நாவல் சமூக ______ அது ______ தன்மையையே மாற்றிவிட்டது.
- (1) சாசனம், இலக்கியத்தின்
- (2) விளைபொருள், படைப்பின்
- (3) கண்ணாடி, வாழ்வின்
- (4) வழிகாட்டி, கதையின்
You are reading the question paper with answers. This is not the timed test: no clock is running and nothing is being scored.
Go to the timed test →பத்தியைப் படித்து அதனைத் தொடர்ந்து வரும் வினாக்களுக்குச் சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து எழுதவும். (கே.எண். 91 - 99)
உலக நாவல் மேதைகளில் ஒருவரான ஹென்றி ஜேம்ஸ் (1843-1916) புனைகதைக்கலை என்னும் கட்டுரையில் ‘‘வாழ்க்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திச் சித்தரிக்க முயல்கிறது என்ற ஒரு காரணத்தினாலேயே நாவல் தொடர்ந்து இயங்கி வருகிறது’’ என்றார். நாவலின் உள்ளார்ந்த இயல்பினையும் அடிப்படையையும் இக்கூற்றில் உணர்த்திவிட்டார் ஜேம்ஸ்.
தனக்கு முந்திய இலக்கிய வடிவங்கள் அனைத்தையும்விட நாவலே சமூக வாழ்க்கையை ஆகக் கூடிய அளவில் சித்தரிக்கிறது. இதனாலேயே மேனாட்டுத் திறனாய்வாளர் சிலர் நாவல் ‘‘சமூகத்தின் மனச்சாட்சிச் சாதனம்’’ என்று கூறுவர். அதாவது நவீனகாலத்து வாழ்க்கை பற்றிய முக்கியமான சிந்தனைகளும் உணர்வுகளும் நாவலிலேயே சிறந்த வெளிப்பாட்டைப் பெறுகின்றன. இதனால் இயல்பாகவே நாவல் சமூகச் சாசனம் ஆகிறது. கற்றோர்க்கு மட்டும் அமைந்திருந்த செய்யுள் இலக்கியமுறை போய் உரைநடையில் புனைகதை எழுதப்படத் தொடங்கியதும் இலக்கியத்தின் தன்மையே மாறிவிட்டதென்பர். நாவலினால் ‘இலக்கியம்’ மக்கள் சார்ந்ததாயிற்று ; பெருந்தொகை வாசகருக்குரியதாயிற்று ; ஜனரஞ்சகமாயிற்று ; போதனைக் கருவியாயிற்று ; தலையாய பொழுது போக்குச் சாதனமாயிற்று ; சுருங்கச் சொன்னால் மற்றெந்த இலக்கியத்தையும் விட நாவலின் சமூகப் பொறுப்பு அதிகமாயிற்று.
பொருட்செறிவு, வடிவ வார்ப்பு, உத்திப் பிரயோகம் என்பவற்றில் ஆசிரியருக்கு ஆசிரியர் வேறுபாடுண்டு. இயற்கைப் பண்பும் யதார்த்தமும் மயங்கும் நாவல்களும் உண்டு. ஆயினும் இவை நுணுக்க விவரங்களே.
நாவல் வரலாற்றில் அரைப்பங்கு இப்போக்குக்கு விளக்கமாயமைந்திருக்கிறது.
நாவல் சமூக ______ அது ______ தன்மையையே மாற்றிவிட்டது.
______ சமூக வாழ்க்கையைச் சித்தரிப்பதால் அதை சமூகத்தின் ______ எனலாம்.
இலக்கணக் குறிப்பு தருக : உள்ளார்ந்த இயல்பு.
இலக்கணம் தருக : இயற்கை பண்பும் யதார்த்தமும்
அரைபங்கு நாவல்கள் ______ நிறைந்தவையாகும்.
மற்ற இலக்கிய ______ விட நாவல் சமூக பொறுப்பு ______ உடையது.
