By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 8 Feb 2026 Paper 1 Tamil Language Question Paper with Answer Key

Passage

பத்தியைப் படித்து அதனைத் தொடர்ந்து வரும் வினாக்களுக்குச் சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து எழுதவும். (கே.எண். 91 - 99)
பண்டையத் தமிழர் ஈடுபட்டிருந்த இரு பெரும் உற்பத்தித் தொழில்களாக உழவும், வாணிகமும் விளங்குகின்றன. உழவுத் தொழிலில் பெற்றிருந்த தன்மையைச் சங்க நூல்களும் பிறவும் நமக்கு நன்கு காட்டுகின்றன. வேளாண்மையைப் போலவே வணிகத் தொழிலிலும் மக்கள் ஈடுபட்டிருந்தனர். வணிகர் நடுவுநிலை தவறாது வாணிகம் செய்தனர். பிறர் கூறும் பழிக்கு அஞ்சி நேர்மையுடன் உண்மையான விலையைக் கூறி நேரிய வாழ்க்கையை நடத்தியதாகப் பட்டினப்பாலை கூறுகிறது. உழவுத் தொழிலை விரும்பிச் செய்யும் உழவர்களின் நீண்ட நுகத்தடியின் நடுவில் வைக்கப்பட்டுள்ள பகலாணி போல நடுவுநிலை என்ற குணம் நிலை பெற்று விளங்கும் நல்ல உள்ளம் உடையவர்களாக வணிகர்கள் இருந்தனர். பொய் உரைப்பின் தம் குடிக்கு பழிச்சொல் வந்து சேரும் என அஞ்சி உண்மையைக் கூறுவர்.
சங்க கால மக்கள் கிரீஸ், ரோம், எகிப்து, சீனம் ஆகிய நாடுகளோடு கடல் வாணிபம் வைத்திருந்தனர் என்பதை டாக்டர் கே.கே. பிள்ளை சான்றுகளால் புலப்படுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் விளைந்த நறுமணப்பொருட்கள் பலவும் பிறநாட்டில் இருந்ததைக் காணலாம். யூதர்களின் ஆதி சமயத்தலைவரான மோசஸ் தாம் நடத்தி வந்த இறைவழிபாட்டில் ஏலக்காயைப் பயன்படுத்தினர் (கி.மு. 1490) என்பர். தென் அராபிய நாட்டு அரசி ஷேபா, இஸ்ரேலின் மன்னன் சாலமனைக் காணச்சென்றபோது ஏலம், இலவங்கம் முதலிய நறுமணப் பொருட்களைக் கொண்டு சென்றதாகக் கூறுவர்.
தமிழகம் பாபிலோனியா இடையே அக்காலத்தில் விரிவான வாணிகம் நடைபெற்று வந்துள்ளது. பாபிலோனியாவில் நிப்பூர் என்னும் இடத்தில் முரசு என்பவரும் அவர் மக்களும் நடத்தி வந்த காசு வணிகத்தில் சில பற்று வரவுப் பதிவுகள் கிடைத்துள்ளன. கணக்குப் பதியப்பட்ட களிமண்ணோடுகள் கிடைத்துள்ளன. தமிழ் வாணிகர்கள் பாபிலோனியாவில் குடியேறித் தொழில் நடத்தி வந்துள்ளனர் என்பது தெரிய வருகின்றது.
தமிழக எகிப்துக்கிடையே இருந்த வணிக தொடர்பு எரித்திரியக் கடலின் பெருளூஸ் (Perilus of the erithir ocean sea) மூலம் தெரிய முடிகின்றது. எகிப்தின் 17 ஆம் அரச பரம்பரையினருக்கு இறக்குமதியான பொருள்களுள் சேரநாட்டுத் துறைமுகங்களில் இருந்து அனுப்பப்பட்டன என்பர். தேக்கு மரம், மஸ்லின் துணி முதலியன கேரளத்திலிருந்து கடல் வழியாக நேராகப் பாபிலோனியாவுக்குச் சென்றிருக்கக் கூடும்.
கிரேக்க அறிஞர்களின் நூல்களில் பல தமிழ்ச் சொற்கள் காணப்படுகின்றன என்பார். அரிஸா (அரிசி), கருவா (இலவங்கம்) கார்ப்பியன், சிஞ்சி பேராஸ் (இஞ்சி வேர்) முதலாய பல சொற்கள் குறிப்பிடத்தக்கவை.
நறுமணப் பொருட்களைத் தமிழகத்தில் இருந்து விரும்பி வாங்கினராம் ரோமாபுரி மக்கள். ரோமாபுரி மக்களின் ஆறு இலட்சம் பவுன் தங்கம் தமிழர் கைக்கு மாறுகிறது என்று அந்நாட்டில் குறிப்பிடுவராம். பழந்தமிழ் மக்களின் வணிக மேலாண்மை இக்குறிப்புகளால் புலனாகும். யவனர்கள் தமிழ் மன்னர்களிடம் பணிபுரிந்தனராம். மணிமேகலை யவனத் தச்சர் என்று குறிப்பிடுகிறது. அவர்கள் கைவினைக் கம்மியர்களாக விளங்கினர்.
‘யவனர் நன்கலம் தந்த தன் கமழ் தேடல் பொன்செய் புனைகலம்’ என்று புறநானூறு கூறுகிறது. பழந்தமிழர்கள் வாணிகக் கலையில் சிறந்திருந்தனர். கடலோடியும் வாணிகம் புரிந்தனர் என்பது இவற்றால் நன்கு புலனாகும்.

