By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 7 Jul 2024 Paper 2 Tamil Language Question Paper with Answer Key

You are reading the question paper with answers. This is not the timed test: no clock is running and nothing is being scored.

Go to the timed test →

Passage

பத்தியைப் படித்து அதனைத் தொடர்ந்து வரும் வினாக்களுக்குச் சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து எழுதவும் (கே.எண். 91 - 99)

இந்தியாவில் முதன் முறையாக எழுதப்பட்ட ஓவியங்கள் சுவரோவியங்களே. தமிழ்நாட்டில் சுவர் ஓவியங்கள் எழுதப்பட்ட மாளிகைகள், சித்திர மாடங்கள் என்று பெயர் பெற்றன. சேர, சோழ, பாண்டியர்களின் அரண்மனைகளிலே ஓவியங்கள் எழுதப்பட்ட சித்திர மாடங்கள் இருந்தன. புறநானூறு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய நூல்களிலே சுவரோவியங்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அரண்மனைகளிலும் மாளிகைகளிலும் அல்லாமல், கோயில்களிலும் ஓவியங்கள் எழுதப்பட்டன. மதுரைக்கு அருகில் இருக்கிற திருப்பரங்குன்றம் என்னும் குன்றின்மேல், பண்டைக் காலத்தில், முருகன் கோயிலில் ஓவியங்கள் எழுதப்பட்ட ஓவியச் சாலையை ‘எழுதெழில் அம்பலம்’ என்றும், ‘எழுத்துநிலை மண்டபம்’ என்றும் பரிபாடல் என்னும் நூல் குறிப்பிடுகிறது. அந்த எழுதெழில் அம்பலத்தில், அகலிகை சாபம் அடைந்து கல்லான கதை ஓவியமாக எழுதப்பட்டிருந்தது. இரதி, காமன், இந்திரன், அகலிகை, கௌதம முனிவன், பூனை முதலியவர்களின் ஓவியங்கள் எழுதப்பட்டிருந்தன (பரிபாடல் 19: 48-53). திருவெறும்பூர் கோயிலில் ஓவியம் எழுதப்பட்ட சித்திரகூடம் என்னும் மண்டபம் இருந்ததைச் சாசனங்கள் கூறுகின்றன.

7 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், மகேந்திரவர்மன் என்னும் பல்லவ அரசன், முதன்முதலாகத் தமிழ்நாட்டிலே பாறைக் குன்றுகளைக் குடைந்து குகைக்கோயில்களை அமைத்தான். இவ்வரசனுக்குச் சித்திரகாரப்புலி என்னும் சிறப்புப் பெயரும் உண்டு. இவன் அமைத்த குகைக்கோயில்கள் சிலவற்றில் சுவர் ஓவியங்களை எழுதி வைத்தான்.

தென்னாட்டு ஓவியம் என்பது விந்திய மலையிலிருந்து தெற்கே இலங்கைத்தீவு வரையில் உள்ள ஓவியங்களாகும். இவை பொதுவான அமைப்பில் ஒரேவிதமாக இருப்பனவாதலால் தென்னாட்டுச் சுவர் ஓவியத்தைத் தட்சிண சித்திரம் என்று கூறுவர். தட்சிண சித்திரம் என்று ஒரு நூல் இருந்தது என்றும், அந்நூலுக்குச் சித்திரகாரப்புலியாகிய மகேந்திரவர்மன் உரை எழுதினான் என்றும், அவனுடைய மாமண்டூர் குகைக்கோயிலிலுள்ள சாசனம் கூறுகிறது. சிலப்பதிகார உரையாசிரியராகிய அடியார்க்கு நல்லார் தமது உரையில் ஓவியநூல் என்னும் நூலைக் குறிப்பிடுகிறார். இவ்விரண்டு நூல்களும் இப்போது கிடைக்கவில்லை.

Q91

எழுத்து நிலை மண்டபம் :

  1. (1) எழுதப்பட்ட சாசனம்
  2. (2) எழுதப்பட்ட சித்திரம்
  3. (3) எழுதப்பட்ட கவிதை
  4. (4) எழுதப்பட்ட கட்டளை
See answer and solution
Q92

தட்சிண சித்திரம் என்பது :

  1. (1) தமிழ்நாட்டு ஓவியம்
  2. (2) இலங்கை ஓவியம்
  3. (3) ஓவிய நூல்
  4. (4) உரை நூல்
See answer and solution
Q93

அகலிகை கதை வரையப்பட்டிருந்த இடம் :

  1. (1) திருவெறும்பூர்
  2. (2) மதுரை
  3. (3) மாமல்லபுரம்
  4. (4) திருப்பரங்குன்றம்
See answer and solution
Q94

எழுதெழில் அம்பலம் என்பது :

  1. (1) திரை தொங்கும் மண்டபம்
  2. (2) மேகம் தவழும் மாளிகை
  3. (3) அரண்மனை சித்திர மாடம்
  4. (4) கோவிலின் ஓவியச் சாலை
See answer and solution
Q95

ஓவியம் எழுதப்பட்ட மாளிகை :

