அச்சு இயந்திரங்களின் வருகையால் ________ மரபு மறைந்தது.
- (1) எழுத்து
- (2) ஓலைச்சுவடி
- (3) அச்சுக்கலை
- (4) அச்சுப் பண்பாடு
பத்தியைப் படித்து அதனைத் தொடர்ந்து வரும் வினாக்களுக்குச் சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து எழுதவும். (கே.எண். 121 - 128)
பிற்கால இலக்கியங்கள் என்று கூறியது கி.பி 15 -ம் நூற்றாண்டுக்குப் பிறகு உண்டான இலக்கியங்களை. இக்காலத்தில் காகிதம், பேனா முதலிய எழுது கருவிகள் தோன்றி, ஓலைச் சுவடிகளும் எழுத்தாணிகளும் மறையத் தொடங்கின. அச்சு யந்திரங்கள் ஏற்பட்டு அச்சுப் புத்தகங்களும் தோன்றலாயின. இக்காலத்தில்தான் வசன இலக்கியங்கள் பெருகிவரத் தொடங்கின. மொழிபெயர்ப்பு நூல்களும் அதிகமாகத் தோன்றின. சிந்து, பள்ளு, குறவஞ்சி, நொண்டி, காதல் முதலிய பிற்காலத்துப் பிரபந்த நூல்களும், ஸ்தல புராணங்களும், தேம்பாவணி, இரக்ஷண்ய யாத்திரிகம், சீறாபுராணம் முதலிய கிறிஸ்துவ இஸ்லாமிய நூல்களும், பிரதாப முதலியார் சரித்திரம், கமலாம்பாள் சரித்திரம் முதலிய நாவல் என்னும் நவீன இலக்கியங்களும் ஏராளமாகத் தோன்றின.
முற்காலத்தில் தமிழ் ஐம்பெருங் காவியங்கள் இருந்தன. அவை சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி என்பன. இவற்றில் குண்டலகேசியும், வளையாபதியும் இப்போது மறைந்துவிட்டன.
இப்போது தமிழில் சிறந்த காவியங்களாகக் கருதப்படுபவை, சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, பெருங்கதை, சூளாமணி, கம்பராமாயணம், நைடதம், நளவெண்பா முதலியவை. இவற்றுடன் பெரிய புராணம், திருவிளையாடற் புராணம், கந்தபுராணம் ஆகியவற்றையும் கூறலாம்.
காரிகை கற்றுக் கவி பாடலாம். ஆனால், கவியிலே உண்மையும் அழகும் இனிமையும் அமையப் பாடுவது அரிது. காவியங்களையும் இயற்றலாம். ஆனால், அதில் நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்னும் எட்டு வகையான சுவைகளையும் அமைத்துக் காவியம் அமைப்பது அரிது. இவையெல்லாம் பொருந்த அமையுமானால் அதுவே காவியக் கலை என்று போற்றப்படும். காவியக் கலையைப் போற்றி வளர்ப்பது நாகரிகம் பெற்ற மக்களின் கடமையாகும்.
அச்சு இயந்திரங்களின் வருகையால் ________ மரபு மறைந்தது.
CBSE answer: (2)
விடை: (2) ஓலைச்சுவடி
கவனம்: அச்சுக்கலை, அச்சுப் பண்பாடு புதிதாக வந்தவை; எழுத்து மறையவில்லை.