By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 14 Dec 2024 Paper 1 Tamil, Question 98

Topic: Reading comprehension

Passage

பத்தியைப் படித்து அதனைத் தொடர்ந்து வரும் வினாக்களுக்குச் சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து எழுதவும். (கே.எண். 91 - 99)

கடைச் சங்க காலத்திலே, தமிழகம் ஆறு நாடுகளாகப் பிரிந்திருந்தது. அந்தப் பிரிவுகள், துளு நாடு, சேர நாடு, பாண்டி நாடு, சோழ நாடு, அருவா நாடு, கொங்கு நாடு என்பவை. இந்த ஆறு நாடுகளில் துளு நாடும், சேர நாடும் மேற்குக் கடற்கரையோரத்தில் இருந்தன. துளு நாடு இப்போது தென் கன்னடம், வட கன்னடம் என்று பெயர் பெற்று மைசூர் இராச்சியத்தோடு இணைந்திருக்கின்றது. சேர நாடு இப்போது கேரள நாடு என்று பெயர் பெற்று மலையாளம் பேசும் நாடாக மாறிப் போயிற்று. தமிழகத்தின் தென் கோடியில் பாண்டி நாடு மூன்று கடல்கள் சூழ்ந்த நாடாக இருந்தது. சோழ நாடும், அருவா நாடும் (தொண்டை நாடு) கிழக்குக் கடற்கரையோரமாக அமைந்துள்ளன. கொங்கு நாடு தமிழகத்தின் இடை நடுவே கடற்கரை இல்லாத உள்நாடாக அமைந்திருந்தது. கொங்கு நாடு இப்போது சேலம் வட்டம், கோயம்புத்தூர் வட்டங்களில் அடங்கியிருப்பதாகக் கூறுவர். பிற்காலத்திலே சுருங்கிப்போன கொங்கு நாட்டைத்தான் அதாவது கோயம்புத்தூர், சேலம் வட்டங்களைத்தான், இக்காலத்தில் கொங்கு நாடு என்று கூறுகின்றோம். சங்க காலத்திலிருந்த கொங்கு நாடு இப்போதுள்ள கொங்கு நாட்டை விட மிகப் பெரியதாக இருந்தது. பிற்காலத்துச் செய்யுள்கள் கொங்கு நாட்டின் எல்லையைக் குறுக்கிக் கூறுகின்றன. ஆனால், மிக முற்காலத்திலே, கடைச்சங்க காலத்தில் கொங்கு நாடு பரந்து விரிவாக இருந்தது.

அதன் தெற்கு எல்லைக்கு அப்பால் பாண்டி நாடு இருந்தது. அதன் மேற்கு எல்லை, சையகிரி (மேற்குத் தொடர்ச்சி) மலைகள், மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு மேற்கே சேர நாடும், துளு நாடும் இருந்தன. கொங்கு நாட்டின் கிழக்கு எல்லைக்கப்பால் சோழ நாடும், தொண்டை நாடும் இருந்தன. அதன் வடக்கு எல்லை, மைசூரில் பாய்கிற காவிரியாறு வரையில் இருந்தது.

இவ்வாறு பழங்கொங்கு நாட்டின் பரப்பும், எல்லையும் மிகப் பெரியதாக இருந்தன. இப்போது பாண்டி நாட்டுடன் இணைந்து இருக்கிற வையாவி நாடு (பழனி மலை வட்டாரம்) அக்காலத்தில் கொங்கு நாட்டின் தென்பகுதியாக இருந்தது. பழனி மலை சங்க காலத்தில் பொதினி என்று வழங்கப் பெற்றது. பொதினி பிற்காலத்தில் பழனியாயிற்று. கொங்கு நாட்டின் தென்கோடியாகிய வையாவி நாட்டை அக்காலத்தில் வையாவிக்கோ என்னும் அரச பரம்பரையார் அரசாண்டார்கள். சேர நாடு, துளு நாடுகளின் கிழக்கே, வடக்குத் தெற்காக நீண்டு கிடக்கிற மேற்குத் தொடர்ச்சி மலைகள் கொங்கு நாட்டின் மேற்கு எல்லைகளாக அமைந்திருந்தன. யானைமலைப் பிரதேசம் கொங்கு நாட்டைச் சேர்ந்திருந்தது.

மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பாலைக்காட்டுக் கணவாய், சேர நாட்டையும், கொங்கு நாட்டையும் இணைத்துப் போக்குவரத்துக்கு உதவியாக இருந்தது. மற்ற இடங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைகள் உயரமாக அமைந்து இரண்டு நாடுகளுக்கும் போக்குவரத்து இல்லாதபடி தடுத்து விட்டன. பாலைக் காட்டுக்கு அருகில் மலைகள் தாழ்ந்து கணவாயாக அமைந்து இருப்பதால் அது சேர நாட்டுக்கும், கொங்கு நாட்டுக்கும் போக்குவரத்துக்கு ஏற்றதாக இருக்கின்றது. இந்தக் கணவாய் வழியாகச் சேர அரசர் படையெடுத்து வந்து கொங்கு நாட்டைக் கைப்பற்றினார்கள்.

Q98

தொண்டை நாடு, ______ எனவும் அழைக்கப்பட்டது, ______ தொண்டை நாடும் ______ பகுதியில் அமைந்துள்ளன.

  1. (1) கடல் சூழ்ந்த நாடு, சோழ நாடும், கிழக்குக் கடற்கரைப்
  2. (2) அருவா நாடு, கொங்கு நாடும், உள்நாட்டுப்
  3. (3) அருவா நாடு, சோழ நாடும், கிழக்குக் கடற்கரைப்Correct answer
  4. (4) சோழ நாடு, அருவா நாடும், கிழக்குக் கடற்கரைப்

Solution.

CBSE answer: (3)

விடை: (3) அருவா நாடு, சோழ நாடும், கிழக்குக் கடற்கரைப்

  1. பத்தியில் 'அருவா நாடும் (தொண்டை நாடு)' என வருவதால் தொண்டை நாட்டின் மற்றொரு பெயர் அருவா நாடு.
  2. சோழ நாடும் அருவா நாடும் கிழக்குக் கடற்கரையோரமாக அமைந்துள்ளன.

கவனம்: (1)-இன் 'கடல் சூழ்ந்த நாடு' பொருந்தாது; மூன்று கடல்கள் சூழ்ந்த நாடு பாண்டி நாடு.