  1. (1) ஓவியச் சாலை
  2. (2) சித்திரகூடம்
  3. (3) சித்திரமாடம்
  4. (4) சித்திரச் சுவர்
See answer and solution
Q96

பிரித்து எழுதுக : நெடுநல்வாடை

  1. (1) நெடு + நல் + வாடை
  2. (2) நெடுமை + நல் + வாடை
  3. (3) நெடுமை + நல்ல + வாடை
  4. (4) நெடும் + நல்ல + வாடை
See answer and solution
Q97

எழுதெழில் மண்டபத்தில் வரையப்பட்டிருந்த ஓவியங்கள் :

  1. (1) ரதி, பூனை, துர்கை
  2. (2) ராமன், சீதை, இலக்குவன்
  3. (3) ரதி, காமன், இந்திரன்
  4. (4) ரதி, காமன், சிவன்
See answer and solution
Q98

முதலில் குகைச் சுவர்களில் ஓவியம் வரைந்தவன் :

  1. (1) இரண்டாம் நரசிம்மன்
  2. (2) புலிகேசி
  3. (3) பராந்தகன்
  4. (4) மகேந்திரன்
See answer and solution
Q99

சுவரோவியம் பற்றிய செய்தியைத் தரும் நூல்கள் :

  1. (1) அகநானூறு, புறநானூறு
  2. (2) மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை
  3. (3) புறநானூறு, பதிற்றுப்பத்து
  4. (4) சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம்
See answer and solution

Passage

பாடலைப் படித்து அதனைத் தொடர்ந்து வரும் வினாக்களுக்குச் சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து எழுதவும் (கே.எண். 100 - 105)

மனமென்ற பேயை விரட்டிப் பிடித்து
வசத்தில் மடக்கிவிட்டால்,
தினம்வென்று வென்று சிரித்துச் சிரித்துத்
திடங்கொண்டு வாழ்ந்திடலாம் !

ஐந்து குதிரைகள் ஓடுமுன் பற்றி
அதட்டி நிறுத்திவிட்டால்
இந்த உலகம் நமைச்சுற்றி வந்திடும்
இட்ட பணிபுரியும் !

ஓட்டை உடலம் உருப்பட நித்தம்
ஒருசிந்தை கொண்டிருந்தால்,
கோட்டை யிதற்குக் கொடிகட்டிச் சேனைகள்
கும்பிட வாழ்ந்திடலாம் !

கேவல ஆசையின் வாய்கள் நொறுங்கக்
கிழித்தெறிந் தால்உலகில்,
சாவு பயப்படும்; மானுடம் வென்று
‘ஜயம் ஜயம்’ என்றாடும் !

Q100

சாவு பயப்பட செய்யவேண்டியது :

  1. (1) ஆசையை நிறைவேற்றல்
  2. (2) ஆசையை அழித்தல்
  3. (3) சாவை எதிர்த்தல்
  4. (4) சாவை எதிர்கொள்ளுதல்
See answer and solution
Q101

இலக்கணக் குறிப்பு தருக : கேவல ஆசை

  1. (1) வினை அடை
  2. (2) வினை எச்சம்
  3. (3) பண்புப் பெயர்
  4. (4) பண்புப் பெயரடை
See answer and solution
Q102

அடுக்குத் தொடர் :

  1. (1) விரட்டிப் பிடித்து
  2. (2) கொடி கட்டி
  3. (3) சிரித்துச் சிரித்து
  4. (4) திடங் கொண்டு
See answer and solution
Q103

சிரித்து வாழ வழி :

  1. (1) பேயை விரட்டுதல்
  2. (2) மனத்தை வெல்லுதல்
  3. (3) பேயை வசப்படுத்தல்
  4. (4) மனத்தைச் சுழலவிடுதல்
See answer and solution
Q104

உலகம் வசப்பட செய்யவேண்டியது :

  1. (1) புலன் ஒடுக்கம்
  2. (2) மன ஒடுக்கம்
  3. (3) நாவடக்கம்
  4. (4) சாந்தம்
See answer and solution
Q105

கவிஞர் சுட்டும் ஐந்து குதிரைகள் :

  1. (1) மனம்
  2. (2) கற்பனைகள்
  3. (3) எண்ணங்கள்
  4. (4) புலன்கள்
See answer and solution
Q106

ஆசிரியர்கள், மாணவர்கள், கற்றல் பொருள்களின் மீது தேர்வுகள், மதிப்பீடுகள் ஏற்படுத்தும் தாக்கம் :

  1. (1) கார்ப்பஸ் எஃபக்ட்
  2. (2) வாஷ்பேக் எஃபக்ட்
  3. (3) கிளாஸ்ரூம் எஃபக்ட்
  4. (4) ரிஇன்ஃபோர்ஸ்மெண்ட்
See answer and solution
Q107

இணைப்பு நிலை இருமொழித் தன்மையைப் பள்ளிகள் பின்பற்ற வேண்டும், ஏனென்றால் அது :

