை சங்க காலத்தில் பொதினி என்று வழங்கப் பெற்றது. பொதினி பிற்காலத்தில் பழனியாயிற்று. கொங்கு நாட்டின் தென்கோடியாகிய வையாவி நாட்டை அக்காலத்தில் வையாவிக்கோ என்னும் அரச பரம்பரையார் அரசாண்டார்கள். சேர நாடு, துளு நாடுகளின் கிழக்கே, வடக்குத் தெற்காக நீண்டு கிடக்கிற மேற்குத் தொடர்ச்சி மலைகள் கொங்கு நாட்டின் மேற்கு எல்லைகளாக அமைந்திருந்தன. யானைமலைப் பிரதேசம் கொங்கு நாட்டைச் சேர்ந்திருந்தது.

மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பாலைக்காட்டுக் கணவாய், சேர நாட்டையும், கொங்கு நாட்டையும் இணைத்துப் போக்குவரத்துக்கு உதவியாக இருந்தது. மற்ற இடங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைகள் உயரமாக அமைந்து இரண்டு நாடுகளுக்கும் போக்குவரத்து இல்லாதபடி தடுத்து விட்டன. பாலைக் காட்டுக்கு அருகில் மலைகள் தாழ்ந்து கணவாயாக அமைந்து இருப்பதால் அது சேர நாட்டுக்கும், கொங்கு நாட்டுக்கும் போக்குவரத்துக்கு ஏற்றதாக இருக்கின்றது. இந்தக் கணவாய் வழியாகச் சேர அரசர் படையெடுத்து வந்து கொங்கு நாட்டைக் கைப்பற்றினார்கள்.

Q91

துளு நாடு இப்போது ______ என்றும், ______ என்றும் வழங்கப்படுகிறது, சேர நாடு ______ என்று பெயர் பெற்றுள்ளது.

  1. (1) தென் கன்னடம், வட கன்னடம், மலையாளம்
  2. (2) கன்னட நாடு, சேர நாடு, கேரளம்
  3. (3) மைசூர், கன்னடம், மலையாளம்
  4. (4) தென் கன்னடம், வட கன்னடம், கேரள நாடு
See answer and solution
Q92

கொங்கு நாட்டின் ______ எல்லையில் ______ தொண்டை நாடும் இருந்தன, அதன் ______ காவிரியாறு வரை இருந்தது.

  1. (1) கிழக்கு, சேர நாடும், வடக்கு எல்லை
  2. (2) தெற்கு, சோழ நாடும், வடக்கு எல்லை
  3. (3) கிழக்கு, சோழ நாடும், வடக்கு எல்லை
  4. (4) வடக்கு, சோழ நாடும், தெற்கு எல்லை
See answer and solution
Q93

சேலம், ______ பகுதிகளை அடக்கிய ______ கடற்கரையற்ற ______ அமைந்திருந்தது.

  1. (1) கோயம்புத்தூர், கொங்கு நாடு, எல்லைப் பகுதியாக
  2. (2) கோயம்புத்தூர், இடை நாடு, எல்லை நாடாக
  3. (3) கோயம்புத்தூர், பாண்டிய நாடு, உள்நாட்டில்
  4. (4) கோயம்புத்தூர், கொங்கு நாடு, உள்நாடாக
See answer and solution
Q94

மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு ______ சேர நாடும் ______ இருந்தன.

  1. (1) மேற்கில், கொங்கு நாடும்
  2. (2) கிழக்கில், காவிரியாறும்
  3. (3) கிழக்கில், துளு நாடும்
  4. (4) மேற்குப் பகுதியில், துளு நாடும்
See answer and solution
Q95

பழனி மலை ______ என வழங்கப்பட்டது, கொங்கு நாட்டுடன் சேர்ந்திருந்த பிரதேசம் ______.

  1. (1) பாலைக் காடு, யானை மலை
  2. (2) பொதினி, யானை மலை
  3. (3) வையாவி நாடு, யானை மலை
  4. (4) யானை மலை, பொதினி மலை
See answer and solution
Q96

தமிழகம் கடைச் சங்க காலத்தில் ______ பிரிந்திருந்தது, அவற்றில், ______ , ______ இரண்டும் மேற்குக் கடற்கரையோரம் அமைந்திருந்தன.

  1. (1) ஆறு நாடுகளாகப், துளு நாடு, சேர நாடு
  2. (2) நில அடிப்படையில், சேர நாடு, பாண்டி நாடு
  3. (3) பல நாடுகளாகப், பாண்டி நாடு, சோழ நாடு
  4. (4) ஆறு நாடுகளாகப், கொங்கு நாடு, சேர நாடு
See answer and solution
Q97

______ கொங்கு நாடு ______ இருந்தது, அதன் ______ பாண்டிய நாடு இருந்தது.

  1. (1) கடைச் சங்க காலத்தில், பரந்து விரிவாக, தெற்கு எல்லையில்
  2. (2) கடைச் சங்க காலத்தில், உள்நாட்டுப் பகுதியாக, எல்லைக்குள்
  3. (3) கடைச் சங்க காலத்தில், எல்லையாக, மேற்குப் பகுதியில்
  4. (4) கடைச் சங்க காலத்தில், பரந்து விரிவாக, மேற்கு எல்லையில்
See answer and solution
Q98

தொண்டை நாடு, ______ எனவும் அழைக்கப்பட்டது, ______ தொண்டை நாடும் ______ பகுதியில் அமைந்துள்ளன.