Q91

__________ மக்களின் __________ இலட்சம் __________ தமிழர் கைக்கு மாறுகிறது என்று __________ மக்கள் குறிப்பிடுவராம்.

  1. (1) ரோமாபுரி, ஆறு, பவுன் தங்கம், எகிப்து
  2. (2) கிரேக்க, இலவங்கம், தமிழ் மக்கள், ரோமாபுரி
  3. (3) ரோமாபுரி, ஆறு, பவுன் தங்கம், ரோமாபுரி
  4. (4) தமிழ், ஆறு, பவுன் தங்கம், ரோமாபுரி
See answer and solution
Q92

தமிழ் நாட்டு மன்னர்களிடம் பணியாற்றியவர்கள் :

  1. (1) யவனர்
  2. (2) எகிப்தியர்கள்
  3. (3) ரோமபுரி மக்கள்
  4. (4) கிரேக்கர்
See answer and solution
Q93

சங்க காலத் தமிழர்களின் வணிக மேலாண்மைத் திறனுக்குச் சான்று :

  1. (1) இலவங்கம், ஏலக்காய், தேக்கு மரம், ஏற்றுமதி
  2. (2) ‘நன்கலம் தந்த தன் கமழ் தேடல் பொன்செய் புனைகலம்’
  3. (3) ஆறு இலட்சம் பவுன் தங்கம் தமிழர் கைக்கு மாறியது
  4. (4) கடல் கடந்த வாணிகம்
See answer and solution
Q94

__________ நீண்ட __________ நடுவில் வைக்கப்பட்டுள்ள __________ போல __________ என்ற குணம் வணிகர்களிடம் நிலை பெற்று விளங்கும்.

  1. (1) நுகத்தடியின், உழவர்களின், நடுவுநிலை, தமிழர்கள்
  2. (2) உழவர்களின், நுகத்தடியின், பகலாணி, நடுவுநிலை
  3. (3) தமிழர்களின், கடல், களிமண்ணோடு, நடுவுநிலை
  4. (4) வணிகர்களின், பகலாணியின், நடுவுநிலை, நுகத்தடி
See answer and solution
Q95

ஏலம், இலவங்கம் கொண்டு சென்ற அரசி, பெற்றுக்கொண்ட மன்னர் :

  1. (1) ஷேபா, சாலமன்
  2. (2) அரேபிய அரசி, இஸ்ரேலிய மன்னன்
  3. (3) அரிஸா, சாலமன்
  4. (4) சிஞ்சிபேராஸ், கிரேக்க மன்னர்
See answer and solution
Q96

நுகத்தடி என்பது :

  1. (1) வேளாண் கலைச்சொல்
  2. (2) கப்பல் கலைச்சொல்
  3. (3) கலைப்பொருள்
  4. (4) வணிகக் கலைச்சொல்
See answer and solution
Q97

கேரளத்திலிருந்து கடல் வழியாக எடுத்துச்செல்லப்பட்ட பொருள்களும், கொண்டு செல்லப்பட்ட நாடும் :

  1. (1) தேக்கு மரம், மஸ்லின் துணி; பாபிலோனியா
  2. (2) மஸ்லின் துணி, இஞ்சி வேர்; சீனம்
  3. (3) தேக்கு மரம், இலவங்கம்; எகிப்து
  4. (4) அரிசி, ஏலம்; யவனம்
See answer and solution
Q98

கிரேக்க அறிஞர்களின் நூல்களில் காணப்படும் தமிழ்ச் சொற்கள் :