  1. (1) குழந்தையின் பண்பாட்டுக்கும் மொழிக்கும் மதிப்பளிக்கிறது
  2. (2) ஆங்கிலத்தை ஒரு இரண்டாம் மொழியாகக் கற்பிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கிறது
  3. (3) குழந்தையின் மொழியை ஊக்குவிக்கிறது ஆனால் பண்பாட்டை ஊக்குவிக்கவில்லை
  4. (4) முதல் மொழியின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது
See answer and solution
Q108

குரல் ஏற்ற இறக்கம், ஒலித்தொனி, அழுத்தம், சந்தம் என்னும் மொழியியல் செயல்பாடுகள் இவ்வாறு அறியப்படுகின்றன :

  1. (1) கவிதை
  2. (2) யாப்பிலக்கணம்
  3. (3) ஒலியனியல்
  4. (4) பிராக்மாடிக்ஸ்
See answer and solution
Q109

இந்தியாவில் மொழிகள் பற்றிய கருத்தில் எது சரியானதில்லை ?

  1. (1) இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, ஆங்கிலம் இணையான ஒரு அலுவல் மொழி
  2. (2) அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணைப்படி 22 மொழிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
  3. (3) சமஸ்கிருதம் ஒரு நவீன இந்திய மொழி
  4. (4) ஹிந்தி இந்தியத் துணைக் கண்டத்தின் இணைப்பு மொழி
See answer and solution
Q110

ஒரு மொழி வகுப்பில் மாணவர்கள் குழுக்களாகப் பிரிந்து ஆசிரியரின் வழிகாட்டுதலுடன் ஒரு குறிப்பிட்ட தலைப்பிலான விளம்பரம் ஒன்றை அளிக்கின்றனர். இவ்வகையில் ஒரு மொழியைக் கற்பது இவ்வாறு குறிக்கப்படுகிறது :

  1. (1) ஒருங்கிணைந்த கற்றல்
  2. (2) போட்டி மற்றும் பகை
  3. (3) மொழி விளையாட்டு
  4. (4) வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை தருதல்
See answer and solution
Q111

உணவு விடுதிகளில் பயன்படுத்தப்படும் சொற்களை அறிந்து கொள்ளும் பணி ஒன்றை ஆசிரியர் தருகிறார். இந்தப் பாடத்தின் நோக்கமாக எது இருக்க வேண்டும் ?

  1. (1) அகராதிச் சொற்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவது
  2. (2) இலக்கணப் பகுதிகளை அறிமுகப்படுத்துவது
  3. (3) விடுமுறைக்குச் செல்லும் இடம் பற்றிய பாடப்பகுதி ஒன்றை அறிமுகம் செய்வது
  4. (4) விமர்சனப்பூர்வமான சிந்திப்பை வளர்ப்பது
See answer and solution
Q112

பேச்சுச் சொல் சார்ந்து அல்லது சாராத மொழியைக் கற்பது பழக்க உருவாக்கச் செயல் சார்ந்தது என்று கூறும் சிந்தனைப் பள்ளி எது ?

  1. (1) ஃபங்க்ஷனலிஸ்ட்
  2. (2) பிஹேவியரிஸ்ட்
  3. (3) காக்னிடிவிஸ்ட்
  4. (4) இன்டராக்ஷனலிஸ்ட்
See answer and solution
Q113

கதையில் உள்ள காலம், இடம் இரண்டும் இவ்வாறு குறிக்கப்படுகின்றன :

  1. (1) கதைக்கரு
  2. (2) கதைப்பின்புலம்
  3. (3) கதைக்களம்
  4. (4) முடிவு
See answer and solution
Q114

ஒரு மொழி வகுப்பில் ஓர் ஆசிரியர் மாணவர்களை வீடு வாங்குபவர்களாக, வீடு விற்பவர்களாக, வீட்டுக்குச் சொந்தக்காரர்களாக, வாடகை இருப்பவர்களாக நடிக்கச் சொல்லி மற்றவர்கள் அவர்களின் உரையாடலை கவனித்து மகிழும்படி செய்கிறார். இந்தச் செயல்பாடு :

  1. (1) பாத்திரமேற்று நடித்தல்
  2. (2) நாடகம்
  3. (3) நாடக வகுப்பு
  4. (4) வழிகாட்டுதல்
See answer and solution
Q115

ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்குக் கற்பிப்பதற்காக ஓர் ஆசிரியர் செய்தித்தாள்கள், மெனு கார்டுகள், டிரெயின் டிக்கெட்டுகள் போன்ற பொருள்களை எடுத்து வருகிறார். ஆசிரியர் கற்றல் நிகழ என்ன செய்கிறார் ?

  1. (1) நம்பகத்தன்மை உடைய பொருட்களைப் பயன்படுத்தி தனது கற்பித்தல் நிஜத்தன்மை உடையதாகவும் பயன்மிக்கதாகவும் இருக்க வேண்டும் என முயற்சிக்கிறார்
  2. (2) மாணவர்கள் பல மொழிகளைக் கற்க மாணவர்களுக்கு உதவியாக இருக்க முயல்கிறார்
  3. (3) நிஜவாழ்க்கைச் சூழலில் தனது மாணவர்கள் ஆங்கிலம் கற்க வேண்டும் என விரும்புகிறார்
  4. (4) மாணவர்களிடம் விழிப்புணர்வை அவர் உருவாக்குகிறார்
See answer and solution
Q116

ஒரு கவனித்தறிதல் பாடத்தைத் திட்டமிடும்போது முக்கியமல்லாத ஒரு கூறு எது ?