  1. (1) கடல் சூழ்ந்த நாடு, சோழ நாடும், கிழக்குக் கடற்கரைப்
  2. (2) அருவா நாடு, கொங்கு நாடும், உள்நாட்டுப்
  3. (3) அருவா நாடு, சோழ நாடும், கிழக்குக் கடற்கரைப்
  4. (4) சோழ நாடு, அருவா நாடும், கிழக்குக் கடற்கரைப்
See answer and solution
Q99

______ கணவாய் ______ நாட்டுக்கும், ______ நாட்டுக்கும் இடையிலான ______ உதவியாக இருந்தது.

  1. (1) பாலைக் காட்டுக், சேர, சோழ, போக்குவரத்துக்கு
  2. (2) மலைதாழ்ந்த, சேர, கொங்கு, போருக்கு
  3. (3) பாலைக் காட்டுக், சேர, துளு, போக்குவரத்துக்கு
  4. (4) பாலைக் காட்டுக், சேர, கொங்கு, போக்குவரத்துக்கு
See answer and solution

Passage

பாடலைப் படித்து அதனைத் தொடர்ந்து வரும் வினாக்களுக்குச் சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து எழுதவும். (கே.எண். 100 - 105)

புனல்சூழ்ந்து வடிந்து போன
நிலத்திலே புதிய நாளை
மனிதப் பைங்கூழ் முளைத்தே
வகுத்தது! மனித வாழ்வை,
இனியநற்றமிழே நீதான்
எழுப்பினை! தமிழன் கண்ட
கனவுதான், இந்நாள் வையக்
கவின்வாழ்வாய் மலர்ந்ததன்றோ ?

இசையினைக் காணு கின்றேன்;
எண் நுட்பம் காணு கின்றேன்
அசைக்கொணாக் கல்தச் சர்கள்
ஆக்கிய பொருள்காண் கின்றேன்;
பசைப்பொருட் பாடல் ஆடல்
பார்க்கின்றேன்; ஓவியங்கள்
நசையுள்ள மருந்து வன்மை
பலபல நான்காண்கின்றேன்.

Q100

பைங்கூழ், நற்றமிழ் - பிரித்தெழுதுக :

  1. (1) பசும் + கூழ், நற் + தமிழ்
  2. (2) பசுமை + கூழ், நல்ல + தமிழ்
  3. (3) பசிய + கூழ், நல் + தமிழ்
  4. (4) பைங் + கூழ், நன் + தமிழ்
See answer and solution
Q101

புதிய நாளை வகுத்த நிகழ்வு :

  1. (1) பைங்கூழ் வடிந்து புதியதாகுதல்
  2. (2) மனிதர்கள் பசுமையை வகுத்தல்
  3. (3) மனிதர் என்னும் பசும்பயிர் முளைத்தல்
  4. (4) பசும்பயிர் முளைத்து மனிதராகுதல்
See answer and solution
Q102

இந்நாள் உலகின் அழகிய வாழ்வு இதிலிருந்து பூத்தது :

  1. (1) தமிழர்கள் கண்ட கனவிலிருந்து
  2. (2) தமிழர் என்ற பெயரிலிருந்து
  3. (3) இனிய நற்றமிழின் எழுச்சியிலிருந்து
  4. (4) தமிழர் பேசிய மொழியிலிருந்து
See answer and solution
Q103

புதிய நாளைக்கு முன்பு நிலத்தில் ______ சூழ்ந்திருந்தது, பிறகு அது ______.

  1. (1) நீர், முளைத்தது
  2. (2) புனல், முளைத்தது
  3. (3) புனல், பெருகியது
  4. (4) நீர், வடிந்தது
See answer and solution
Q104

இந்த எதுகைகள், இவ்வகை முறையில், பாடலில் அமைந்துள்ளன :

  1. (1) இசை, பாடல், ஆடல், வன்மை
  2. (2) நசை, பசை, அசை, இசை
  3. (3) இசை, எண், அசை, ஆக்கிய
  4. (4) இசை, அசை, பசை, நசை
See answer and solution
Q105

பாடலில் இடம்பெறும் காட்சிக்குரிய கலைகள் :

  1. (1) கல்தச்சு, எண்நுட்பம், ஓவியம்
  2. (2) சிற்பம், மருந்து, எண்நுட்பம்
  3. (3) சிற்பம், ஆடல், ஓவியம்
  4. (4) பாடல், ஆடல், ஓவியம்
See answer and solution
Q106

தாய்மொழியை அடிப்படையாகக் கொண்ட பன்மொழிச் சூழல் வலியுறுத்துவது :

  1. (1) எல்லாக் குழந்தைகளுக்கும் முதன் முதலில் பள்ளிக் கல்வியை ஆங்கிலத்திலும், தாய்மொழியிலும் தொடங்குதல்
  2. (2) எல்லாக் குழந்தைகளும் இந்தியை முதன்மொழியாகப் படித்தல்
  3. (3) எல்லாக் குழந்தைகளுக்கும் முதன்முதலில் பள்ளிக் கல்வியை தாய்மொழியில் தொடங்குதல்
  4. (4) எல்லாக் குழந்தைகளுக்கும் முதன்முதலில் பள்ளிக் கல்வியை அந்தந்த மாநில மொழியில் தொடங்குதல்
See answer and solution
Q107

கீழ்க்கண்டனவற்றுள் எது புரிந்து படித்தல் உத்தி தொடர்பான தவறான கூற்று ?