  1. (1) அரிஸா, சிஞ்சிபேராஸ், இலவங்கம்
  2. (2) அரிசி, இலவங்கம், இஞ்சி வேர்
  3. (3) தேக்கு மரம், ஏலக்காய், சிஞ்சிபேராஸ்
  4. (4) அரிஸா, கார்ப்பியன், சிஞ்சிபேராஸ்
See answer and solution
Q99

தமிழ் வணிகர்களின் கணக்குக் குறிப்புகளடங்கிய களிமண்ணோடுகள் கிடைத்த நாடு :

  1. (1) பாபிலோனியா
  2. (2) கிரேக்கம்
  3. (3) கேரளம்
  4. (4) எகிப்து
See answer and solution

Passage

பாடலைப் படித்து அதனைத் தொடர்ந்து வரும் வினாக்களுக்குச் சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து எழுதவும். (கே.எண். 100 - 105)
ஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட
‘என்னைஎழு’ தென்று சொன்னது வான்!
ஓடையுந் தாமரைப் பூக்களும் தங்களின்
ஓவியந் தீட்டுக, என்றுரைக்கும்!
காடும் கழனியும் கார் முகிலும் வந்து
கண்ணைக் கவர்ந்திட எத்தனிக்கும்!
ஆடும் மயில் நிகர் பெண்களெல்லாம் உயிர்
அன்பினைச் சித்திரம் செய்க, என்றார்!

சோலைக் குளிர்தரு தென்றல்வரும்,பசுந்
தோகை மயில்வரும்அன்னம் வரும்.
மாலைப் பொழுதினில் மேற்றிசையில் விழும்
மாணிக்கப் பரிதி காட்சிதரும்
‘வேலைச் சுமந்திடும் வீரரின் தோள்உயர்
வெற்பென்று சொல்லி வரைக’எனும்
கோலங்கள் யாவும்மலைமலையாய்வந்து
கூவினஎன்னை!-இவற்றிடையே.

இன்னலிலே, தமிழநாட்டினிலேயுள்ள
என்தமிழ்மக்கள்துயின்றிருந்தார்.
அன்னதோர் காட்சி இரக்கமுண்டாக்கியென்
ஆவியில் வந்து கலந்ததுவே
‘இன்பத் தமிழ்க்கல்வி யாவரும் கற்றவர்
என்றுரைக்கும் நிலை எய்திவிட்டால்-
துன்பங்கள் நீங்கும்,சுகம்வரும்நெஞ்சினில்
தூய்மையுண்டாகிடும்,வீரம்வரும்.’

Q100

பெண்களுக்கு நிகராகப் பாரதிதாசன் கூறுவது __________.

  1. (1) குயில்
  2. (2) கிளி
  3. (3) அன்னம்
  4. (4) மயில்
See answer and solution
Q101

பின்வரும் எதுகைகளை வரிசைப்படுத்துக :

  1. (1) சோலை, வேலை, கோலங்கள், மாலை
  2. (2) சோலை, மாலை, வேலை, கோலங்கள்
  3. (3) மாலை, கோலங்கள், வேலை, சோலை
  4. (4) கோலங்கள், மாலை, வேலை, சோலை
See answer and solution
Q102

மலையைக் குறிக்கும் சொல் எது ?

  1. (1) வெற்பு
  2. (2) சோலை
  3. (3) முகில்
  4. (4) பரிதி
See answer and solution
Q103

வேலை சுமக்கும் வீரரின் தோள் எதற்கு உவமை ?

  1. (1) மலை
  2. (2) கார்முகில்
  3. (3) மயில்
  4. (4) சூரியன்
See answer and solution
Q104

‘ஏடெடுத்தேன்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________.

  1. (1) ஏட்டு + எடுத்தேன்
  2. (2) ஏடு + எடுத்தேன்
  3. (3) ஏ + டெடுத்தேன்
  4. (4) ஏடெடு + தேன்
See answer and solution
Q105

‘தங்களின் ஓவியத்தைத் தீட்டுங்கள்’ என்று சொன்னவை எவை ?

  1. (1) ஆடும் மயில்
  2. (2) ஓடையும் தாமரையும்
  3. (3) கழனியும் கார்முகிலும்
  4. (4) காடும் கழனியும்
See answer and solution
Q106

கூற்று (A) : வகுப்பறையின் கற்றல் அனுபவங்கள், குழந்தைகளின் வாழ்க்கையையும் மற்றும் அவர்களின் சூழ்நிலைகளோடு ஆழமாக தொடர்பு கொண்டவை.
காரணம் (R) : கற்றல் அனுபவங்கள் குழந்தைகளின் முந்தைய புரிதல்களிலிருந்து மேம்படுமாறு வடிவமைக்கப்படுகின்றன.
பின்வருவனவற்றுள் மிகச் சரியான விடையை தேர்ந்தெடுக்க :

