By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 7 Jul 2024 Paper 2 Tamil, Question 103

Topic: Poem comprehension

Passage

பாடலைப் படித்து அதனைத் தொடர்ந்து வரும் வினாக்களுக்குச் சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து எழுதவும் (கே.எண். 100 - 105)

மனமென்ற பேயை விரட்டிப் பிடித்து
வசத்தில் மடக்கிவிட்டால்,
தினம்வென்று வென்று சிரித்துச் சிரித்துத்
திடங்கொண்டு வாழ்ந்திடலாம் !

ஐந்து குதிரைகள் ஓடுமுன் பற்றி
அதட்டி நிறுத்திவிட்டால்
இந்த உலகம் நமைச்சுற்றி வந்திடும்
இட்ட பணிபுரியும் !

ஓட்டை உடலம் உருப்பட நித்தம்
ஒருசிந்தை கொண்டிருந்தால்,
கோட்டை யிதற்குக் கொடிகட்டிச் சேனைகள்
கும்பிட வாழ்ந்திடலாம் !

கேவல ஆசையின் வாய்கள் நொறுங்கக்
கிழித்தெறிந் தால்உலகில்,
சாவு பயப்படும்; மானுடம் வென்று
‘ஜயம் ஜயம்’ என்றாடும் !

Q103

சிரித்து வாழ வழி :

  1. (1) பேயை விரட்டுதல்
  2. (2) மனத்தை வெல்லுதல்Correct answer
  3. (3) பேயை வசப்படுத்தல்
  4. (4) மனத்தைச் சுழலவிடுதல்

Solution.

CBSE answer: (2)

விடை: (2) மனத்தை வெல்லுதல்

  1. 'மனமென்ற பேயை' விரட்டிப் பிடித்து வசப்படுத்தினால் தினம் சிரித்துத் திடமாக வாழலாம் என்கிறது பாடலின் முதல் பகுதி.
  2. இங்கு 'பேய்' என்பது மனத்தைக் குறிக்கும் உருவகம்; ஆகவே வழி மனத்தை வெல்லுதல்.

கவனம்: (3) 'பேயை வசப்படுத்தல்' சொல்லளவில் ஒத்தாலும், உருவகத்தின் உண்மைப் பொருள் மனமே.