  1. (1) மேலோட்டம் மீள்வாசிப்பிற்குப்பொருத்தமானது. ஆழ்தல் குறிப்பிட்ட ஒரு கேள்விக்கு பதிலளிக்க உதவுகிறது.
  2. (2) மேலோட்டமாகப் படிப்பதற்கும், ஆழ்ந்து படிப்பதற்கும் உரைகளின் மீதான விரைவான கண்ணோட்டம் தேவைப்படுகிறது.
  3. (3) மேலோட்டம் என்பது விரைவாகப் படிப்பது. ஆழ்தல் என்பது குறிப்பிட்ட ஒன்றை கருத்தூன்றிப் படிப்பது.
  4. (4) மேலோட்டம் ஊன்றிப் படிப்பது. ஆழ்தல் விரைவாகப் படிப்பது.
See answer and solution
Q108

குழந்தைகள் மொழியைப் பயன்படுத்தி தம்மைச் சூழ்ந்துள்ள ஏதேனும் ஒரு பொருளையோ, நிகழ்வையோ கேட்கும்போது கீழ்க்கண்ட எந்த மொழிப்பயன்பாடு மற்றவர்களைவிட அதிகமாகப் பயன்படுகிறது ?

  1. (1) தகவல்
  2. (2) ஹெருஸ்டிக்
  3. (3) கற்பனை
  4. (4) ஒழுங்கு
See answer and solution
Q109

கீழ்க்கண்ட எந்த மனிதமொழிக் கூறுகளின் காரணமாக மனிதர்கள் உடனடி நேரம், காலம் அல்லாத விடயங்களைப் பற்றிப் பேச முடிகிறது ?

  1. (1) அமைப்புச் சார்பு
  2. (2) தனித் தன்மை
  3. (3) இடப்பெயர்ச்சி
  4. (4) தன்னிச்சையான தன்மை
See answer and solution
Q110

புரிந்து படித்தலோடு கீழ்க்கண்ட எந்தத் திறன் சரியானது என்று கருதப்படுவதில்லை ?

  1. (1) நிகழ்வுகளையோ அல்லது கருத்துக்களையோ ஒழுங்குபடுத்துதலும், கணித்தலும்
  2. (2) இதுவரைப் படித்த பகுதிகளை மனதளவில் சுருக்குதல்
  3. (3) தனி எழுத்துக்களின் மீது கவனம் செலுத்துதல்
  4. (4) உள்ளடக்கத்தை எதிர்நோக்குதல்
See answer and solution
Q111

கீழ்க்கண்டனவற்றுள் எது இரண்டாம் மொழி கற்பித்தலில் இலக்கண மொழிபெயர்ப்பு கூறு அல்ல ?

  1. (1) இரண்டாம் மொழியில் நேரடியாகத் தொடர்பு கொள்ளுதல் பிறகு இரண்டு மொழிகளுக்குமான விதிகளை ஒப்பிடுதல்
  2. (2) மொழிச் செயல்பாட்டை விட மொழி அமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தல்.
  3. (3) முதல் மற்றும் இரண்டாம் மொழிக்கான இலக்கண விதிகளை ஒப்பிடுதல்
  4. (4) இரண்டாம் மொழிக்கான இலக்கண விதிகளை படித்தலும், பயிற்சி செய்தலும்
See answer and solution
Q112

ஒரு ஆசிரியர் தன் மாணவர்களை நோக்கி அவர் கேட்ட அவர்களின் சொந்த அனுபவம் சார்ந்த கேள்விக்கு விடையளிக்கும்போது என்ன நினைத்தீர்கள், எப்படி நினைத்தீர்கள் என்பதை வெளிப்படுத்துமாறு கேட்கிறார். இந்த எடுத்துக்காட்டு :

  1. (1) மெட்டா லிங்குவலிஸம்
  2. (2) மெட்டா சிமோடிக்ஸ்
  3. (3) மெட்டா காக்னிஷன்
  4. (4) உருவகம்
See answer and solution
Q113

கீழ்க்கண்டனவற்றுள் எது கிராஷ்ஹன் கருதுகோளுடன் விகோட்ஸ்கியின் கற்றல் மற்றும் மேம்பாட்டிற்கான கோட்பாட்டோடு ஒத்தது ?

  1. (1) இயற்கை ஒழுங்கு கருதுகோள்
  2. (2) உணர்தல் வடிகட்டு கருதுகோள்
  3. (3) உள்ளீடு கருதுகோள்
  4. (4) கண்காணிப்பு கருதுகோள்
See answer and solution
Q114

கம்மின்னின் ‘ஒன்றுக்கொன்று’ சார்ந்த கருதுகோளின்படி கீழ்க்கண்டனவற்றுள் எது ஒன்றோடொன்று சார்ந்தது ?

  1. (1) இரண்டாம் மொழியைப் படித்தலும், எழுதுதலும்
  2. (2) முதல், இரண்டாம் மொழிகளில் அடிப்படையான தனித்த திறன்கள்
  3. (3) இரண்டாம் மொழியைப் புரிந்து கொள்ளுதலும், வெளிப்படுத்துதலும்
  4. (4) முதல், இரண்டாம் மொழிகளில் புரிதல் சார்ந்த வல்லமை
See answer and solution
Q115

படித்தல் திறனுக்கு எழுத்துக்களில் தொடங்குவதை விட சொற்களிலும், கதைகளிலும் தொடங்குவது நன்று என்பதை கீழ்க்கண்ட எந்த கூற்று நியாயப்படுத்தவில்லை ?

  1. (1) சொற்களும், உரைப்பகுதிகளும் மிகவும் சுவாரஸ்யமானவை. எழுத்துக்களால் இது முடியாது.
  2. (2) தனித்த எழுத்துக்களை மனனம் செய்வது சொற்களை மனனம் செய்வதைவிட கடினமானது.
  3. (3) முதலில் படிக்கத் தொடங்குபவர்கள் சிறிய தொகுதியைவிட பெரிய தொகுதியில் கவனம் செலுத்துவர்.
  4. (4) சொற்களும், உரைப்பகுதிகளும் ஒரு கருத்தை உருவாக்கும். ஆனால், வெறும் எழுத்துக்களால் இது முடியாது.
See answer and solution
Q116

மொழிகள் மற்றும் வட்டார வழக்குகள் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளுள் எது மொழியியல் அடிப்படையில் சரியானது ?