______ இலக்கியத்தை ______ ஆனது என மாற்றியுள்ளது.
வாழ்க்கையை ______ இலக்கிய வடிவம் ______.
நாவல்கள் நவீனகால வாழ்வு பற்றிய ______, ______ வெளிப்படுத்துகின்றன.
பாடலைப் படித்து அதனைத் தொடர்ந்து வரும் வினாக்களுக்குச் சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து எழுதவும். (கே.எண். 100 - 105)
கூதிர்ப் பருவத்தில் கூதிர்க்காற் றடிக்கும்
மிதந்து செல்லும் மேகம் சூற்கொளும்
குளத்து மீனெலாம் குஞ்சு பொரிக்கும்
வெப்பங் கொடுக்கும் பருவமே வேனிலாம்
இளவேனில் முதுவேனில் இரண்டும் - செங்கதிர்க்
கோபத்தில் தோன்றும் குழந்தைக ளாகும்.
சித்திரை வைகாசி இளவேனிற் காலம்
குயில் கூவு தற்கிது மிகவனு கூலம்
எச்சில் வண்டுகள் இப்பரு வத்தில்
விரிந்த பூக்களில் விழித்தெழுந் திருக்கும்.
ஆவணி புரட்டாசி கார்கால மாகும்.
அறுபது நாட்களே அதன்வய தாகும்.
சீர்கொண்டு விளங்கும் கார்காலந் தன்னில்
நீர்கொண்ட மேகம் ஊர்வலம் போகும்.
வந்து வந்து வாடைக்காற் றடிக்கும்.
முன்பனிக் காலம் முடிந்த பின்னர்ப்
பின்பனிக் காலம் உடனே பிறக்கும்
இன்னல் விளைக்கும் இக்காலந் தன்னில்
உத்தர வின்றி உலவைக்காற் றடிக்கும்.
முற்றிய வெப்பமே முதுவேனிற் பருவமாம்.
கோடை வந்ததும் கோடைக்காற் றடிக்கும்.
ஏமாற்றும் கானல்நீர் எங்கும் தோன்றும்.
வலியனும், காடையும், வானம் பாடியும்,
மகிழ்ச்சி கொள்ளும். மல்லி மலரும்.
மாதிரி காட்டிப் பாதிரி பூக்கும்.
பொருந்தாத இணைகள் :
சித்திரை வைகாசி - இலக்கணம் தருக.
எதுகை இணையைக் காண்க :
பொருந்தாததைக் காண்க.
சீர்கொண்டு விளங்கும் ______, காடை மகிழும் ______.
வந்து வந்து - இலக்கணம் தருக :
ஒரு குழந்தை ஒரு பாடத் தலைப்பு பற்றிய பிரைன்ஸ்டோர்மிங் செய்த பிறகும் ஒரு பத்தி எழுத முடியாத நிலையில் இருக்கிறாள். ஆனால் பெரியவர்களோ உடன் கற்பவர்களோ வழி காட்டும் போது எழுத முடிகிறது. இந்த வழி காட்டுதல் இவ்வாறு அழைக்கப்படுகிறது :
ஒரு குழந்தை தனது உயர்நிலை மூளைத்திறன் செயல்பாடு அதாவது அறிவுத்திறன் அல்லது காரண காரிய அறிவுத்திறன் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டிய கற்றல்முறை :
ஒரு மாணவர் சில சொற்களைத் தவறாக உச்சரித்த போதும் ‘ஒட்டுமொத்த மொழிப் பயன்பாடு’ குறித்து ஓர் ஆசிரியர் என்ற முறையில் பாராட்டுகிறீர்கள். நீங்கள் வகுப்பில் பயன்படுத்தும் இந்த அணுகுமுறை :
நீங்கள் ஹிந்தி பேசும் ஆசிரியர், நீங்கள் பஞ்சாப் பகுதியில் தொடக்கப் பள்ளி ஆசிரியராகப் பணி அமர்த்தப்படுகிறீர்கள். அப்பகுதியின் மொழி உங்களுக்குத் தெரியாது, அதனால் நீங்கள் செய்ய வேண்டியது :
ஒரு பாடப் பனுவலை உள்ளூடிப் படித்து அல்லது கூர்மையாகப் படித்து அதிலிருந்து குறிப்பிட்ட தகவலைத் தேடி அறியப் பயன்படும் புரிதல் திறன் :
மொழி கற்பித்தலில் குறையறியும் தேர்வின் நோக்கம் :
பாடப் புத்தகம் பற்றிய கருத்தில் எது சரியானது ?
