By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 14 Dec 2024 Paper 1 Tamil, Question 103

Topic: Poem comprehension

Passage

பாடலைப் படித்து அதனைத் தொடர்ந்து வரும் வினாக்களுக்குச் சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து எழுதவும். (கே.எண். 100 - 105)

புனல்சூழ்ந்து வடிந்து போன
நிலத்திலே புதிய நாளை
மனிதப் பைங்கூழ் முளைத்தே
வகுத்தது! மனித வாழ்வை,
இனியநற்றமிழே நீதான்
எழுப்பினை! தமிழன் கண்ட
கனவுதான், இந்நாள் வையக்
கவின்வாழ்வாய் மலர்ந்ததன்றோ ?

இசையினைக் காணு கின்றேன்;
எண் நுட்பம் காணு கின்றேன்
அசைக்கொணாக் கல்தச் சர்கள்
ஆக்கிய பொருள்காண் கின்றேன்;
பசைப்பொருட் பாடல் ஆடல்
பார்க்கின்றேன்; ஓவியங்கள்
நசையுள்ள மருந்து வன்மை
பலபல நான்காண்கின்றேன்.

Q103

புதிய நாளைக்கு முன்பு நிலத்தில் ______ சூழ்ந்திருந்தது, பிறகு அது ______.

  1. (1) நீர், முளைத்தது
  2. (2) புனல், முளைத்தது
  3. (3) புனல், பெருகியது
  4. (4) நீர், வடிந்ததுCorrect answer

Solution.

CBSE answer: (4)

விடை: (4) நீர், வடிந்தது

  1. 'புனல்சூழ்ந்து வடிந்து போன நிலத்திலே' என்று பாடல் தொடங்குகிறது.
  2. புனல் என்றால் நீர். நிலத்தை நீர் சூழ்ந்திருந்தது; பிறகு அது வடிந்தது.

கவனம்: (2)-இல் 'புனல்' சரி; ஆனால் முளைத்தது பைங்கூழ், நீர் அல்ல.