  1. (1) ஒலிப்பதிவில் இடைவெளி விடுதல்
  2. (2) பேசுவதின் வேகம்
  3. (3) பேசுபவரின் பாலினம்
  4. (4) பேசுபவர்களின் எண்ணிக்கை
See answer and solution
Q117

இந்தியாவின் மும்மொழித் தன்மை ஆசிரியர்களுக்கு இதனைப் புரிய வைக்கும் நோக்கம் கொண்டது :

  1. (1) தகவல் பரிமாற்றம் நடக்கும் போது, சமூக நல்லிணக்கம் பாதுகாக்கப்படுகிறது
  2. (2) வலிமையான மொழிகளுக்குள் சிறுபான்மை மொழிகள் உள்ளடக்கப்பட வேண்டும்
  3. (3) பன்முகப்பட்ட ஒரு சமூகத்தில் ‘ஒரு மொழி’க் கொள்கை உருவாக்கப்பட வேண்டும்
  4. (4) மொழி, அடையாளம், பண்பாடு என்பவை தனித்தனியானவை
See answer and solution
Q118

மொழித்திறனில் எது ஏற்புத்திறமை எனச் சொல்லப்படுகிறது ?

  1. (1) கவனித்தறிதல், பேசுதல்
  2. (2) பேசுதல், எழுதுதல்
  3. (3) படித்தல், எழுதுதல்
  4. (4) கவனித்தறிதல், படித்தல்
See answer and solution
Q119

கவனித்தறிதல் இவற்றை உள்ளடக்கியது :

  1. (1) ஒலிகளைக் கேட்பது, ஒலிகளின் பொருளைப் புரிந்து கொள்வது
  2. (2) உள்ளடக்கத்தை உய்த்துணர்வது
  3. (3) பாடப்பகுதியைப் பற்றிய முந்தைய அறிவைப் பயன்படுத்துவது
  4. (4) ஒலிகளை அடையாளம் காண்பது, அவற்றிலிருந்து பொருள்களை கொண்டு கூட்டுவது
See answer and solution
Q120

(A) பகுதியில் உள்ள மொழி கற்பித்தல் முறைகளையும் (B) பகுதியில் உள்ள தொடர்புடைய செயல்பாடுகளையும் பொருத்தி அமைக்கவும் :

(A) (B)
(a) தகவல் தொடர்பு மொழி கற்பித்தல் (i) சமூக வகையில் ஏற்புடைய, பொருத்தமுடைய மொழி
(b) நேரடி முறை (ii) அமைதியான வாசிப்பு
(c) இலக்கண மொழிபெயர்ப்பு (iii) எழுதப்பட்ட இலக்கியப் பனுவல்
(d) வெஸ்ட்ஸ் நியு மெத்தட் (iv) இலக்கணம் இன்டக்டிவ் முறையில் கற்பிக்கப்படுகிறது
  1. (1) (a)-(i), (b)-(iv), (c)-(iii), (d)-(ii)
  2. (2) (a)-(iv), (b)-(ii), (c)-(iii), (d)-(i)
  3. (3) (a)-(iii), (b)-(i), (c)-(ii), (d)-(iv)
  4. (4) (a)-(ii), (b)-(i), (c)-(iv), (d)-(iii)
See answer and solution