  1. (1) மொழிக்கு என தனித்த எழுத்து வடிவம் உண்டு. வட்டார வழக்குகளுக்கு அது கிடையாது.
  2. (2) மொழிகளுக்கும், வட்டார வழக்குகளுக்குமிடையில் மொழியியல் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட வேறுபாடுகள் ஏதும் இல்லை.
  3. (3) மொழி எழுதப்பட்ட இலக்கியத்தைக் கொண்டது. வட்டார வழக்குகள் வாய்மொழி வழக்கை அடிப்படையாகக் கொண்டது.
  4. (4) மொழிகளும், வட்டார வழக்குகளும் மொழியியல் அடிப்படையில் வேறுபட்டது. ஆனால் புவியியல் அடிப்படையில் ஒற்றுமையுடையது.
See answer and solution
Q117

வீரா ஒரு ஏழு மாதக் குழந்தை. அக்குழந்தை உயிர், மெய் எழுத்துக்களைச் சேர்த்துப் பேச குரல் எழுப்புகிறது. அக்குழந்தை தொடர்புகொள்ள முற்படுவது கீழ்க்கண்டனவற்றுள் எதில் அடங்கும் ?

  1. (1) கூலிங்
  2. (2) மொழியியல் பேச்சு
  3. (3) ஒலிக் குறிப்புகள்
  4. (4) தெளிவற்ற பேச்சு
See answer and solution
Q118

‘சொற்பிரயோகம்’ என்றால் என்ன ?

  1. (1) பேசும்போதும், எழுதும்போதும் பயன்படுத்துகின்ற சொற்கள்
  2. (2) வாசிப்பவருக்குப் புதிதாகத் தோன்றும் சொற்கள்
  3. (3) கேட்டவுடன் புரிந்துகொள்கின்ற சொற்கள்
  4. (4) வரிகளுக்கு அப்பால் கவனிக்கப்படுகின்ற சொற்கள்
See answer and solution
Q119

மொழி கையகப்படுத்தும் சாதனம் என்ற கருத்தாக்கத்தால் கீழ்க்கண்டனவற்றுள் எந்த ஒன்று விளக்கப்படவில்லை ?

  1. (1) குழந்தைகள் எவ்வாறு உருவக மொழியைக் கற்கிறார்கள்.
  2. (2) ஏன் குழந்தைகளின் மொழி வெளிப்பாடு தாங்கள் பெறும் தகவல்களை விட அதிகமாக உள்ளது.
  3. (3) குழந்தைகள் எவ்வாறு தாய்மொழி கற்கின்றார்கள்.
  4. (4) குழந்தைகள் எவ்வாறு குறைந்தது 4-5 ஆண்டுகளில் மொழியைக் கற்க முடிகிறது.
See answer and solution
Q120

ஒரு பேச்சுக்குழுவில் S என்பது இருவேறுபட்ட சமூகப் பொருளாதார பின்புலம் கொண்ட மக்களால் வேறு வேறு விதமாக உச்சரிக்கப்படுகிறது. இந்த எடுத்துக்காட்டு :

  1. (1) ஒரு சமூகக் கலாச்சார மாறி
  2. (2) ஒரு சமூக உளவியல் மாறி
  3. (3) ஒரு சமூக மொழியியல் மாறி
  4. (4) ஒரு நடைமுறை சார்ந்த மாறி
See answer and solution

Passage

பத்தியைப் படித்து அதனைத் தொடர்ந்து வரும் வினாக்களுக்குச் சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து எழுதவும். (கே.எண். 121 - 128)
ஒலி, சொல், வாக்கியம் ஆகிய மூன்று கூறுகளைக் கொண்டது மொழி. ஒலிக்குத் தரும் குறியீடு எழுத்து, சொல் உணர்த்துவது பொருள். வாக்கியம் உணர்த்துவது விரிவான பொருள். அவ்வகையில் அர்த்தம் அல்லது பொருள் சொல்லோடும், வாக்கியத்தோடும் தொடர்புடையது. ஒவ்வொரு மொழியும் தனக்கென்று தனியான மொழியமைப்பைக் கொண்டுள்ளது. மொழி அமைப்பில் மொழிகளுக்கு இடையில் ஒற்றுமைக் கூறுகளும், வேற்றுமைக் கூறுகளும் உள்ளன.
மொழிக்கு அடிப்படை ஒலியாகும். ஒலியைத் தோற்றுவிப்பன நம் உடல் உறுப்புகளே. அவற்றைப் பேச்சுறுப்புகள் அல்லது ஒலி உறுப்புகள் என்று குறிப்பிடுவோம். உதடு, பல், அண்ணம், உள்நாக்கு, காற்றுக் குழல், குரல்வளை, தொண்டை போன்ற உறுப்புகள் ஒலியைத் தோற்றுவிக்கின்றன. இன்ன ஒலியுறுப்பு இன்ன முறையில் இயங்குவதால் இன்ன ஒலி பிறக்கிறது என்று விளக்குவது ஒலியியலாகும். நுரையீரலில் இருந்து வெளிப்படும் காற்று ஒலி உறுப்புகளால் எவ்வகைத் தடையும் இன்றி வெளிவரும்போது உண்டாகும் ஒலி உயிரொலி எனப்படும். ஒலி உறுப்புகளால் தடுத்து வெளிப்படல், உரசுதல் போன்றவை நிகழ்ந்தால் அது மெய்யொலி எனப்படும். அவ்வகையில் தமிழில் பேச்சொலிகள் உயிரொலி, மெய்யொலி என்று இரண்டாக அமைந்துள்ளன.
ஒலிக்கு வடிவம் தரும்போது உருவானது எழுத்து. எழுத்து முதலொலியை ஒட்டியே அமையும். ஆகையால் ஒரு மொழியின் எழுத்துகளைக் கொண்டு மற்றொரு மொழியை எழுதும்போது தடங்கல் தோன்றுகிறது. இதைத் தவிர்க்க உலக ஒலி எழுத்து என்ற முறை உருவாக்கப்பட்டது. பிறமொழிகளை எழுதும்போது உலக ஒலி எழுத்து முறையைப் பின்பற்றி எழுதும் முறை உலகெங்கும் பின்பற்றப்படுகிறது. தமிழர் ஒலிகளை அளவுக்கு உட்படுத்திப் பிரித்தனர். மாத்திரை என்பது ஒலிப்பு அளவைக் குறிக்கும். ஒலிக்கும் அளவு ஒன்று என்றாலும், ஒலிக்கும் முறை மனிதருக்கு மனிதர் வேறுபடுகிறது. ஒரு மனிதரது குரல் மற்றொரு மனிதரது குரலிலிருந்து வேறுபடுவதற்கு ஒலிப்பு முறை வேறுபாடும் ஒரு காரணமாகும். உச்சரிப்பைப் பயிற்றுவிக்கும் அகராதிகள் உள்ளன, பயிற்சி முறைகள் உள்ளன.

