Q104
இந்த எதுகைகள், இவ்வகை முறையில், பாடலில் அமைந்துள்ளன :
- (1) இசை, பாடல், ஆடல், வன்மை
- (2) நசை, பசை, அசை, இசை
- (3) இசை, எண், அசை, ஆக்கிய
- (4) இசை, அசை, பசை, நசை
பாடலைப் படித்து அதனைத் தொடர்ந்து வரும் வினாக்களுக்குச் சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து எழுதவும். (கே.எண். 100 - 105)
புனல்சூழ்ந்து வடிந்து போன
நிலத்திலே புதிய நாளை
மனிதப் பைங்கூழ் முளைத்தே
வகுத்தது! மனித வாழ்வை,
இனியநற்றமிழே நீதான்
எழுப்பினை! தமிழன் கண்ட
கனவுதான், இந்நாள் வையக்
கவின்வாழ்வாய் மலர்ந்ததன்றோ ?
இசையினைக் காணு கின்றேன்;
எண் நுட்பம் காணு கின்றேன்
அசைக்கொணாக் கல்தச் சர்கள்
ஆக்கிய பொருள்காண் கின்றேன்;
பசைப்பொருட் பாடல் ஆடல்
பார்க்கின்றேன்; ஓவியங்கள்
நசையுள்ள மருந்து வன்மை
பலபல நான்காண்கின்றேன்.
இந்த எதுகைகள், இவ்வகை முறையில், பாடலில் அமைந்துள்ளன :
CBSE answer: (4)
விடை: (4) இசை, அசை, பசை, நசை
கவனம்: (2) அதே சொற்களைத் தலைகீழ் வரிசையில் தருகிறது; கேள்வி 'இவ்வகை முறையில்' என்று வரிசையைக் கேட்கிறது.