  1. (1) (A) மற்றும் (R) இரண்டும் உண்மையானவை, ஆனால் (R), (A)-வின் சரியான விளக்கமல்ல.
  2. (2) (A) உண்மையானது ஆனால் (R) தவறானது.
  3. (3) (A) தவறானது ஆனால் (R) உண்மையானது.
  4. (4) (A) மற்றும் (R) இரண்டும் உண்மையானவை மற்றும் (R), (A)-யின் சரியான விளக்கமாகும்.
See answer and solution
Q107

பின்வருவனவற்றுள் எது மொழிக்கற்றல் பற்றிய உண்மையான கூற்று அல்ல ?

  1. (1) மொழிக் கற்றல் நேரம் எடுக்கும் செயலாகும்.
  2. (2) மொழிக் கற்றல் என்றால் பொருள் கொள்ளுதல் ஆகும்.
  3. (3) இலக்கணம் கற்றல் ஒரு மொழியைக் கற்றுக் கொள்வதற்கு மிகுந்த அவசியமானதாகும்.
  4. (4) மொழியோடு மட்டும் போதுமான ஈடுபாடு இருந்தால், அனைத்து கற்போரும் ஒரு மொழியை சுலபமாக கற்க முடியும்.
See answer and solution
Q108

கடையில் ஒரு பொருளை வாங்க மாணவர்களால் செயல் சார்ந்த விளக்கங்கள் உபயோகிக்கப்படுகிறதா என்பதை மதிப்பிட, மாணவர்களுக்கு __________ பொருத்தமானதாக அமையும்.

  1. (1) அவர்களின் உணவு விருப்பங்களை பற்றி எழுதுதல்.
  2. (2) கடைக்காரர் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இடையேயான ஒரு சிறுகதையை வாசிக்கச் செய்தல்.
  3. (3) கடைக்காரர் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இடையேயான காட்சியை வரைதல்.
  4. (4) கடைக்காரர் மற்றும் வாடிக்கையாளர்களுக்கிடையேயான ஒரு குறுகிய உரையாடலை எழுதுதல்.
See answer and solution
Q109

ஒரு ஆசிரியர் மொழிக்கற்றலில் சில அம்சங்களை கண்டறிந்தார், உதாரணமாக, அறிவியல் சிந்தனை சார்ந்த பாடத்தை புரிந்துகொண்டு படித்தல் ஆகும். அவர் எந்த மாணவர் அந்த குறிப்பிட்ட அம்சங்களை புரிந்துகொள்ள சிரமப்படுகிறார் என்பதை கண்டறிய தீர்மானித்தார். அப்படிப்பட்ட பாடத்தை படித்து, புரிந்துக்கொள்ள அவர்களுக்கு தனிவகுப்பு எடுத்தார். இம்முறை எவ்வாறு அறியப்படுகிறது ?

  1. (1) உயர்தர சிந்தித்தல் திறன்கள்
  2. (2) சிந்திக்கும் திறன்கள்
  3. (3) பின்னூட்ட கற்பித்தல்
  4. (4) குறைநிறைப்பு கற்பித்தல் (Remedial Teaching)
See answer and solution
Q110

பின்வருவனவற்றுள் எது படித்தலின் துணைத்திறனாக இருக்காது ?

  1. (1) அர்த்தத்தை அனுமானித்தல் மற்றும் பரிச்சயமற்ற அகராதி வார்த்தைகளை உபயோகிக்கப்படுத்துதல்
  2. (2) குறிப்பிட்ட தேவையான தகவல் இருக்கும் இடத்தை கண்டறிய நுணுக்க வாசிப்பு செய்தல்
  3. (3) ஒவ்வொரு வார்த்தையையும் எழுத்துகள் கூட்ட அறிந்து வைத்தல்
  4. (4) சொல்வளத்தை அறிந்து கொண்டு, முக்கிய வார்த்தைகளை தெரிவு செய்தல்
See answer and solution
Q111

கூற்று (A) : ஒரு மாணவர் திறன்தொகுப்பு (Portfolio) என்பது அம்மாணவரின் காரண காரியம் நிறைந்த வேலைகளின் தொகுப்பாகும்.
காரணம் (R) : திறன்தொகுப்பு மாணவரது பலங்களையும், குறைகளையும் அவரே மதிப்பீடு செய்ய உற்சாகப்படுத்த வல்லதாகும்.
பின்வருவனவற்றுள் மிக பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்க :