Q121

ஒரு குறிப்பிட்ட __________, ஓர் __________ இயங்கும் முறையை __________ விளக்குகிறது.

  1. (1) எழுத்து பிறக்க, ஒலியுறுப்பு, ஒலியியல்
  2. (2) ஒலி பிறக்க, ஒலியுறுப்பு, ஒலியியல்
  3. (3) சொல் பிறக்க, உடலுறுப்பு, ஒலியியல்
  4. (4) மொழி பிறக்க, ஒலியுறுப்பு, ஒலியியல்
See answer and solution
Q122

__________ முறையின் நோக்கம் ஒரு மொழியை __________ எழுத்தில் எழுதும்போது ஏற்படும் __________ நீக்குவது.

  1. (1) உலகப் பொது, மற்றமொழி, உறவை
  2. (2) உலக ஒலி எழுத்து, இரண்டு வகை, தடையை
  3. (3) உலக ஒலி எழுத்து, மற்றமொழி, இணைப்பை
  4. (4) உலக ஒலி எழுத்து, மற்றமொழி, தடங்கலை
See answer and solution
Q123

ஒலிப்பு அளவு தமிழில் __________ எனப்படுகிறது, __________ ஒவ்வொருவருக்கும் ஒன்று பட்டாலும் __________ வேறுபடுகிறது.

  1. (1) உயிரொலி, ஒலிக்கும் அளவு, ஒலிக்கும் முறை
  2. (2) மாத்திரை, ஒலிக்கும் முறை, ஒலிக்கும் அளவு
  3. (3) ஒலியியல், ஒலிக்கும் அளவு, ஒலிக்கும் முறை
  4. (4) மாத்திரை, ஒலிக்கும் அளவு, ஒலிக்கும் முறை
See answer and solution
Q124

மொழிகளுக்கு இடையில் __________ கூறுகளும், __________ கூறுகளும் __________ உள்ளன.

  1. (1) எழுத்துக், ஒலிப்புக், மொழி அளவில்
  2. (2) தனித்த, கலந்த, மொழி அமைப்பில்
  3. (3) ஒற்றுமைக், வேற்றுமைக், மொழி அமைப்பில்
  4. (4) ஒற்றுமைக், உருவக், ஒலி அமைப்பில்
See answer and solution
Q125

காற்று __________ வெளிப்பட்டு __________ தடைப்படாமல் வெளிப்படும்போது __________ உண்டாகிறது.

  1. (1) நுரையீரலிலிருந்து, ஒலியுறுப்புகளால், மெய்யொலி
  2. (2) நுரையீரலிலிருந்து, ஒலிப்புத், உயிர்மெய்
  3. (3) நுரையீரலிலிருந்து, அழுத்தம், உயிரொலிப்பு
  4. (4) நுரையீரலிலிருந்து, ஒலியுறுப்புகளால், உயிரொலி
See answer and solution
Q126

__________ என்பது ஒலிக்கான __________; பொருளை __________ சொல்; வாக்கியம் __________ உணர்த்துவது.

  1. (1) எழுத்து, பொருள், விளக்குவது, விரிவான பொருள்
  2. (2) எழுத்து, விளக்கம், உணர்த்துவது, விரிவான பொருளை
  3. (3) சொல், குறியீடு, உணர்த்துவது, குறியீடாக
  4. (4) எழுத்து, குறியீடு, உணர்த்துவது, விரிவான பொருளை
See answer and solution
Q127

மொழிக்கு அடிப்படையான __________ தோற்றுவிப்பவை __________, அவை __________ அல்லது __________ எனப்படுகின்றன.

  1. (1) ஒலியைத், உடல் உறுப்புகள், பேச்சுறுப்புகள், ஒலி உறுப்புகள்
  2. (2) ஒலியைத், உடல் உறுப்புகள், பேச்சுறுப்புகள், செயலுறுப்புகள்
  3. (3) எழுத்தைத், உடல் உறுப்புகள், பேச்சுறுப்புகள், ஒலி உறுப்புகள்
  4. (4) பொருளைத், உடல் உறுப்புகள், பேச்சுறுப்புகள், ஒலி உறுப்புகள்
See answer and solution
Q128

__________ வடிவம் தரும் __________ முதலொலியை __________ அமைவதால், ஒரு மொழியின் எழுத்துக்களைக் கொண்டு மற்றொரு மொழியை எழுதுவதில் __________ ஏற்படுகிறது.

