By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 7 Jul 2024 Paper 2 Tamil, Question 105

Topic: Poem comprehension

Passage

பாடலைப் படித்து அதனைத் தொடர்ந்து வரும் வினாக்களுக்குச் சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து எழுதவும் (கே.எண். 100 - 105)

மனமென்ற பேயை விரட்டிப் பிடித்து
வசத்தில் மடக்கிவிட்டால்,
தினம்வென்று வென்று சிரித்துச் சிரித்துத்
திடங்கொண்டு வாழ்ந்திடலாம் !

ஐந்து குதிரைகள் ஓடுமுன் பற்றி
அதட்டி நிறுத்திவிட்டால்
இந்த உலகம் நமைச்சுற்றி வந்திடும்
இட்ட பணிபுரியும் !

ஓட்டை உடலம் உருப்பட நித்தம்
ஒருசிந்தை கொண்டிருந்தால்,
கோட்டை யிதற்குக் கொடிகட்டிச் சேனைகள்
கும்பிட வாழ்ந்திடலாம் !

கேவல ஆசையின் வாய்கள் நொறுங்கக்
கிழித்தெறிந் தால்உலகில்,
சாவு பயப்படும்; மானுடம் வென்று
‘ஜயம் ஜயம்’ என்றாடும் !

Q105

கவிஞர் சுட்டும் ஐந்து குதிரைகள் :

  1. (1) மனம்
  2. (2) கற்பனைகள்
  3. (3) எண்ணங்கள்
  4. (4) புலன்கள்Correct answer

Solution.

CBSE answer: (4)

விடை: (4) புலன்கள்

  1. கண், காது, மூக்கு, வாய், மெய் என ஐந்து புலன்கள் நம்மை இழுத்துச் செல்வதால் அவற்றை ஓடும் ஐந்து குதிரைகளாகக் கவிஞர் உருவகிக்கிறார்.
  2. எண்ணிக்கை ஐந்து என்பதே இதைத் தெளிவாக்குகிறது.

கவனம்: (1) மனம் ஒன்று மட்டுமே; அதைக் கவிஞர் 'பேய்' என்று தனியே குறிக்கிறார்.