By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 7 Jul 2024 Paper 2 Tamil, Question 104

Topic: Poem comprehension

Passage

பாடலைப் படித்து அதனைத் தொடர்ந்து வரும் வினாக்களுக்குச் சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து எழுதவும் (கே.எண். 100 - 105)

மனமென்ற பேயை விரட்டிப் பிடித்து
வசத்தில் மடக்கிவிட்டால்,
தினம்வென்று வென்று சிரித்துச் சிரித்துத்
திடங்கொண்டு வாழ்ந்திடலாம் !

ஐந்து குதிரைகள் ஓடுமுன் பற்றி
அதட்டி நிறுத்திவிட்டால்
இந்த உலகம் நமைச்சுற்றி வந்திடும்
இட்ட பணிபுரியும் !

ஓட்டை உடலம் உருப்பட நித்தம்
ஒருசிந்தை கொண்டிருந்தால்,
கோட்டை யிதற்குக் கொடிகட்டிச் சேனைகள்
கும்பிட வாழ்ந்திடலாம் !

கேவல ஆசையின் வாய்கள் நொறுங்கக்
கிழித்தெறிந் தால்உலகில்,
சாவு பயப்படும்; மானுடம் வென்று
‘ஜயம் ஜயம்’ என்றாடும் !

Q104

உலகம் வசப்பட செய்யவேண்டியது :

  1. (1) புலன் ஒடுக்கம்Correct answer
  2. (2) மன ஒடுக்கம்
  3. (3) நாவடக்கம்
  4. (4) சாந்தம்

Solution.

CBSE answer: (1)

விடை: (1) புலன் ஒடுக்கம்

  1. ஐந்து குதிரைகளை ஓடுமுன் பற்றி அதட்டி நிறுத்தினால் உலகம் நம்மைச் சுற்றி வந்து பணி செய்யும் என்கிறது பாடலின் இரண்டாம் பகுதி.
  2. ஐந்து குதிரைகள் என்பது ஐம்புலன்கள்; அவற்றை அடக்குவதே புலன் ஒடுக்கம்.

கவனம்: (2) மன ஒடுக்கம் முதல் பகுதியின் கருத்து; உலகம் வசப்படுவது பற்றிப் பேசுவது இரண்டாம் பகுதி.