  1. (1) (A) மற்றும் (R) இரண்டும் உண்மையானவை, ஆனால் (R), (A)-வின் சரியான விளக்கம் அல்ல.
  2. (2) (A) உண்மையானது ஆனால் (R) தவறானது.
  3. (3) (A) தவறானது ஆனால் (R) உண்மையானது.
  4. (4) (A) மற்றும் (R) இரண்டும் உண்மையானவை மற்றும் (R), (A)-வின் சரியான விளக்கமாகும்.
See answer and solution
Q112

மாணவர்களின் சொல்வளத்தை (Vocabulary) மேம்படுத்த, ஓர் ஆசிரியர் மாணவர்களுக்காக சுலபமான மொழிநடை கொண்டதாக மாற்றப்பட்ட மற்றும் நம்பகத்தன்மை அடிப்படையில் அமைத்த பாடத்தை உபயோகிக்கிறார். அப்பாடம் ... :

  1. (1) பாத்திர ஏற்பு அட்டைகள் (Role Cards)
  2. (2) இருமொழி அகராதிகள்
  3. (3) தரம்பிரிக்கப்பட்ட பாடப் புத்தகங்கள் (Graded readers)
  4. (4) செய்தித் தாள்
See answer and solution
Q113

மாணவர்களின் கற்றல் முறைகளையும் மற்றும் முதன்மை விருப்பங்களையும் பற்றி மிகுதியாக கண்டறிய ஒரு மொழி ஆசிரியர் மாணவர்களுக்கு ஒரு வினா தொகுப்பினை (Questionnaire) வழங்குகிறார். இங்கு ஆசிரியர் ஏற்றுக்கொள்ளும் பங்கு __________ ஆகும்.

  1. (1) திட்டமிடுபவர்
  2. (2) வல்லுநர்தகவல் வழங்குபவர்
  3. (3) பிரச்சினையை கண்டறிபவர்
  4. (4) மேலாளர்
See answer and solution
Q114

முதல் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் குழந்தைகளை அவர்கள் விரும்புவதை சுவரில், கிறுக்க, வரைய மற்றும் எழுதச் சொல்லி கேட்கிறார். அவர் இங்கு எதனை ஊக்கப்படுத்துகிறார் ?

  1. (1) பெருமகிழ்ச்சி மற்றும் நகைச்சுவை
  2. (2) எழுதுதல் திறன் முன்னேற்றுதல்
  3. (3) அகரமுதலியில் உள்ள எழுத்துக்களை முதன்முதலாக எழுதச் செய்தல்
  4. (4) வளரும் கல்வியறிவு முன்னேற்றுதல்
See answer and solution
Q115

பின்வருவனவற்றுள் எது படங்களைப் பற்றிய தவறான கூற்றாகும் ? புத்தகங்களில் உள்ள படங்களும், உதாரண படங்களும் :

  1. (1) குழந்தைகளின் ஆர்வத்தை தக்கவைக்கின்றன
  2. (2) அம்மாதிரியான படங்களை வரைவதற்கு வாய்ப்பளிக்கின்றன
  3. (3) அறிமுகமில்லாத மற்றும் நினைவுகூரத்தக்க சூழல்களில் மொழியை வழங்க உதவுகின்றன.
  4. (4) உள்ளடக்கத்திற்கு வலுசேர்க்கின்றன
See answer and solution
Q116

பின்வருவனவற்றுள் எது வளர் இளம் கற்போர் பற்றிய சரியான கூற்றாகும் ?

  1. (1) மிக்க இளம் கற்போர்கள் கோட்பாடு சார்ந்த சிந்தனைகளை புரிந்து கொள்ள சிரமப்படுகிறார்கள்.
  2. (2) மிக்க இளம் கற்போர்கள் கோட்பாடு சார்ந்த சிந்தனைகளை பகுதியளவில் புரிந்து கொள்கின்றனர்.
  3. (3) மிக்க இளம் கற்போர்கள் கோட்பாடு சார்ந்த சிந்தனைகளால் ஊக்கப்படுத்தப்படுகின்றனர்.
  4. (4) மிக்க இளம் கற்போர்கள் கோட்பாடு சார்ந்த சிந்தனைகளை புரிந்து கொள்வர்.
See answer and solution
Q117