மாணவர்களிடம் பேச்சுமொழியை மேம்படுத்த பின்வருவனவற்றில் எந்த வகுப்பறைப் பயிற்சி உதவுகிறது ?
‘மொழி இடுகுறித்தன்மை கொண்டது’ என்று கூறும்போது அதன் பொருள் :
கண்டறிந்து இலக்கணம் கற்பிக்கும் முறையில் நாம் முதலில் செய்ய வேண்டியது :
உண்மைத் தகவலுக்கு அப்பால் திட்டமிடுதல் அல்லது அனுமானித்தலுக்கான ஒரு முறை :
மாணவர்கள் விரும்புவதை எழுதும் திறனை ஓர் ஆசிரியர் ஊக்கப்படுத்த வேண்டும், இந்த எழுத்துத் திறனின் வழி கிடைக்கும் நன்மை :
ஐந்தாம் வகுப்பு ஆசிரியரான நீங்கள் மாணவர்களிடம் பாடப்பகுதியைத் தெளிவாக முழுமையாகப் படிக்கச் சொல்கிறீர்கள். பிறகு பாடப்பகுதியை அடிப்படையாகக் கொண்ட கேள்விகளுக்குப் பதில் அளிக்கச் சொல்கிறீர்கள். இந்தச் செயல்பாட்டின் வழி மாணவர்களுக்கு எதற்கான ஊக்கத்தைத் தருகிறீர்கள் ?
மொழி தன்வயமாக்கல் இப்போதுதான் நிகழ்கிறது :
வகுப்பறையில் தாய்மொழியை விலக்கி வைத்தல் இந்த முறையின் பண்புக் கூறு :
பத்தியைப் படித்து அதனைத் தொடர்ந்து வரும் வினாக்களுக்குச் சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து எழுதவும். (கே.எண். 121 - 128)
பிற்கால இலக்கியங்கள் என்று கூறியது கி.பி 15 -ம் நூற்றாண்டுக்குப் பிறகு உண்டான இலக்கியங்களை. இக்காலத்தில் காகிதம், பேனா முதலிய எழுது கருவிகள் தோன்றி, ஓலைச் சுவடிகளும் எழுத்தாணிகளும் மறையத் தொடங்கின. அச்சு யந்திரங்கள் ஏற்பட்டு அச்சுப் புத்தகங்களும் தோன்றலாயின. இக்காலத்தில்தான் வசன இலக்கியங்கள் பெருகிவரத் தொடங்கின. மொழிபெயர்ப்பு நூல்களும் அதிகமாகத் தோன்றின. சிந்து, பள்ளு, குறவஞ்சி, நொண்டி, காதல் முதலிய பிற்காலத்துப் பிரபந்த நூல்களும், ஸ்தல புராணங்களும், தேம்பாவணி, இரக்ஷண்ய யாத்திரிகம், சீறாபுராணம் முதலிய கிறிஸ்துவ இஸ்லாமிய நூல்களும், பிரதாப முதலியார் சரித்திரம், கமலாம்பாள் சரித்திரம் முதலிய நாவல் என்னும் நவீன இலக்கியங்களும் ஏராளமாகத் தோன்றின.
முற்காலத்தில் தமிழ் ஐம்பெருங் காவியங்கள் இருந்தன. அவை சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி என்பன. இவற்றில் குண்டலகேசியும், வளையாபதியும் இப்போது மறைந்துவிட்டன.
