Q105
பாடலில் இடம்பெறும் காட்சிக்குரிய கலைகள் :
- (1) கல்தச்சு, எண்நுட்பம், ஓவியம்
- (2) சிற்பம், மருந்து, எண்நுட்பம்
- (3) சிற்பம், ஆடல், ஓவியம்
- (4) பாடல், ஆடல், ஓவியம்
பாடலைப் படித்து அதனைத் தொடர்ந்து வரும் வினாக்களுக்குச் சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து எழுதவும். (கே.எண். 100 - 105)
புனல்சூழ்ந்து வடிந்து போன
நிலத்திலே புதிய நாளை
மனிதப் பைங்கூழ் முளைத்தே
வகுத்தது! மனித வாழ்வை,
இனியநற்றமிழே நீதான்
எழுப்பினை! தமிழன் கண்ட
கனவுதான், இந்நாள் வையக்
கவின்வாழ்வாய் மலர்ந்ததன்றோ ?
இசையினைக் காணு கின்றேன்;
எண் நுட்பம் காணு கின்றேன்
அசைக்கொணாக் கல்தச் சர்கள்
ஆக்கிய பொருள்காண் கின்றேன்;
பசைப்பொருட் பாடல் ஆடல்
பார்க்கின்றேன்; ஓவியங்கள்
நசையுள்ள மருந்து வன்மை
பலபல நான்காண்கின்றேன்.
பாடலில் இடம்பெறும் காட்சிக்குரிய கலைகள் :
CBSE answer: (3)
விடை: (3) சிற்பம், ஆடல், ஓவியம்
கவனம்: (4)-இன் 'பாடல்' செவியால் கேட்கும் கலை; (1), (2)-இல் உள்ள எண்நுட்பமும் மருந்தும் காட்சிக் கலைகள் அல்ல.