By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 14 Dec 2024 Paper 1 Tamil, Question 127

Topic: Reading comprehension

Passage

பத்தியைப் படித்து அதனைத் தொடர்ந்து வரும் வினாக்களுக்குச் சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து எழுதவும். (கே.எண். 121 - 128)
ஒலி, சொல், வாக்கியம் ஆகிய மூன்று கூறுகளைக் கொண்டது மொழி. ஒலிக்குத் தரும் குறியீடு எழுத்து, சொல் உணர்த்துவது பொருள். வாக்கியம் உணர்த்துவது விரிவான பொருள். அவ்வகையில் அர்த்தம் அல்லது பொருள் சொல்லோடும், வாக்கியத்தோடும் தொடர்புடையது. ஒவ்வொரு மொழியும் தனக்கென்று தனியான மொழியமைப்பைக் கொண்டுள்ளது. மொழி அமைப்பில் மொழிகளுக்கு இடையில் ஒற்றுமைக் கூறுகளும், வேற்றுமைக் கூறுகளும் உள்ளன.
மொழிக்கு அடிப்படை ஒலியாகும். ஒலியைத் தோற்றுவிப்பன நம் உடல் உறுப்புகளே. அவற்றைப் பேச்சுறுப்புகள் அல்லது ஒலி உறுப்புகள் என்று குறிப்பிடுவோம். உதடு, பல், அண்ணம், உள்நாக்கு, காற்றுக் குழல், குரல்வளை, தொண்டை போன்ற உறுப்புகள் ஒலியைத் தோற்றுவிக்கின்றன. இன்ன ஒலியுறுப்பு இன்ன முறையில் இயங்குவதால் இன்ன ஒலி பிறக்கிறது என்று விளக்குவது ஒலியியலாகும். நுரையீரலில் இருந்து வெளிப்படும் காற்று ஒலி உறுப்புகளால் எவ்வகைத் தடையும் இன்றி வெளிவரும்போது உண்டாகும் ஒலி உயிரொலி எனப்படும். ஒலி உறுப்புகளால் தடுத்து வெளிப்படல், உரசுதல் போன்றவை நிகழ்ந்தால் அது மெய்யொலி எனப்படும். அவ்வகையில் தமிழில் பேச்சொலிகள் உயிரொலி, மெய்யொலி என்று இரண்டாக அமைந்துள்ளன.
ஒலிக்கு வடிவம் தரும்போது உருவானது எழுத்து. எழுத்து முதலொலியை ஒட்டியே அமையும். ஆகையால் ஒரு மொழியின் எழுத்துகளைக் கொண்டு மற்றொரு மொழியை எழுதும்போது தடங்கல் தோன்றுகிறது. இதைத் தவிர்க்க உலக ஒலி எழுத்து என்ற முறை உருவாக்கப்பட்டது. பிறமொழிகளை எழுதும்போது உலக ஒலி எழுத்து முறையைப் பின்பற்றி எழுதும் முறை உலகெங்கும் பின்பற்றப்படுகிறது. தமிழர் ஒலிகளை அளவுக்கு உட்படுத்திப் பிரித்தனர். மாத்திரை என்பது ஒலிப்பு அளவைக் குறிக்கும். ஒலிக்கும் அளவு ஒன்று என்றாலும், ஒலிக்கும் முறை மனிதருக்கு மனிதர் வேறுபடுகிறது. ஒரு மனிதரது குரல் மற்றொரு மனிதரது குரலிலிருந்து வேறுபடுவதற்கு ஒலிப்பு முறை வேறுபாடும் ஒரு காரணமாகும். உச்சரிப்பைப் பயிற்றுவிக்கும் அகராதிகள் உள்ளன, பயிற்சி முறைகள் உள்ளன.

Q127

மொழிக்கு அடிப்படையான __________ தோற்றுவிப்பவை __________, அவை __________ அல்லது __________ எனப்படுகின்றன.

  1. (1) ஒலியைத், உடல் உறுப்புகள், பேச்சுறுப்புகள், ஒலி உறுப்புகள்Correct answer
  2. (2) ஒலியைத், உடல் உறுப்புகள், பேச்சுறுப்புகள், செயலுறுப்புகள்
  3. (3) எழுத்தைத், உடல் உறுப்புகள், பேச்சுறுப்புகள், ஒலி உறுப்புகள்
  4. (4) பொருளைத், உடல் உறுப்புகள், பேச்சுறுப்புகள், ஒலி உறுப்புகள்

Solution.

CBSE answer: (1)

விடை: (1) ஒலியைத், உடல் உறுப்புகள், பேச்சுறுப்புகள், ஒலி உறுப்புகள்

  1. "மொழிக்கு அடிப்படை ஒலியாகும். ஒலியைத் தோற்றுவிப்பன நம் உடல் உறுப்புகளே" என்று பத்தி தொடங்குகிறது.
  2. அவற்றைப் "பேச்சுறுப்புகள் அல்லது ஒலி உறுப்புகள்" என்று குறிப்பிடுவதாகவும் உள்ளது.

கவனம்: (2)-இன் 'செயலுறுப்புகள்' பத்தியில் இல்லை; (3), (4) அடிப்படையை எழுத்து, பொருள் என்று தவறாகக் கூறுகின்றன.