Q102
அடுக்குத் தொடர் :
- (1) விரட்டிப் பிடித்து
- (2) கொடி கட்டி
- (3) சிரித்துச் சிரித்து
- (4) திடங் கொண்டு
பாடலைப் படித்து அதனைத் தொடர்ந்து வரும் வினாக்களுக்குச் சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து எழுதவும் (கே.எண். 100 - 105)
மனமென்ற பேயை விரட்டிப் பிடித்து
வசத்தில் மடக்கிவிட்டால்,
தினம்வென்று வென்று சிரித்துச் சிரித்துத்
திடங்கொண்டு வாழ்ந்திடலாம் !
ஐந்து குதிரைகள் ஓடுமுன் பற்றி
அதட்டி நிறுத்திவிட்டால்
இந்த உலகம் நமைச்சுற்றி வந்திடும்
இட்ட பணிபுரியும் !
ஓட்டை உடலம் உருப்பட நித்தம்
ஒருசிந்தை கொண்டிருந்தால்,
கோட்டை யிதற்குக் கொடிகட்டிச் சேனைகள்
கும்பிட வாழ்ந்திடலாம் !
கேவல ஆசையின் வாய்கள் நொறுங்கக்
கிழித்தெறிந் தால்உலகில்,
சாவு பயப்படும்; மானுடம் வென்று
‘ஜயம் ஜயம்’ என்றாடும் !
அடுக்குத் தொடர் :
CBSE answer: (3)
விடை: (3) சிரித்துச் சிரித்து
கவனம்: (1), (2), (4) இரண்டு வேறு சொற்கள் சேர்ந்த தொடர்கள்; அவை அடுக்குத் தொடர் அல்ல.