  1. (1) ஒலிக்கு, எழுத்து, ஒட்டி, தடங்கல்
  2. (2) மொழிக்கு, எழுத்து, அடுத்து, உறவு
  3. (3) ஒலிக்கு, எழுத்து, உள்ளடக்கி, தடங்கல்
  4. (4) உயிரொலிக்கு, மெய்யெழுத்து, ஒட்டி, தடங்கல்
See answer and solution

Passage

பத்தியைப் படித்து அதனைத் தொடர்ந்து வரும் வினாக்களுக்குச் சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து எழுதவும். (கே.எண். 129 - 135)
புதினம் தமிழிலக்கியத்திற்குக் கிடைத்த புதிய வரவு, மேலை நாட்டினர் தொடர்பால் தமிழ் மொழி அடைந்த நன்மைகளில் இதுவும் ஒன்று. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய புதின இலக்கியம், இருபதாம் நூற்றாண்டில் பெரும் வளர்ச்சியைக் கண்டது. புதினங்களைத் துப்பறியும் புதினங்கள், சமூகப் புதினங்கள், வரலாற்றுப் புதினங்கள், அறிவியல் புதினங்கள், வட்டாரப் புதினங்கள், மொழிபெயர்ப்புப் புதினங்கள், தழுவல் புதினங்கள் என ஆறு வகையாகப் பிரித்தறியலாம். தனிமனிதனுக்கும், சமுதாயத்துக்கும் உள்ள உறவைப் புதினங்கள் எடுத்துக்காட்டுகின்றன. வாழ்வு எங்கே, சந்திப்பு போன்ற அகிலனின் புதினங்கள் சாதிக்கொடுமைகளைச் சுட்டிக்காட்டுகின்றன. ரகுநாதனின் பஞ்சும் பசியும் கைத்தறி நெசவாளர் பட்ட கொடுமைகளை எதார்த்த முறையில் சித்தரிக்கும் நாவல். இந்த நாவல் தந்த உந்துதலால் பல்வேறு வகையிலும் ஒடுக்கப்பட்ட பிரிவினராகிய ஏழைகள், மலைவாழ் மக்கள், மீனவர்கள், பெண்கள் போன்றோர் பற்றிய பல நாவல்கள் தமிழில் வெளிவந்தன. அநுத்தமா, மணல் வீடு, ஒரே வார்த்தை, கேட்ட வரம் போன்ற புதினங்களை எழுதியுள்ளார். தமிழ் நாவலாசிரியர்களில் தன் கருத்தைப் பாத்திரங்களின் மொழியில் வெளிப்படுத்தக் கூடிய ஆற்றல் மிக்க ஒரு எழுத்தாளர் ஜெயகாந்தன். விடுதலைக்குப் பின்னர் முதலாளித்துவம் வளரத் தொடங்கியது. இந்த நிலையில் தோன்றியுள்ள சமுதாயக் கொடுமைகள், சமுதாயப் பிரச்சினைகள் பல. பொன்னீலன் எழுதிய கரிசல் என்ற புதினம் கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவர் கேட்பாரற்ற அதிகாரத்துடன் தம்முடைய நிலத்தில் உழைக்கிற மக்களுக்குப் போதிய கூலி கொடுக்காமல் வதைத்து, அடக்கு முறையைக் கையாளும் பொழுது, கிராம மக்கள் விழிப்படைந்து உரிமைக் குரல் கொடுப்பதைக் கதைப் பொருளாகக் கொண்டது.

Q129

தமிழிலக்கியத்திற்கு __________ புதிதாக வந்த இலக்கிய __________ மேலைநாட்டுத் தொடர்பால் __________ அடைந்த __________ ஒன்று.

  1. (1) புதினம், வளர்ச்சி, நன்மை, வடிவங்களில்
  2. (2) புதினம், கோட்பாடு, தமிழ்மொழி, நன்மைகளில்
  3. (3) புதினம், வடிவம், தமிழ்மொழி, நன்மைகளில்
  4. (4) புதினம், வடிவம், இலக்கியம், முறைகளில்
See answer and solution
Q130

சாதிக் கொடுமைகளைச் சுட்டிக் காட்டும் __________ இரண்டு புதினங்கள் __________, __________ ரகுநாதனின் __________ கைத்தறி நெசவாளர் வாழ்வின் கொடுமைகளைச் சொல்வது.

  1. (1) அகிலனின், பஞ்சும் பசியும், வாழ்வு எங்கே, சந்திப்பு
  2. (2) ஜெயகாந்தனின், வாழ்வு எங்கே, சந்திப்பு, பஞ்சும் பசியும்
  3. (3) அநுத்தமாவின், வாழ்வு எங்கே, சந்திப்பு, பஞ்சும் பசியும்
  4. (4) அகிலனின், வாழ்வு எங்கே, சந்திப்பு, பஞ்சும் பசியும்
See answer and solution
Q131

__________ புதினங்கள், __________ புதினங்கள், __________ புதினங்கள், __________ புதினங்கள், வட்டாரப் புதினங்கள் தமிழில் நேரடியாக, பிறமொழித் தொடர்பின்றி எழுதப்படுபவை.

