By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 14 Dec 2024 Paper 1 Tamil, Question 146

Topic: Pedagogy of language

Q146

இந்தி பேசும் மாணவர்களுக்கு ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகக் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் விதிகளை ஏதும் கூறாமல் அவர்களுக்கு ஆங்கிலத்தில் சிறிது உரையாடும் வாய்ப்பையும், சூழலையும் வழங்குகிறார். உரையாடலில் பயன்படுத்த சில உதாரணங்களையும் கொடுக்கிறார். மாணவர்கள் அதிலிருந்து தானாகவே ஆசிரியரின் உதவியோடு விதிகளைக் கண்டறிகின்றனர். இதில் ஆசிரியர் கீழ்க்கண்டனவற்றுள் எந்த அணுகுமுறையை கையாள்கிறார் ?

  1. (1) தொடர்பு அணுகுமுறைCorrect answer
  2. (2) நேரடி அணுகுமுறை
  3. (3) இலக்கண மொழிபெயர்ப்பு அணுகுமுறை
  4. (4) ஒலி-ஊடக அணுகுமுறை

Solution.

CBSE answer: (1)

விடை: (1) தொடர்பு அணுகுமுறை

  1. ஆசிரியர் சூழலையும் உரையாடும் வாய்ப்பையும் தருகிறார்; விதிகளை மாணவர்களே பயன்பாட்டிலிருந்து கண்டறிகின்றனர்.
  2. பொருள் சார்ந்த உரையாடல், சூழலில் மொழிப் பயன்பாடு, விதிகளைக் கண்டறிதல் இவை தொடர்பு அணுகுமுறையின் கூறுகள்.

கவனம்: (2) நேரடி முறையும் தாய்மொழியைத் தவிர்க்கும்; ஆனால் அது ஆசிரியர் நடத்தும் பயிற்சிகளை மையமாகக் கொண்டது, மாணவர்களின் சொந்த உரையாடலை அல்ல.