Passage

பத்தியைப் படித்து அதனைத் தொடர்ந்து வரும் வினாக்களுக்குச் சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து எழுதவும் (கே.எண். 121 - 128)
குலோத்துங்க சோழன் சரிதை என்ற நூல் ஒன்றை மானகுலாசனிச்சேரியைச் சேர்ந்தவனான திருநாராயண பட்டன் என்கிற கவிகுமுதசந்திரபண்டிதன் என்பான் இயற்றினான். முதலாம் குலோத்துங்கன் ஆணையின்மேல் வீரநாராயண விண்ணகர் ஆழ்வார் கோயிலின் முன்பு அமைக்கப்பட்ட மிகப் பெரியதொரு மேடையின்மேல் அந்நூல் அரங்கேற்றம் செய்யப்பட்டது. அதன் ஆசிரியருக்கு நிலங்கள் தானமாகக் கொடுக்கப்பட்டன. புலவன் ஒருவன் ஒரு குறுநில மன்னன்மேல் பிள்ளைக்கவி பாடிப் பரிசில்பெற்றான். முதலாம் குலோத்துங்கன் காலத்திலேயே கன்னிவன புராணம் என்ற ஒரு நூலையும், நாடகம் ஒன்றையும் கமலாலயபட்டன் என்ற ஒரு புலவன் இயற்றிப் பரிசில்கள் பெற்றான். மேலே குறிக்கப்பட்ட நூல்கள் யாவும் இப்போது மறைந்தொழிந்தன.
சோழர் காலத்தில் தமிழ் வளர்ச்சியானது மிக உயர் நிலையை எட்டி இருந்தது. பல அரிய நூல்கள் இயற்றப்பட்டன. அவற்றின் சீரும் சிறப்பும் இன்றளவும் மங்காமல் ஒளிர்ந்து வருகின்றன. கல்லாடனார் இயற்றிய கல்லாடம் என்னும் அகத்துறை நூல் ஒன்று சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. மாணிக்கவாசகரின் திருக்கோவையாரில் உள்ள செய்யுள்களுள் ஒரு நூற்றை அடிப்படையாகக் கொண்டு நூறு அகவற்பாக்களால் ஆக்கப்பட்டது இந்நூல். வழக்கொழிந்த சங்கப் பாடல்களின் போக்கிலேயே இந்நூலின் பாட்டுகள் யாக்கப்பட்டுள்ளன. இக் கல்லாடனார் சங்க காலத்துக் கல்லாடனாரினின்றும் வேறானவர். இவர் ஒன்பதாம் நூற்றாண்டினர் என்று கொள்ளத்தகும். பதினோராந் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ள திருக்கண்ணப்பதேவர் திருமறம் என்னும் நூலையும் இவரே பாடினார் என்பர். முதலாம் குலோத்துங்கன் காலத்தவரான செயங்கொண்டார் என்பவர் கலிங்கத்துப் பரணி என்னும் நூலைப் பாடினார். போரில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றி கண்ட மன்னனின் புகழைப் பாடுவது பரணி என்பதாகும். பரணி பாடுவது எளிதன்று. ‘பரணிக்குச் செயங்கொண்டார்’ என்று இலக்கிய உலகம் இப் புலவர் பெருமகனைப் பாராட்டி வருகின்றது. சோழ மன்னரின் இராச பாரம்பரியத்தைப் பற்றிய பல செய்திகளை இது கொண்டுள்ளது. குலோத்துங்கன் கலிங்கத்துப் போரைப் பற்றிப் பரவுவது இந்நூல். இது வரலாற்றுச் சிறப்புடையதாகும். இது தாழிசை என்னும் செய்யுள்களால் அமைந்துள்ளது.

Q121

பதினோறாம் திருமுறையில் __________ உள்ளது.

  1. (1) கலிங்கத்துப்பரணி
  2. (2) குலோத்துங்க சோழன் சரிதை
  3. (3) திருக்கண்ணப்பத் தேவர் திருமறம்
  4. (4) திருக்கோவையார்
See answer and solution
Q122

இலக்கண வழுவற்ற தொடர் காண்க.

  1. (1) கல்லாடம் அகவற்பாவால் ஆனவை
  2. (2) நூல் இயற்றப்பட்டன
  3. (3) கல்லாடம் அகவற்பாவால் ஆனது
  4. (4) நூல்கள் இயற்றப்பட்டது
See answer and solution
Q123

‘நூல் அரங்கேற்றம் செய்யப்பட்டது’. இது எவ்வகை வினை வாக்கியம் ?

  1. (1) செயப்பாட்டு வினை
  2. (2) தன்வினை
  3. (3) செய்வினை
  4. (4) ஏவல்வினை
See answer and solution
Q124

மறைந்துபோன நூல்கள் :

  1. (1) திருக்கோவையார், குலோத்துங்கன் சோழ சரிதை
  2. (2) கன்னிவன புராணம், குலோத்துங்கன் சோழ சரிதை
  3. (3) கல்லாடம், திருக்கோவையார்
  4. (4) கன்னிவன புராணம், கல்லாடம்
See answer and solution
Q125

__________ ஆனது கலிங்கத்துப்பரணி, கல்லாடத்தின் பா வடிவம் __________.

  1. (1) தாழிசையால், அகவற்பா
  2. (2) அகவற்பாவால், கலிப்பா
  3. (3) வஞ்சிப்பாவால், வெண்பா
  4. (4) வெண்பாவால், வஞ்சிப்பா
See answer and solution
Q126

திருக்கோவையாரை அடியொற்றி அமைந்த நூல் :

  1. (1) குலோத்துங்க சோழன் சரிதை
  2. (2) கலிங்கத்துப்பரணி
  3. (3) கல்லாடம்
  4. (4) திருக்கண்ணப்பத் தேவர் திருமறம்
See answer and solution
Q127

நூலுக்காக நிலத்தானம் பெற்றவன் __________, __________ கூறுவது கலிங்கத்துப் பரணி.

  1. (1) மாணிக்கவாசகர், சைவச் சிறப்பு
  2. (2) கல்லாடர், அகத்துறை
  3. (3) திருநாராயண பட்டன், இராச பாரம்பரியம்
  4. (4) குலோத்துங்கன், இராச பாரம்பரியம்
See answer and solution
Q128

சங்கப் பாடல்களின் தொடர்ச்சியாய் அமைந்தது __________, குலோத்துங்கனைப் புகழ்வது __________.