மாணவர்கள் உங்கள் வகுப்பறையில் உங்களோடு கொள்ளும் உரையாடல் தொடர்பினை சுலபமாக மேற்கொள்ள ஆசிரியராக நீங்கள் எந்தெந்த நடவடிக்கைகளை எடுப்பீர்கள் ?
(a) மாணவர்களை அதிக கேள்விகள் கேட்க ஊக்கமூட்டுதல்
(b) இணை மற்றும் குழு செயல்களை நடத்தி மாணவர்களின் அபிப்பிராயத்தை வரவேற்றல்
(c) உரைநூலை உரக்க வாசிக்கச் சொல்லி, ஒவ்வொருவராக பதிலளிக்கச் சொல்லி தனிநபர் கற்றல் நடக்கும் வண்ணம் செய்தல்
(d) ஒருவரோடு ஒருவர் தொடர்புகொள்ள உரையாடல்களை வாசிக்கச் செய்தல் மற்றும் ஒருவர் மற்றவரை கேள்விகேட்கும் வண்ணம் செய்தல்

  1. (1) (b), (c), (d) சரியானவை
  2. (2) (a), (b), (d) சரியானவை
  3. (3) (a), (c), (d) சரியானவை
  4. (4) (a), (b), (c) சரியானவை
See answer and solution
Q118

மொழி என்பது __________ என மொழி வளர்த்தலின் அறிந்துணர் கோட்பாடு (காக்னிடிவ் தியரி) எடுத்து இயம்புகிறது.

  1. (1) வெகுமானம் மற்றும் தண்டனையின் மூலமாக கற்கப்படுகிறது
  2. (2) சமூக தொடர்பின் மூலமாக கற்கப்படுகிறது
  3. (3) வார்த்தை உருவாக்கத்திற்கு முன்பே குழந்தை புரிந்து கொள்ளும் கருத்தினை சார்ந்தது
  4. (4) ஒரு தனி நபரின் உள்ளார்ந்த திறன்
See answer and solution
Q119

கூற்று (A) : மொழி, குழந்தைகளிடையே வளர்த்தெடுக்கப்படும் மிக முக்கியமான திறன்களில் ஒன்றாக கருதப்படும் கலாச்சார விழிப்புணர்வு மற்றும் அதனை வெளிப்படுத்துதல் உணர்வு எனும் முக்கிய கூறினை உருவாக்குகிறது.
காரணம் (R) : கலாச்சார உணர்வு மற்றும் வெளிப்படுத்துதல் திறன்கள் குழந்தைகளுக்கு அடையாளங்கள், சொந்தமாகுதல் மற்றும் மற்றவர்களுடைய கலாச்சாரத்தையும் அடையாளங்களையும் மதிக்கும் உணர்வினை அளிக்கிறது.
பின்வருவனவற்றுள் மிக பொருத்தமான விடையை தெரிந்தெடுக்க :

  1. (1) (A) மற்றும் (R) இரண்டும் உண்மையானவை, ஆனால் (R), (A)-வின் சரியான விளக்கம் அல்ல.
  2. (2) (A) உண்மையானது ஆனால் (R) தவறானது.
  3. (3) (A) தவறானது ஆனால் (R) உண்மையானது.
  4. (4) (A) மற்றும் (R) இரண்டும் உண்மையானவை மற்றும் (R), (A)-வின் சரியான விளக்கமாகும்.
See answer and solution
Q120

பாடப்புத்தகங்கள், ஆசிரியர்களால் எழுதப்பட்ட கதைகள், கவிதைகள், நாடகங்கள் மற்றும் மற்ற பிற எழுத்து வகைகளை அடக்கியுள்ளன. நாம் அத்தகைய பாடங்களை தேர்ந்தெடுக்கும் தேவையில் உள்ளோம் ஏனெனில் அவை :

  1. (1) பாடப்புத்தகத்தில் உபயோகிக்கப்படும் நோக்கத்திற்காக எழுதப்படுகின்றன.
  2. (2) மிக பிரபலமான எழுத்தாளர்களால் எழுதப்படுகின்றன.
  3. (3) எளிய மொழியில் இருக்கின்றன.
  4. (4) நம்பகத்தன்மை வாய்ந்தவை மற்றும் இயற்கையில் தோன்றிய மொழியில் உள்ளன.
See answer and solution