இப்போது தமிழில் சிறந்த காவியங்களாகக் கருதப்படுபவை, சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, பெருங்கதை, சூளாமணி, கம்பராமாயணம், நைடதம், நளவெண்பா முதலியவை. இவற்றுடன் பெரிய புராணம், திருவிளையாடற் புராணம், கந்தபுராணம் ஆகியவற்றையும் கூறலாம்.
காரிகை கற்றுக் கவி பாடலாம். ஆனால், கவியிலே உண்மையும் அழகும் இனிமையும் அமையப் பாடுவது அரிது. காவியங்களையும் இயற்றலாம். ஆனால், அதில் நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்னும் எட்டு வகையான சுவைகளையும் அமைத்துக் காவியம் அமைப்பது அரிது. இவையெல்லாம் பொருந்த அமையுமானால் அதுவே காவியக் கலை என்று போற்றப்படும். காவியக் கலையைப் போற்றி வளர்ப்பது நாகரிகம் பெற்ற மக்களின் கடமையாகும்.
எண்வகைச் சுவையுடையது ________.
நவீன இலக்கியங்கள் :
மக்களின் கடமை - இலக்கணம் காண்க.
பிற்காலப் பிரபந்தங்கள் :
மறைந்துபோன நூல்கள் :
வசன இலக்கியங்களின் காலம் ________.
அச்சு இயந்திரங்களின் வருகையால் ________ மரபு மறைந்தது.
சிலப்பதிகாரம் - பிரித்தெழுதுக :
பத்தியைப் படித்து அதனைத் தொடர்ந்து வரும் வினாக்களுக்குச் சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து எழுதவும். (கே.எண். 129 - 135)
பிற்காலத்திலும் இக்காலத்திலும் காப்பியவளர்ச்சி அத்துணைச் சிறப்படையவில்லை. இக்காலத்தில் கதை இலக்கியம் வளர்ச்சி பெற்றமையால், காப்பியம் எழுதுவாரும் மிக மிகக் குறையலாயினர். எனினும் சிறிய அளவிலானவையும் மொழி பெயர்ப்புக்களும், பழைய காப்பியங்களை அடியொற்றியவையுமாகச் சிற்சில நூல்கள் தோன்றின. பாரதியாரின் பாஞ்சாலி சபதம் அவற்றுட் குறிப்பிடத்தக்கது. ஐந்து சருக்கங்களும் இரு பாகங்களுமாயமைந்த இந்நூல் விருத்தமும் சிந்துமாக 308 பாடல்களைக் கொண்டது.
வியாச பாரதத்தின் முன்பகுதியைப் புதிய உணர்ச்சியுடன் படைத்துப் பாரதமாதாவின் அவல நிலையைப் பாஞ்சாலியின் மேலிட்டு, உள்ளுணர்த்தும். ஒப்பற்ற காப்பியமாக இலங்குகிறது கவிமணியின் ‘நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம்’ 11 படலங்களாலான நூல் ; நகைச்சுவை மிக்க சமுதாய அங்கதப்பாட்டு இது. பாரதிதாசனின் பாண்டியன் பரிசு 94 இயல்களில் 361 எண்சீர் விருத்தங்களைக் கொண்டு, வரலாறு போன்ற கற்பனைக் கதையொன்றைச் சீர்திருத்த நோக்குடன் படைக்கிறது. நாமக்கல் இராமலிங்கம் பிள்ளையின் ‘அவனும் அவளும்’ என்பது ஒரு சமூகக் காப்பியமாகும். கண்ணதாசனின் ‘மாங்கனி’ 40 தலைப்பில் 1834 அடிகளைக் கொண்டது. முடியரசனின் ‘பூங்கொடி’ 31 காதைகளில் 5233 அடிகளைக் கொண்டு, மணிமேகலைக் கதையை முற்றிலும் தழுவி எழுதப்பட்டது. சுத்தானந்த பாரதியாரின் பாரதசக்தி மகாகாவியம் ஐந்து காண்டங்களையும் 136 படலங்களையும் 3103 அடிகளையும் கொண்டது.
