By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 14 Dec 2024 Paper 1 Tamil, Question 132

Topic: Reading comprehension

Passage

பத்தியைப் படித்து அதனைத் தொடர்ந்து வரும் வினாக்களுக்குச் சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து எழுதவும். (கே.எண். 129 - 135)
புதினம் தமிழிலக்கியத்திற்குக் கிடைத்த புதிய வரவு, மேலை நாட்டினர் தொடர்பால் தமிழ் மொழி அடைந்த நன்மைகளில் இதுவும் ஒன்று. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய புதின இலக்கியம், இருபதாம் நூற்றாண்டில் பெரும் வளர்ச்சியைக் கண்டது. புதினங்களைத் துப்பறியும் புதினங்கள், சமூகப் புதினங்கள், வரலாற்றுப் புதினங்கள், அறிவியல் புதினங்கள், வட்டாரப் புதினங்கள், மொழிபெயர்ப்புப் புதினங்கள், தழுவல் புதினங்கள் என ஆறு வகையாகப் பிரித்தறியலாம். தனிமனிதனுக்கும், சமுதாயத்துக்கும் உள்ள உறவைப் புதினங்கள் எடுத்துக்காட்டுகின்றன. வாழ்வு எங்கே, சந்திப்பு போன்ற அகிலனின் புதினங்கள் சாதிக்கொடுமைகளைச் சுட்டிக்காட்டுகின்றன. ரகுநாதனின் பஞ்சும் பசியும் கைத்தறி நெசவாளர் பட்ட கொடுமைகளை எதார்த்த முறையில் சித்தரிக்கும் நாவல். இந்த நாவல் தந்த உந்துதலால் பல்வேறு வகையிலும் ஒடுக்கப்பட்ட பிரிவினராகிய ஏழைகள், மலைவாழ் மக்கள், மீனவர்கள், பெண்கள் போன்றோர் பற்றிய பல நாவல்கள் தமிழில் வெளிவந்தன. அநுத்தமா, மணல் வீடு, ஒரே வார்த்தை, கேட்ட வரம் போன்ற புதினங்களை எழுதியுள்ளார். தமிழ் நாவலாசிரியர்களில் தன் கருத்தைப் பாத்திரங்களின் மொழியில் வெளிப்படுத்தக் கூடிய ஆற்றல் மிக்க ஒரு எழுத்தாளர் ஜெயகாந்தன். விடுதலைக்குப் பின்னர் முதலாளித்துவம் வளரத் தொடங்கியது. இந்த நிலையில் தோன்றியுள்ள சமுதாயக் கொடுமைகள், சமுதாயப் பிரச்சினைகள் பல. பொன்னீலன் எழுதிய கரிசல் என்ற புதினம் கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவர் கேட்பாரற்ற அதிகாரத்துடன் தம்முடைய நிலத்தில் உழைக்கிற மக்களுக்குப் போதிய கூலி கொடுக்காமல் வதைத்து, அடக்கு முறையைக் கையாளும் பொழுது, கிராம மக்கள் விழிப்படைந்து உரிமைக் குரல் கொடுப்பதைக் கதைப் பொருளாகக் கொண்டது.

Q132

__________ தன் __________, வழியாகத் தன் __________ வெளிப்படுத்திய எழுத்தாளர் என இங்குக் குறிப்பிடப்படுகிறார்.

  1. (1) ஜெயகாந்தன், பாத்திரங்களின் மொழி, கருத்தைCorrect answer
  2. (2) ஜெயகாந்தன், புதினங்கள், கருத்தை
  3. (3) அகிலன், பாத்திரங்கள், கருத்தை
  4. (4) ரகுநாதன், பாத்திரங்கள், கருத்தை

Solution.

CBSE answer: (1)

விடை: (1) ஜெயகாந்தன், பாத்திரங்களின் மொழி, கருத்தை

  1. "தன் கருத்தைப் பாத்திரங்களின் மொழியில் வெளிப்படுத்தக் கூடிய ஆற்றல் மிக்க ஒரு எழுத்தாளர் ஜெயகாந்தன்" என்று பத்தி கூறுகிறது.
  2. எனவே வழியாக அமைவது 'பாத்திரங்களின் மொழி'; வெளிப்படுவது 'கருத்து'.

கவனம்: (2) 'புதினங்கள்' வழியாக என்கிறது; பத்தி குறிப்பாகப் பாத்திரங்களின் மொழியைச் சொல்கிறது.