  1. (1) மொழிபெயர்ப்புப், தழுவல், வரலாற்றுப், அறிவியல்
  2. (2) துப்பறியும், வாழ்க்கைப், வரலாற்றுப், தழுவல்
  3. (3) துப்பறியும், அரசியல், திரைக்கதைப், வரலாற்றுப்
  4. (4) துப்பறியும், சமூகப், வரலாற்றுப், அறிவியல்
See answer and solution
Q132

__________ தன் __________, வழியாகத் தன் __________ வெளிப்படுத்திய எழுத்தாளர் என இங்குக் குறிப்பிடப்படுகிறார்.

  1. (1) ஜெயகாந்தன், பாத்திரங்களின் மொழி, கருத்தை
  2. (2) ஜெயகாந்தன், புதினங்கள், கருத்தை
  3. (3) அகிலன், பாத்திரங்கள், கருத்தை
  4. (4) ரகுநாதன், பாத்திரங்கள், கருத்தை
See answer and solution
Q133

__________, __________, மீனவர்கள் போன்ற __________ மக்களின் வாழ்க்கை பற்றிய நாவல்கள் வெளிவர உந்துதலாக அமைந்தது __________.

  1. (1) ஏழைகள், மலைவாழ் மக்கள், சிறுபான்மை, மணல் வீடு
  2. (2) ஏழைகள், மலைவாழ் மக்கள், வீடற்ற, பஞ்சும் பசியும்
  3. (3) ஏழைகள், மலைவாழ் மக்கள், ஒடுக்கப்பட்ட, பஞ்சும் பசியும்
  4. (4) நெசவாளர்கள், மலைவாழ் மக்கள், ஒடுக்கப்பட்ட, வாழ்வு எங்கே
See answer and solution
Q134

__________ எழுதிய __________ நிலத்தில் __________ தம்முடைய __________ குரல் கொடுப்பதைக் கதைப் பொருளாகக் கொண்டுள்ளது.

  1. (1) பொன்னீலன், பஞ்சும் பசியும், உழைக்கும் மக்கள், உரிமைக்குக்
  2. (2) பொன்னீலன், மணல் வீடு, உழைக்கும் மக்கள், அதிகாரத்துக்குக்
  3. (3) ஜெயகாந்தன், கரிசல், உழைக்கும் மக்கள், உரிமைக்குக்
  4. (4) பொன்னீலன், கரிசல், உழைக்கும் மக்கள், உரிமைக்குக்
See answer and solution
Q135

__________, __________, கேட்ட வரம் புதினங்களை எழுதியவர் __________.

  1. (1) வாழ்வு எங்கே, மணல் வீடு, அகிலன்
  2. (2) மணல் வீடு, ஒரே வார்த்தை, அநுத்தமா
  3. (3) வாழ்வு எங்கே, சந்திப்பு, அநுத்தமா
  4. (4) மணல் வீடு, ஒரே வார்த்தை, அகிலன்
See answer and solution
Q136

கீழ்கண்டனவற்றுள் எது மதிப்பீடு குறித்த சரியான கூற்று அல்ல ?

  1. (1) மாணவர்களின் வேகமான முன்னேற்றத்தை பற்றி அறிய உதவுகிறது.
  2. (2) இது ஆசிரியரால் மட்டுமே முடியும்
  3. (3) மாணவர்களின் கற்றல் முன்னேற்றத்தை ஒட்டுமொத்தமாக வழங்குகிறது.
  4. (4) மாணவர்களின் கற்றல் திறனைப் பற்றி ஒரு திடமான சான்றை வழங்குகிறது.
See answer and solution
Q137

கற்றலில் விலக்கலை அறிய பிழை ஆய்வு முக்கியமானது. ஏனென்றால் __________.

  1. (1) பிழைகள், கற்போரின் புரிந்து கொள்ளாமையை காட்டுகின்றன.
  2. (2) பிழைகள் கருத்துருவாக்கத்தையும், நோக்கத்தையும் காட்டுகின்றன.
  3. (3) கற்போரின் பொறுப்பற்ற நடத்தையினால் பெரும்பான்மையான பிழைகள் ஏற்படுகின்றன.
  4. (4) பிழைகள் என்பது கற்றல் படிநிலையின் சாளரங்கள்.
See answer and solution
Q138

கீழே கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் எது ஸ்டீபன் கிராஷ்ஹனால் வழங்கப்பட்ட கண்காணிப்பு கருதுகோள் தொடர்பான உண்மை அல்ல ?

  1. (1) என்ன படிக்கப்பட்டது என்பதைக் கண்காணிக்க இயல்பாகக் கற்றல் உதவுகிறது.
  2. (2) போதுமான விதிகளைப் பற்றிய அறிவையும், போதுமான நேரத்தையும் கற்போர் மட்டுமே கண்காணிக்க முடியும்.
  3. (3) இது இரண்டாம் மொழியை இயல்பாகக் கற்றல் சூழலில் பயன்படுகிறது.
  4. (4) இது இயல்பாகக் கற்றல், படித்தல் என இவ்விரண்டிற்கும் இடையிலான உறவின் அடிப்படையில் தொடர்புடையது.
See answer and solution
Q139

கீழ்க்கண்டனவற்றுள் எது வளர்நிலை மதிப்பீட்டிற்கான உதாரணம் அல்ல ?

  1. (1) ஆண்டு முழுவதும் பத்தியைப் படித்து, புரிந்து விடையளித்தல் மற்றும் சிறிய அளவிலான இடுபணிகள்
  2. (2) ஆண்டு முழுவதும் சிறிய அளவிலான தேர்வு மற்றும் மீள் சரிபார்ப்பு என மதிப்பீட்டுத் திட்டங்கள்
  3. (3) ஆண்டு முழுவதும் தொடர்ச்சியான வாய்மொழித் தேர்வு, எழுதுதல் தேர்வு, பங்கேற்றல் போன்ற இடுபணி
  4. (4) ஆண்டின் இறுதியில் பருவத்தேர்வு
See answer and solution
Q140

குறிப்பிட்டதொரு உரைப்பகுதியை தொடக்க நிலையில் படிப்பவர் தன்னுடைய கலாச்சாரக் கூறுகள், கருத்து இவை பற்றிய பொது அறிவைப் பயன்படுத்துவது :

  1. (1) கீழ் - மேல் அணுகுமுறை
  2. (2) கீழ் - கீழ் அணுகுமுறை
  3. (3) மேல் - கீழ் அணுகுமுறை
  4. (4) மேல் - மேல் அணுகுமுறை
See answer and solution
Q141

சொற்களஞ்சியப் பெருக்கத்திற்கும், உரை புரிதலுக்கும் கீழ்க்கண்டனவற்றுள் எது உதவுவது இல்லை ?