  1. (1) கல்லாடம், கலிங்கத்துப்பரணி
  2. (2) கலிங்கத்துப்பரணி, திருக்கோவையார்
  3. (3) குலோத்துங்கன் சரிதை, திருக்கோவையார்
  4. (4) திருக்கோவையார், கல்லாடம்
See answer and solution

Passage

பத்தியைப் படித்து அதனைத் தொடர்ந்து வரும் வினாக்களுக்குச் சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து எழுதவும் (கே.எண். 129 - 135)
பூச்சிக் கொல்லி மருந்துகள் மண்ணிலுள்ள நுண்ணுயிர்களையும், மண் புழு போன்ற பல்வேறு நன்மை செய்யும் உயிரினங்களையும் பாதிக்கின்றன. நுண்ணூட்டச் சத்துக்கள் சரியான அளவில் பயிர்களுக்குப் போய்ச் சேராமல் தடை செய்கின்றன. மண்ணின் உயிர் வளம் பாதிப்படைவதால் பயிர் சுழற்சி முறை சரியாக அமையாமல் மகசூல் குறைகிறது. வைக்கோல் உண்ணும் கால்நடைகளும் பூச்சி மருந்துகளின் விளைவுகளினால் பாதிப்படைகின்றன. பாதிப்படைந்த பறவைகளின் முட்டை, குஞ்சு பொரிக்கும் திறன் குறைகிறது. திமிங்கலங்களின் உடலில் விவசாய இடு பொருட்கள் பாதிப்பு ஏற்படுத்திக் குறைப்பிரசவம் நிகழ்ந்துள்ளது. மனித ஜீன்களில் திடீர் விளைவுகளை இம்மருந்துகள் ஏற்படுத்துகின்றன. முன்பு இருந்ததைவிட இப்போது அதிக பிறவிக் குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறக்கின்றன. இதற்குக் காரணம், பூச்சி மருந்துகளின் தாக்குதலேயாகும். ஆண்களின் விந்து அணுக்களின் சராசரி எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது. ஆந்திர மாநிலத்தில் ஜெனுவால்கள் என்னும் முட்டுக்கால் முடக்கம், எலும்புகள் பலமிழந்து போதல், முதுகுத் தண்டின் உராய்வு போன்றவை 8 முதல் 25 வயதுடைய ஆண்களுக்குப் பூச்சிக் கொல்லி மருந்துகளின் விளைவால் தோன்றியுள்ளன. இப்படிப்பட்ட சூழல் சீர்கேடு நடைபெறாமல் தடுக்க, நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், தேவைப்பட்டாலொழிய மருந்துகளையும் உரங்களையும் பயன்படுத்தக் கூடாது என்பதே. உரங்களை வேருக்கு அருகிலிட்டால் வீணாகாமல் பயிர்களால் உறிஞ்சப்படும். ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக உரமிடுவதைக் காட்டிலும் சிறிது சிறிதாக அடிக்கடி உரமிடுவது சாலச் சிறந்தது. உயரிய உரங்களான ரைசோபியம், அசட்டோ பாக்டர், அசோஸ் பைரில்லம் மற்றும் நீலப் பச்சைப் பாசிகளாகிய அன்பினா, நோஸ்டக், பிளக்டோனிமா போன்றவற்றைப் பயன்படுத்தினால் மிகுந்த நன்மை பயப்பதுடன் எவ்விதத் தீங்கும் ஏற்படாது. பூச்சிகளைக் கட்டுப்படுத்த ‘உயிரினக் கட்டுப்பாடு’ முறையினைப் பயன்படுத்திப் பயனடையலாம்.

Q129

மனித __________ திடீர் விளைவு ஏற்பட __________ காரணமாக அமைகின்றன.

  1. (1) உடலில், உரங்கள்
  2. (2) மூளையில், பூச்சிக்கொல்லி
  3. (3) ஜீன்களில், பூச்சிக்கொல்லி
  4. (4) கண்களில், பயிர் ஊக்கிகள்
See answer and solution
Q130

குறை பிரசவம் : இலக்கணக் குறிப்பு தருக.

  1. (1) பெயரெச்சம்
  2. (2) வினை எச்சம்
  3. (3) பண்புத் தொகை
  4. (4) வேற்றுமைத் தொகை
See answer and solution
Q131

__________, __________ ஆகியன பூச்சிக்கொல்லிகளின் தாக்கங்கள் ஆகும்.

  1. (1) குறைபாடுடைய குழந்தைகள், தொண்டை அழற்சி
  2. (2) விந்தணு எண்ணிக்கை குறைவு, புற்றுநோய்
  3. (3) எலும்பு பலமிழத்தல், விரைவான பூப்பு
  4. (4) விந்தணு எண்ணிக்கை குறைவு, எலும்பு பலமிழத்தல்
See answer and solution
Q132

உரமிடுதலில் கடைபிடிக்க வேண்டியவை __________, __________ ஆகும்.

