By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 7 Jul 2024 Paper 2 Tamil, Question 129

Topic: Reading comprehension

Passage

பத்தியைப் படித்து அதனைத் தொடர்ந்து வரும் வினாக்களுக்குச் சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து எழுதவும் (கே.எண். 129 - 135)
பூச்சிக் கொல்லி மருந்துகள் மண்ணிலுள்ள நுண்ணுயிர்களையும், மண் புழு போன்ற பல்வேறு நன்மை செய்யும் உயிரினங்களையும் பாதிக்கின்றன. நுண்ணூட்டச் சத்துக்கள் சரியான அளவில் பயிர்களுக்குப் போய்ச் சேராமல் தடை செய்கின்றன. மண்ணின் உயிர் வளம் பாதிப்படைவதால் பயிர் சுழற்சி முறை சரியாக அமையாமல் மகசூல் குறைகிறது. வைக்கோல் உண்ணும் கால்நடைகளும் பூச்சி மருந்துகளின் விளைவுகளினால் பாதிப்படைகின்றன. பாதிப்படைந்த பறவைகளின் முட்டை, குஞ்சு பொரிக்கும் திறன் குறைகிறது. திமிங்கலங்களின் உடலில் விவசாய இடு பொருட்கள் பாதிப்பு ஏற்படுத்திக் குறைப்பிரசவம் நிகழ்ந்துள்ளது. மனித ஜீன்களில் திடீர் விளைவுகளை இம்மருந்துகள் ஏற்படுத்துகின்றன. முன்பு இருந்ததைவிட இப்போது அதிக பிறவிக் குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறக்கின்றன. இதற்குக் காரணம், பூச்சி மருந்துகளின் தாக்குதலேயாகும். ஆண்களின் விந்து அணுக்களின் சராசரி எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது. ஆந்திர மாநிலத்தில் ஜெனுவால்கள் என்னும் முட்டுக்கால் முடக்கம், எலும்புகள் பலமிழந்து போதல், முதுகுத் தண்டின் உராய்வு போன்றவை 8 முதல் 25 வயதுடைய ஆண்களுக்குப் பூச்சிக் கொல்லி மருந்துகளின் விளைவால் தோன்றியுள்ளன. இப்படிப்பட்ட சூழல் சீர்கேடு நடைபெறாமல் தடுக்க, நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், தேவைப்பட்டாலொழிய மருந்துகளையும் உரங்களையும் பயன்படுத்தக் கூடாது என்பதே. உரங்களை வேருக்கு அருகிலிட்டால் வீணாகாமல் பயிர்களால் உறிஞ்சப்படும். ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக உரமிடுவதைக் காட்டிலும் சிறிது சிறிதாக அடிக்கடி உரமிடுவது சாலச் சிறந்தது. உயரிய உரங்களான ரைசோபியம், அசட்டோ பாக்டர், அசோஸ் பைரில்லம் மற்றும் நீலப் பச்சைப் பாசிகளாகிய அன்பினா, நோஸ்டக், பிளக்டோனிமா போன்றவற்றைப் பயன்படுத்தினால் மிகுந்த நன்மை பயப்பதுடன் எவ்விதத் தீங்கும் ஏற்படாது. பூச்சிகளைக் கட்டுப்படுத்த ‘உயிரினக் கட்டுப்பாடு’ முறையினைப் பயன்படுத்திப் பயனடையலாம்.

Q129

மனித __________ திடீர் விளைவு ஏற்பட __________ காரணமாக அமைகின்றன.

  1. (1) உடலில், உரங்கள்
  2. (2) மூளையில், பூச்சிக்கொல்லி
  3. (3) ஜீன்களில், பூச்சிக்கொல்லிCorrect answer
  4. (4) கண்களில், பயிர் ஊக்கிகள்

Solution.

CBSE answer: (3)

விடை: (3) ஜீன்களில், பூச்சிக்கொல்லி

  1. 'மனித ஜீன்களில் திடீர் விளைவுகளை இம்மருந்துகள் ஏற்படுத்துகின்றன' என்று பத்தி கூறுகிறது.
  2. இங்கு 'இம்மருந்துகள்' என்பது பத்தி முழுவதும் பேசப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளையே குறிக்கிறது.

கவனம்: உடல், மூளை, கண் ஆகியவை பத்தியில் இந்தச் செய்தியுடன் சொல்லப்படவில்லை.