புலவர் குழந்தை, தந்தை பெரியாரின் தன்மான இயக்க அடிப்படையில், இராம காதைக்கு மாற்றாகப் பாடியது, ‘இராவண காவியம்’. பாரதிதாசன் வாழ்த்துடன் உள்ள இந்நூலில் 5 காண்டங்களும் 57 படலங்களும் 3100 விருத்தப்பாக்களும் உள. இவையும் இவை போல்வனவுமாகக் குறுங்காப்பிய நூல்கள், நெடும்பாட்டுக்கள் தோன்றி வருகின்றன.
சென்னைப் பல்கலைக் கழகக் கிறித்தவத்துறைத் தலைவராகப் பணியாற்றிய பேராசிரியர் சூ. இன்னாசி, ‘தேவசகாயம்’ எனும் கிறித்தவத் தொண்டர் பற்றி, 2007 இல் ஒரு பெருங்காப்பியம் எழுதியுள்ளார். நான்கு காண்டம், 40 படலம் 4135 பாடல்கள் கொண்ட ‘திருத்தொண்டர் காப்பியம்’ எனும் நூல் தமிழ் மரபுப்படி அமைந்துள்ளது. ஏசுபிரான் கூறிய பல கதைகள் இதில் கிளைக் கதைகளாக அமைந்துள்ளன. நல்ல யாப்பு வடிவத்தில், தமிழ்க் காப்பிய மரபுப்படி அமைத்த மிகச் சிறந்த நூல் இது.
ஒட்டி அமைந்த காப்பியம் ; எதிராக அமைந்த காப்பியம் :
காப்பிய வளர்ச்சி ________ ; கதை எழுத்து ________ ; ________ பெருகினர்.
பாண்டியன் பரிசில் இணைந்திருப்பவை :
நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம் :
பெருங்காப்பியம் எழுதியவர் ________ இது ________ பற்றியது.
பாஞ்சாலி சபதத்தின் பா வகை :
குறுங்காப்பியம், நெடும்பாட்டு : நிரல்படுத்துக.
மொழியியல் அறிவுத் திறனாற்றல் மாணவர்களுக்கு இதனைக் கற்றுத் தருகிறது :
தொடக்க நிலை ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு வண்ணம் தீட்டவும் வரையவும் ஊக்கம் தருகிறார். இது எதற்கு உதவுகிறது ?
குழந்தைகள் ஒரு மொழியை மிகத் திறமாகக் கற்க இது தேவைப்படுகிறது :
ஓர் ஆசிரியர் தன் வகுப்பில் குழு உரையாடல், மாணவர்களுக்கிடையிலான கலந்துரையாடல் இரண்டையும் ஊக்கப்படுத்துகிறார். எழுத்து கூட்டுதல் அல்லது உச்சரிப்பில் ஏற்படும் பிழைகள் பற்றி அவர் கவலைப்படுவதில்லை. அவர் வகுப்பறையில் பயன்படுத்தும் அணுகுமுறை ________.
பாடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள மொழி மாணவர்களுக்குக் கடினமாக இருப்பதை ஓர் ஆசிரியராக நீங்கள் கண்டறிகிறீர்கள். மாணவர்களுக்கு ஏற்ற வகையில், மொழியை எளிமைப்படுத்துவதுடன் உள்ளடக்கத்திலும் சில மாற்றங்களைச் செய்கிறீர்கள். இது எவ்வாறு குறிக்கப்படுகிறது ?
