By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 7 Jul 2024 Paper 2 Tamil, Question 101

Topic: Grammar

Passage

பாடலைப் படித்து அதனைத் தொடர்ந்து வரும் வினாக்களுக்குச் சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து எழுதவும் (கே.எண். 100 - 105)

மனமென்ற பேயை விரட்டிப் பிடித்து
வசத்தில் மடக்கிவிட்டால்,
தினம்வென்று வென்று சிரித்துச் சிரித்துத்
திடங்கொண்டு வாழ்ந்திடலாம் !

ஐந்து குதிரைகள் ஓடுமுன் பற்றி
அதட்டி நிறுத்திவிட்டால்
இந்த உலகம் நமைச்சுற்றி வந்திடும்
இட்ட பணிபுரியும் !

ஓட்டை உடலம் உருப்பட நித்தம்
ஒருசிந்தை கொண்டிருந்தால்,
கோட்டை யிதற்குக் கொடிகட்டிச் சேனைகள்
கும்பிட வாழ்ந்திடலாம் !

கேவல ஆசையின் வாய்கள் நொறுங்கக்
கிழித்தெறிந் தால்உலகில்,
சாவு பயப்படும்; மானுடம் வென்று
‘ஜயம் ஜயம்’ என்றாடும் !

Q101

இலக்கணக் குறிப்பு தருக : கேவல ஆசை

  1. (1) வினை அடை
  2. (2) வினை எச்சம்
  3. (3) பண்புப் பெயர்
  4. (4) பண்புப் பெயரடைCorrect answer

Solution.

CBSE answer: (4)

விடை: (4) பண்புப் பெயரடை

  1. 'கேவல' என்பது 'கேவலம்' என்ற பண்பைக் காட்டும் சொல்; அது 'ஆசை' என்ற பெயர்ச்சொல்லை விளக்குகிறது.
  2. பெயர்ச்சொல்லுக்கு முன் வந்து அதன் பண்பைச் சொல்லும் சொல் பண்புப் பெயரடை.

கவனம்: (3) பண்புப் பெயர் என்றால் 'கேவலம்' போலத் தனியே நிற்கும் சொல்; (1), (2) வினைச்சொல்லோடு தொடர்புடையவை, இங்கு வினை இல்லை.