  1. (1) நுதல்பொருள் (theme) படம்
  2. (2) பட அகராதிகள்
  3. (3) சொற்படம்
  4. (4) நெடுங்கணக்கு உரைபடம்
See answer and solution
Q142

கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு வகையான மதிப்பீட்டு முறைகளில் எது சரியானது ?

  1. (1) வளர்நிலை மதிப்பீடு கற்றலின் நிலைகளை தொடர்ந்து மதிப்பிடுகிறது.
  2. (2) தொகுநிலை மதிப்பீடு கற்றலின் முன்னும், கற்றலின் போதும் செய்யப்படுகிறது.
  3. (3) வளர்நிலை மதிப்பீடு மொழியின் செயல்பாட்டைவிட அதன் வடிவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.
  4. (4) தொகுநிலை மதிப்பீடு என்பது ஆண்டின் எல்லா விதமான மதிப்பீட்டின் கூடுதல்
See answer and solution
Q143

பாதுகாப்பாக உணரும் கற்றல் சூழலை அல்லது மதிக்கப்படும் கற்றல் சூழலை உருவாக்க கீழ்க்கண்ட எது ஒன்று உதவாது ?

  1. (1) பன்மொழி அணுகுமுறையை கையாளுதல்
  2. (2) சில மாணவர்களைக் கொண்டு வகுப்பறையைக் கண்காணித்தல்
  3. (3) சகமாணவர்களுடன் உரையாடுதல் மற்றும் மின்னூட்டம் அளித்தல்
  4. (4) குழு இடுபணி அளித்தல்
See answer and solution
Q144

‘p’ -யை ‘b’ எனவும், ‘6’ -யை ‘9’ எனவும் படித்தலும், எழுதுதலும் பொதுவாகக் குழந்தைகள் செய்யும் தவறு என்பது :

  1. (1) அனோமியா
  2. (2) டைலெக்சியா
  3. (3) ஸ்டட்டர்ஸ்
  4. (4) அபாசியா
See answer and solution
Q145

அடிப்படையான ஒருவருக்கொருவர் தொடர்பு திறன் என்று அறியப்படுவது :

  1. (1) அன்றாட வாழ்வில் மொழிப் பயன்பாடு
  2. (2) இண்டர் லாங்குவேஜ்
  3. (3) உயரடுக்கு மொழித்திறன்
  4. (4) மொழித்தடை
See answer and solution
Q146

இந்தி பேசும் மாணவர்களுக்கு ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகக் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் விதிகளை ஏதும் கூறாமல் அவர்களுக்கு ஆங்கிலத்தில் சிறிது உரையாடும் வாய்ப்பையும், சூழலையும் வழங்குகிறார். உரையாடலில் பயன்படுத்த சில உதாரணங்களையும் கொடுக்கிறார். மாணவர்கள் அதிலிருந்து தானாகவே ஆசிரியரின் உதவியோடு விதிகளைக் கண்டறிகின்றனர். இதில் ஆசிரியர் கீழ்க்கண்டனவற்றுள் எந்த அணுகுமுறையை கையாள்கிறார் ?

  1. (1) தொடர்பு அணுகுமுறை
  2. (2) நேரடி அணுகுமுறை
  3. (3) இலக்கண மொழிபெயர்ப்பு அணுகுமுறை
  4. (4) ஒலி-ஊடக அணுகுமுறை
See answer and solution
Q147

கீழ்க்கண்டனவற்றுள் எது தொடர்பாடல் அணுகுமுறையின் ஒரு கூறு அல்ல ?

  1. (1) விளக்கமாகக் கற்பித்தலைவிட இலக்கண விதிகளைக் கண்டறிதல்
  2. (2) தொடர்பாடலுக்கான நம்பிக்கையை வளர்த்தல்
  3. (3) செயலைவிட வடிவத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தல்
  4. (4) சூழ்நிலையில் மொழியைப் பயன்படுத்துதல்
See answer and solution
Q148

பன்மொழிக் கலாச்சாரத்தையும், பன்மொழிச் சூழலையும் பரப்ப எந்த வகையான கதை வகைமை மிகவும் பொருத்தமானது ?

  1. (1) அறிவியல் கதைகள்
  2. (2) நெடுங்கதை
  3. (3) நாட்டுப்புறக் கதைகள்
  4. (4) சுயசரிதை
See answer and solution
Q149

கீழே கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் எது குழந்தை இலக்கியத்திற்கான விரும்பத்தக்க கூறு அல்ல ?

  1. (1) பெரிய எழுத்துரு மற்றும் தெரிந்த வார்த்தைகள்
  2. (2) ஈர்க்கும் படங்கள்
  3. (3) விலங்குகள் பாத்திரம்
  4. (4) அதிகமான நல்லொழுக்க நன்னடத்தை விதிகள்
See answer and solution
Q150

கீழ்க்கண்டனவற்றுள் எது கற்றலின் முக்கியமான களம் அல்ல ?

  1. (1) உணர்தல்
  2. (2) செயல்
  3. (3) புரிதல்
  4. (4) சமூகப் பொருளாதாரம்
See answer and solution