முகிலன் பள்ளிக்குப் போக இருப்பதால் மிக மகிழ்ச்சியாக இருக்கிறான். அவனது குடும்பத்திலிருந்து பள்ளிக்குச் செல்லும் முதல் குழந்தை அவன். அவனுடைய பெற்றோர்களோ வேறு யாருமோ பள்ளியில் சேர்ந்து படித்தவர்கள் இல்லை. முகிலன் ஒரு ________ மாணவன்.
நீங்கள் கற்பிக்கச் செல்லும் போது பாடப்புத்தகத்தில் குழந்தைப் பாடல்கள் தொடங்கி படக் கதைகள், அதற்குப் பிறகு அகர வரிசை என்ற முறையில் அமைந்திருப்பதைப் பார்க்கிறீர்கள். மொழிக் கல்வியில் இந்த வகை வரிசை முறையில் பாடங்கள் அமைவதைப் பரிந்துரைக்கும் அணுகுமுறை :
எந்த முறைசாரா பயிற்சியும் இன்றி இயற்கையாக மொழி கற்கப்படுவது இவ்வாறு குறிக்கப் படுகிறது :
மாணவர்கள் இருவர் இருவராகவோ, குழுவாகவோ இணைந்து சிக்கல்களைத் தீர்க்க முக்கியத்துவம் தரும் அணுகுமுறை :
‘சூழல் மாசு’ பற்றிய ஒரு பாடத் திட்டத்தை உருவாக்கும் போது உங்களுடைய முதல்கட்ட செயல்பாடு எதுவாக இருக்கும் ?
‘தண்ணீர்’ பற்றி ஒரு பத்தி எழுதும்படி மாணவர்களிடம் கேட்கிறார் ஓர் ஆசிரியர். மாணவர்கள் அறிவியலிலும், சமூக அறிவியலிலும் தங்களுக்குக் கற்பிக்கப்பட்டது பற்றி கலந்துரையாடல் செய்கின்றனர். பிறகு தண்ணீர் பற்றிய பத்தியை எழுதத் தொடங்குகின்றனர். இது எதற்கான எடுத்துக்காட்டு ?
எல்லோரும் ஹிந்தி பேசும் கிராமத்தில் பிறந்து வளரும் நீங்கள் பள்ளிக்குப் போகாமலேயே ஹிந்தி பேசத் தொடங்குகிறீர்கள். பிறகு பள்ளிக்குப் போனபிறகு ஆங்கிலம், சமஸ்கிருதம், ஹிந்தி, உருது படிக்கிறீர்கள். இப்போது ஆங்கிலத்தைச் சரளமாகப் பேசுகிறீர்கள். இப்போது உங்கள் முதல் மொழி எது ?
ஓர் ஆசிரியர் குடை, மழை அங்கி, திருப்புளி போன்ற மெய்யான பொருள்களை வகுப்புக்குக் கொண்டு வருகிறார். அந்தப் பொருள்களைப் பற்றி இரண்டு, மூன்று வாக்கியங்களில் விவரிக்கும்படி மாணவர்களிடம் கேட்கிறார். இந்தப் பொருள்கள் இவ்வாறு குறிக்கப் படுகின்றன :
காலம் காட்டும் சொற்களைக் கற்பிக்க உங்கள் வகுப்பில் இரண்டு படங்களைக் காட்டுகிறீர்கள், இரண்டிலும் ஒருவரே இருக்கிறார். ஒரு படம் 15 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டது, மற்றது அப்போதுதான் எடுக்கப்பட்டது. வகுப்பில் அந்தப் படத்தில் உள்ள மனிதரின் கடந்த காலம், நிகழ் காலம், தோற்றம், பழக்க வழக்கங்கள் பற்றிய பேச்சைத் தொடங்குகிறீர்கள். நீங்கள் பயன்படுத்தும் முறை :
ஒரு குறிப்பிட்ட வகுப்பு முற்றுப் பெறும்போது மாணவர்கள் பெற வேண்டிய அறிவு, திறமைகள், மனப்பாங்குகள் பற்றி விவரிக்கும் வாசகம் :