By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 14 Dec 2024 Paper 1 Tamil, Question 102

Topic: Poem comprehension

Passage

பாடலைப் படித்து அதனைத் தொடர்ந்து வரும் வினாக்களுக்குச் சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து எழுதவும். (கே.எண். 100 - 105)

புனல்சூழ்ந்து வடிந்து போன
நிலத்திலே புதிய நாளை
மனிதப் பைங்கூழ் முளைத்தே
வகுத்தது! மனித வாழ்வை,
இனியநற்றமிழே நீதான்
எழுப்பினை! தமிழன் கண்ட
கனவுதான், இந்நாள் வையக்
கவின்வாழ்வாய் மலர்ந்ததன்றோ ?

இசையினைக் காணு கின்றேன்;
எண் நுட்பம் காணு கின்றேன்
அசைக்கொணாக் கல்தச் சர்கள்
ஆக்கிய பொருள்காண் கின்றேன்;
பசைப்பொருட் பாடல் ஆடல்
பார்க்கின்றேன்; ஓவியங்கள்
நசையுள்ள மருந்து வன்மை
பலபல நான்காண்கின்றேன்.

Q102

இந்நாள் உலகின் அழகிய வாழ்வு இதிலிருந்து பூத்தது :

  1. (1) தமிழர்கள் கண்ட கனவிலிருந்துCorrect answer
  2. (2) தமிழர் என்ற பெயரிலிருந்து
  3. (3) இனிய நற்றமிழின் எழுச்சியிலிருந்து
  4. (4) தமிழர் பேசிய மொழியிலிருந்து

Solution.

CBSE answer: (1)

விடை: (1) தமிழர்கள் கண்ட கனவிலிருந்து

  1. 'தமிழன் கண்ட கனவுதான், இந்நாள் வையக் கவின்வாழ்வாய் மலர்ந்ததன்றோ' என்பது பாடல் வரி.
  2. வையம் = உலகம், கவின் = அழகு.

கவனம்: (3) பொருந்தாது; இனிய நற்றமிழ் மனித வாழ்வை 'எழுப்பியது'; இன்றைய அழகிய வாழ்வாக 'மலர்ந்தது' தமிழன் கண்ட கனவே.