Passage

பத்தியைப் படித்து அதனைத் தொடர்ந்து வரும் வினாக்களுக்குச் சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து எழுதவும். (கே.எண். 121 - 128)
சிறுகதைத் துறையில் தம் இலட்சினையைப் பதித்தவரும் அவர் காலத்தில் பரபரப்பாக பேசப்பட்டவரும் புதுமைப்பித்தனே ஆவார். இவர் 1906 -ம் ஆண்டு தென்னார்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த கடலூரில் பிறந்தார். இவர்தம் இயற்பெயர் சொ. விருத்தாச்சலம். பாளையங்கோட்டை செயின்ட் ஜோசப் உயர்நிலைப்பள்ளியிலும் திருநெல்வேலி இந்துக் கல்லூரியிலும் கல்வி பயின்று 1931 ஆம் ஆண்டு பி.ஏ பட்டம் பெற்றார். மணிக்கொடி இதழில் நடந்த ஒரு விவாதத்தில் கலந்து கொண்டு அவர் ஓர் கட்டுரை ஆசிரியராக எழுத்து உலகிற்கு அறிமுகமானார். வ.ரா. டிஎஸ். சொக்கலிங்கம் முதலியவர்களோடு அவருக்கு ஏற்பட்ட தொடர்பு அவர்தம் எழுத்தார்வத்தைத் தூண்டவே கதைகள் எழுதத் தொடங்கினார். மணிக்கொடி அன்பர்கள் கூட்டு முயற்சியால் தொடங்கப்பட்ட நவயுக பிரசுராலயத்தின் வாயிலாக அவரது முதல் கதைத் தொகுதி வெளிவந்தது. அவரது ஏழு தொகுதிகளிலும் அடங்கிய மொத்த கதைகள் தொண்ணூற்றொன்பது.
தமிழ்ச் சிறுகதை உலகில் புதுமைப்பித்தன் நிலைபேறுடைய இடத்தைப் பெறுவதற்குப் பல காரணங்கள் உண்டு. (1) சமுதாயம் காண மறுத்த - அல்லது காண விரும்பாத எதார்த்த உண்மைகளை அவர் நேருக்கு நேராகக் கண்டு அவற்றை மக்களுக்கு எடுத்துக் காட்டினார். டாக்டர் மு.வ. வின் வார்த்தைகளில் கூறினால் அவர் சிறுகதைக் கலையைத் தன் போர்க் கருவியாகக் கொண்டு சமுதாயக் கொடும் பேய்களோடு போராடினார். இதனால் அவரது கதைகள் பலரது கவனத்திற்கும் கணிப்பிற்கும் ஆளாகின. (2) மரபு வழிபட்ட கதை பின்னல் முறையை உடைத்தெறிந்து விட்டு தன் கதைகளை மன அவசத்தின் உருவங்களாகப் படைத்தார். உணர்வுப் பதிவுகளே முதன்மை பெறும் ‘மன நிழற்’ கதைகளையும் குறியீட்டுருவக் கதைகளையும் ஒட்டுவமைக் கதைகளையும் எழுதிக் காட்டி இலக்கிய சோதனைகளை இலக்கியச் சாதனைகளாக மாற்றினார். (3) வணிக நோக்கில் எழுதப்படும் விதி மரபு கதைகளுக்கே உரிய வியப்பு, முடிவு, எதிர்பார்ப்பு, புதிர் போன்ற உத்திகளை இயன்றவரை நிராகரித்து அவை இல்லாமலே சிறுகதைகளைச் சிறப்புறச் செய்தார். (4) வருணனை மூலம் மனநிலையையும் சுற்றுப்புற சூழலையும் மிகச் செப்பமாக எழுத்தில் வடித்துக் காட்டினார். (5) யாராலும் பின்பற்ற முடியாத - சற்றே வசைபாங்கும் நகையும் கலந்த புதிய மொழி நடையைப் புனைகதைக்கு ஏற்ற வண்ணம் உருவாக்கினார். (6) பாத்திரப் படைப்பு, சூழல் உருவாக்கம் ஆகியவற்றால் கதைகளில் வண்ணப் பொலிவையும் வட்டார நிழலையும் கொண்டு வந்தார். இத்தகு நிறைகளே புதுமைப்பித்தனை ஈடு இணையற்ற சிறுகதை எழுத்தாளராக உலகத்துக்கு காட்டிற்று.
புதுமைப்பித்தனின் படைப்புகளைச் சோதனைப் படைப்புகள் என்பதே சரி. தமிழ்க் கதைகளில் நினைவோட்ட உத்தியை அவரே முதன்முதலாகப் பயன்படுத்தினார். விநாயகர் சதுர்த்தி, கயிற்றரவு, நினைவுப்பாதை, என்பனவற்றுள் அதைக் காணலாம். ஒட்டுவமைக் கதைகளுக்குச் (Allegorical stories) சான்றாக ஞானக் குகை, எப்போதும் முடிவிலே இன்பம் என்பனவற்றைச் சுட்டலாம். வேதாளம் சொன்ன கதை, மனக்குகை ஓவியங்கள் என்பன (Symbolic stories) குறியீட்டுருவக் கதைகள் எனலாம்.
பழங்காலப் புராண-இதிகாச நிகழ்ச்சிகளை தம் நோக்கிற்கு ஏற்பப் புதிய விளக்கம் புலனாகும் வகையிலும் அவர் கதைகளை எழுதினார். சாபவிமோசனம், அன்று இரவு, கபாடபுரம் போன்ற கதைகள் அவ்வகையின.