  1. (1) ஆழத்தோண்டி உரமிடுதல், நீரில் கரைத்து விடுதல்
  2. (2) சிறிது சிறிதாக உரமிடுதல், வேருக்கு அருகில் இடுதல்
  3. (3) வேருக்கு அருகில் இடுதல், ஆழத்தோண்டி உரமிடுதல்
  4. (4) நீரில் கரைத்து விடுதல், சிறிது சிறிதாக உரமிடுதல்
See answer and solution
Q133

__________ பயிர்களுக்குப் போகாமல் __________ தடை செய்வதால் மகசூல் குறைகிறது.

  1. (1) மருந்து, ஹைட்ரஜன்
  2. (2) தண்ணீர், நீலப்பச்சைப் பாசிகள்
  3. (3) ஊட்டச்சத்து, பூச்சிக்கொல்லி
  4. (4) மணிச்சத்து, சல்பேட்கள்
See answer and solution
Q134

நன்மை செய்யும் உயிரினம் :

  1. (1) வெட்டுக்கிளி
  2. (2) மண்புழு
  3. (3) வண்ணத்துப் பூச்சி
  4. (4) வௌவால்
See answer and solution
Q135

இலக்கணக் குறிப்பு தருக : பயிர் சுழற்சி, தீங்கும்

  1. (1) பெயரெச்சம், முற்றும்மை
  2. (2) வினை எச்சம், எண்ணும்மை
  3. (3) வேற்றுமைத் தொகை, எச்ச உம்மை
  4. (4) வேற்றுமை விதி, உம்மைத் தொகை
See answer and solution
Q136

சிங்கரனஸ் மற்றும் ஏசிங்கரனஸ் ஆன்லைன் கற்பித்தல் வாய்ப்புகளை அதிகம் அனுமதிக்கும் கருவி எது ?

  1. (1) பாடநூல்
  2. (2) ரைல்வே டிக்கட்
  3. (3) டெலிவிஷன்
  4. (4) பாட்லெட்
See answer and solution
Q137

ஃபார்மேடிவ் அஸ்ஸெஸ்மெண்ட் செய்ய மிக நல்ல முறை அற்ற கருவி எது ?

  1. (1) அஸைன்மெண்ட்
  2. (2) பேப்பர் பென்ஸில் டெஸ்ட்
  3. (3) புராஜெக்ட்
  4. (4) கிளாஸ் பிரசன்டேஷன்
See answer and solution
Q138

தின வாழ்வில் உள்ள பொருள்களைக் கொண்டு மொழி கற்பிப்பது __________.

  1. (1) ரியலியா
  2. (2) மொழி விளையாட்டு
  3. (3) கற்பித்தல் துணைக்கருவி
  4. (4) பனுவல்
See answer and solution
Q139

கல்வியில் இந்திய மொழிக் கொள்கை (மும்மொழித் திட்டம்) இதனை முன்வைக்கிறது :

  1. (1) பன்மொழிக் கல்வி
  2. (2) ஒருமொழிக் கல்வி
  3. (3) ஹிந்திக்கு முன்னுரிமை தரும் இருமொழிக் கல்வி
  4. (4) தாய் மொழியை அடிப்படையாகக் கொண்ட பன்மொழித் தன்மை
See answer and solution
Q140

டாப் டவுன் செயல்முறை பற்றிய கருத்தில் எது சரியில்லை ?

  1. (1) மாணவர்கள் தமது பின்புல அறிவைச் சார்ந்து உள்ளனர்
  2. (2) எதிர்பார்க்கப்படும் பொருள் பற்றி மாணவர்கள் முன் அனுமானம் செய்கின்றனர்
  3. (3) மாணவர்கள் தமது உலக அறிவைப் பயன்படுத்துகின்றனர்
  4. (4) மாணவர்கள் ஒவ்வொரு சொல்லையும் புரிந்து கொள்ள வேண்டும்
See answer and solution
Q141

சர்வதேச தாய்மொழி தினம் எப்போது கொண்டாடப்படுகிறது ?

  1. (1) ஜனவரி 1
  2. (2) பெப்ருவரி 14
  3. (3) பெப்ருவரி 21
  4. (4) ஏப்ரல் 13
See answer and solution
Q142

உங்களுடன் பணிபுரியும் உங்கள் நண்பருக்கு எழுதும் இ-மெய்ல் எவ்வகைப்பட்டது ?

  1. (1) இன்ஃபார்மல்
  2. (2) ஃபார்மல்
  3. (3) பிஸினெஸ்
  4. (4) கரஸ்பான்டென்ஸ்
See answer and solution
Q143

மாணவர்களின் கற்றலையும் புரிதலையும் தெளிவுபடுத்த கற்பித்தல் - கற்றல் செயல்பாடு. நெடுகச் செய்யப்படும் மதிப்பீடு இவ்வாறு குறிக்கப்படுகிறது :

  1. (1) கற்றலுக்கான மதிப்பீடு செய்தல்
  2. (2) கற்றலின் மதிப்பீடு செய்தல்
  3. (3) கற்றலில் மதிப்பீடு செய்தல்
  4. (4) கற்றலே மதிப்பீடாக
See answer and solution
Q144

