By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 14 Dec 2024 Paper 1 Tamil, Question 101

Topic: Poem comprehension

Passage

பாடலைப் படித்து அதனைத் தொடர்ந்து வரும் வினாக்களுக்குச் சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து எழுதவும். (கே.எண். 100 - 105)

புனல்சூழ்ந்து வடிந்து போன
நிலத்திலே புதிய நாளை
மனிதப் பைங்கூழ் முளைத்தே
வகுத்தது! மனித வாழ்வை,
இனியநற்றமிழே நீதான்
எழுப்பினை! தமிழன் கண்ட
கனவுதான், இந்நாள் வையக்
கவின்வாழ்வாய் மலர்ந்ததன்றோ ?

இசையினைக் காணு கின்றேன்;
எண் நுட்பம் காணு கின்றேன்
அசைக்கொணாக் கல்தச் சர்கள்
ஆக்கிய பொருள்காண் கின்றேன்;
பசைப்பொருட் பாடல் ஆடல்
பார்க்கின்றேன்; ஓவியங்கள்
நசையுள்ள மருந்து வன்மை
பலபல நான்காண்கின்றேன்.

Q101

புதிய நாளை வகுத்த நிகழ்வு :

  1. (1) பைங்கூழ் வடிந்து புதியதாகுதல்
  2. (2) மனிதர்கள் பசுமையை வகுத்தல்
  3. (3) மனிதர் என்னும் பசும்பயிர் முளைத்தல்Correct answer
  4. (4) பசும்பயிர் முளைத்து மனிதராகுதல்

Solution.

CBSE answer: (3)

விடை: (3) மனிதர் என்னும் பசும்பயிர் முளைத்தல்

  1. நீர் வடிந்த நிலத்தில் 'மனிதப் பைங்கூழ் முளைத்தே' புதிய நாளை வகுத்தது என்று பாடல் கூறுகிறது.
  2. இங்கு மனிதர்களையே பசும்பயிராக உருவகம் செய்கிறார் கவிஞர்.

கவனம்: (4) பயிர் மனிதராக மாறியது என்கிறது; பாடல் அப்படிச் சொல்லவில்லை.