______ இலக்கியத்தை ______ ஆனது என மாற்றியுள்ளது.
- (1) நாவல், கற்றார்க்கு
- (2) நாவல், மக்களுக்கு
- (3) கவிதை, கற்றார்க்கு
- (4) கவிதை, மக்களுக்கு
பத்தியைப் படித்து அதனைத் தொடர்ந்து வரும் வினாக்களுக்குச் சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து எழுதவும். (கே.எண். 91 - 99)
உலக நாவல் மேதைகளில் ஒருவரான ஹென்றி ஜேம்ஸ் (1843-1916) புனைகதைக்கலை என்னும் கட்டுரையில் ‘‘வாழ்க்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திச் சித்தரிக்க முயல்கிறது என்ற ஒரு காரணத்தினாலேயே நாவல் தொடர்ந்து இயங்கி வருகிறது’’ என்றார். நாவலின் உள்ளார்ந்த இயல்பினையும் அடிப்படையையும் இக்கூற்றில் உணர்த்திவிட்டார் ஜேம்ஸ்.
தனக்கு முந்திய இலக்கிய வடிவங்கள் அனைத்தையும்விட நாவலே சமூக வாழ்க்கையை ஆகக் கூடிய அளவில் சித்தரிக்கிறது. இதனாலேயே மேனாட்டுத் திறனாய்வாளர் சிலர் நாவல் ‘‘சமூகத்தின் மனச்சாட்சிச் சாதனம்’’ என்று கூறுவர். அதாவது நவீனகாலத்து வாழ்க்கை பற்றிய முக்கியமான சிந்தனைகளும் உணர்வுகளும் நாவலிலேயே சிறந்த வெளிப்பாட்டைப் பெறுகின்றன. இதனால் இயல்பாகவே நாவல் சமூகச் சாசனம் ஆகிறது. கற்றோர்க்கு மட்டும் அமைந்திருந்த செய்யுள் இலக்கியமுறை போய் உரைநடையில் புனைகதை எழுதப்படத் தொடங்கியதும் இலக்கியத்தின் தன்மையே மாறிவிட்டதென்பர். நாவலினால் ‘இலக்கியம்’ மக்கள் சார்ந்ததாயிற்று ; பெருந்தொகை வாசகருக்குரியதாயிற்று ; ஜனரஞ்சகமாயிற்று ; போதனைக் கருவியாயிற்று ; தலையாய பொழுது போக்குச் சாதனமாயிற்று ; சுருங்கச் சொன்னால் மற்றெந்த இலக்கியத்தையும் விட நாவலின் சமூகப் பொறுப்பு அதிகமாயிற்று.
பொருட்செறிவு, வடிவ வார்ப்பு, உத்திப் பிரயோகம் என்பவற்றில் ஆசிரியருக்கு ஆசிரியர் வேறுபாடுண்டு. இயற்கைப் பண்பும் யதார்த்தமும் மயங்கும் நாவல்களும் உண்டு. ஆயினும் இவை நுணுக்க விவரங்களே.
நாவல் வரலாற்றில் அரைப்பங்கு இப்போக்குக்கு விளக்கமாயமைந்திருக்கிறது.
______ இலக்கியத்தை ______ ஆனது என மாற்றியுள்ளது.
CBSE answer: (2)
விடை: (2) நாவல், மக்களுக்கு
கவனம்: 'கற்றார்க்கு' என்பது பழைய செய்யுள் நிலை; மாற்றத்திற்குப் பிந்திய நிலை அல்ல.