இரண்டாம் மொழி கற்பிக்கும் வகுப்பில் ஓர் ஆசிரியர் ‘உடல் நலமே செல்வம்’ என்ற ஒலிப்பதிவுப் பகுதியை ஒலிக்க விடுகிறார். பிறகு அவர் அச்சுப் பக்கம் ஒன்றைத் தந்து அதில் உள்ளவற்றில் சரியான விடைகளைக் குறியிடச் சொல்கிறார். இந்தப் பாடத்தின் நோக்கம், மாணவர்களுக்கு இந்தத் திறனைத் தருவது :

  1. (1) உடல் நலம் பற்றிய பாடத்தைக் கேட்க வைத்தல்
  2. (2) மாணவர்களை ஒரு பணியில் ஈடுபடுத்துவது
  3. (3) கருத்துகளை பகுத்தாய்வு செய்ய கவனித்தல்
  4. (4) ‘உடல் நலமே செல்வம்’ என்ற பாடத்தை மனப்பாடம் செய்வது
See answer and solution
Q145

மொழி கற்றலில் நிகழும் பிழைகள் பற்றிய கருத்தில் எது சரியானதில்லை ?

  1. (1) பிழைகள் மொழி கற்றல் செயலுக்குத் தடையாக உள்ளன
  2. (2) பிழைகள் எல்லா சமயங்களிலும் கெடுதியானவை இல்லை, அவை கற்றலுக்கு உதவி செய்கின்றன
  3. (3) மொழி கற்றல் செயலில் பிழைகள் மிக முக்கிய கூறுகளாக உள்ளன
  4. (4) இரண்டாம் மொழித் தன்வயமாக்கல் செயலைப் புரிந்து கொள்ள பிழைகள் உதவி செய்கின்றன
See answer and solution
Q146

மொழிக் கல்வியில் படைப்புத் தன்மை என்பது :

  1. (1) வேறுபட்ட பொருள் கூறலையும் விடைகளையும் அனுமதிக்கும் திறந்த வடிவம் கொண்ட வகுப்பறைப் பணிகள்
  2. (2) வெவ்வேறு பாடப் புலங்களில் இருந்து கூறுகளை இணைத்து சிலவற்றைப் புரிந்து கொள்ளுதல்
  3. (3) கற்பித்தலில் புதிய முறைகளைப் பயன்படுத்தும் வகுப்பறை செயல்பாடு
  4. (4) தகவல் பரிமாற்ற மொழி கற்றலைப் பயன்படுத்தி செய்யப்படும் வகுப்பறை துணைப் பொருள்
See answer and solution
Q147

மாணவர்களுக்கு மொழி அறிமுகப்படுத்தப்பட வேண்டும், பிழைகள் நேர்வது கற்றல் நிகழ்வதற்கு சான்றாக உள்ளது. இதனைக் கூறும் கோட்பாடு :

  1. (1) பிஹேவியரிஸ்ட்
  2. (2) காக்னிடிவிஸ்ட்
  3. (3) ஹீயூமனிஸ்ட்
  4. (4) சைகோ ஆனளிஸ்ட்
See answer and solution
Q148

பின்வருவனவற்றில் எந்த வாசகங்கள் சரியானவை ?
(அ) டிஸ்லெக்ஸியா ஒரு வாசித்தல் குறைபாடு
(ஆ) டிஸ்கிராபியா ஒரு எழுதுதல் குறைபாடு
(இ) டிஸ்கிராபியா ஒரு வாசித்தல் குறைபாடு
(ஈ) டிஸ்லெக்ஸியா ஒரு எழுதுதல் குறைபாடு

  1. (1) (அ) மட்டும் சரியானது
  2. (2) (ஆ) மற்றும் (ஈ) மட்டும் சரியானவை
  3. (3) (அ) மற்றும் (ஆ) இரண்டும் சரியானவை
  4. (4) (இ) மற்றும் (ஈ) இரண்டும் சரியானவை
See answer and solution
Q149

ஏழாம் வகுப்பு ஆசிரியர், ஓர் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்க காட்சிப் பாடப் பொருள்களையும் மொழி விளையாட்டுகளையும் பயன்படுத்துகிறார். ஆசிரியர் பயன்படுத்தும் கற்பித்தல் கொள்கை எது ?

  1. (1) இயற்கைச் செயல்வழிக் கொள்கை
  2. (2) செய்முறை மற்றும் பழக்க உருவாக்கக் கொள்கை
  3. (3) ஊக்கமளித்தல் மற்றும் ஆர்வமளித்தல் கொள்கை
  4. (4) வாழ்வுடன் உறவுபடுத்தும் கொள்கை
See answer and solution
Q150

விலங்குகளை முதன்மைப் பாத்திரங்களாகக் கொண்டு நேரடியாக நீதி கற்பிக்கும் ஒரு சிறுகதை எவ்வாறு குறிக்கப்படுகிறது ?

  1. (1) மனக் கற்பிதம்
  2. (2) நீதிக் கதை
  3. (3) அறிவியல் புனைகதை
  4. (4) பயண இலக்கியம்
See answer and solution