Q121

இதிகாச நிகழ்ச்சிகளைப் புதிய விளக்கம் புலனாகும் வகையில் புதுமைப்பித்தன் எழுதிய சிறுகதை :

  1. (1) நினைவுப்பாதை
  2. (2) மனக்குகை ஓவியங்கள்
  3. (3) ஞானக்குகை
  4. (4) சாபவிமோசனம்
See answer and solution
Q122

நினைவோட்ட உத்தியைப் பயன்படுத்தி புதுமைப்பித்தன் எழுதிய சிறுகதைகள் :

  1. (1) கபாடபுரம், சாப விமோசனம், கயிற்றரவு
  2. (2) ஞானக்குகை, நினைவுப் பாதை, விநாயகர் சதுர்த்தி
  3. (3) விநாயகர் சதுர்த்தி, கயிற்றரவு, நினைவுப்பாதை
  4. (4) விநாயகர் சதுர்த்தி, சாப விமோசனம், நினைவுப் பாதை
See answer and solution
Q123

பாத்திரப்படைப்பு, சூழல் உருவாக்கம் ஆகியவற்றால் புதுமைப்பித்தன் தம் கதைகளில் கொண்டு வந்தவை :

  1. (1) எதிர்பாரா முடிவு, புதிய மொழிநடை
  2. (2) வண்ணப் பொலிவு, வட்டார நிழல்
  3. (3) வட்டார நிழல், முடிவிலே இன்பம்
  4. (4) புராணம், வண்ணப் பொழிவு
See answer and solution
Q124

இலக்கிய சோதனைகள் இலக்கிய சாதனைகளாக மாறக் காரணமாக இருந்தவை மூன்று. அவை :

  1. (1) எதிர்பாரா முடிவு, மனநிழற் கதைகள், மொழிநடை
  2. (2) ஒட்டுவமைக் கதைகள், புராணக் கதைகள், புதிர்
  3. (3) குறியீட்டுருவம், எதிர்பாரா முடிவு, மனநிழல்
  4. (4) மன நிழல், குறியீட்டுருவம், ஒட்டுவமை
See answer and solution
Q125

__________ அன்பர்கள் கூட்டு முயற்சியால் தொடங்கப்பட்ட __________ வாயிலாக புதுமைப்பித்தனின் __________ தொகுதி வெளிவந்தது.

  1. (1) வ.ரா. டிஎஸ் சொக்கலிங்கம், தொண்ணூற்றொன்பது
  2. (2) வ.ரா. டிஎஸ் சொக்கலிங்கம், முதல் கதை, டாக்டர் மு.வ.
  3. (3) மணிக்கொடி, நவயுக பிரசுராலயம், முதல் கதை
  4. (4) நவயுக பிரசுராலயம், முதல் கதைத் தொகுதி, தொண்ணூற்றொன்பது
See answer and solution
Q126

புதுமைப்பித்தன் தம் சிறுகதைகளில் இயன்றவரை நிராகரித்த உத்திகள் :

  1. (1) வியப்பு, முடிவு, எதிர்பார்ப்பு, புதிர்
  2. (2) மொழிநடை, ஒட்டுவமை, குறியீடு, எதிர்பார்ப்பு
  3. (3) புதிர், முடிவு, ஒட்டுவமை, குறியீட்டுருவம்
  4. (4) நினைவோட்ட உத்தி, வியப்பு, புதிர்
See answer and solution
Q127

__________ வழிபட்ட __________ பின்னல் __________ உடைத்தெறிந்து விட்டு தன் கதைகளை __________ உருவங்களாகப் படைத்தார்.

  1. (1) புராணம், மன அவசம், இதிகாசம், மரபு
  2. (2) நினைவோட்டம், புராணம், மன அவசம், இதிகாசம்
  3. (3) கதை, ஒட்டுவமை, குறியீட்டு, மரபு
  4. (4) மனஅவசத்தின், முறையை, மரபு, கதை
See answer and solution
Q128

ஞானக்குகை சிறுகதை எவ்வகையில் அடங்கும் ?

  1. (1) நனவோடை
  2. (2) குறியீட்டுவகை
  3. (3) வண்ணப்பொழிவு
  4. (4) ஒட்டுவமை
See answer and solution

Passage

பத்தியைப் படித்து அதனைத் தொடர்ந்து வரும் வினாக்களுக்குச் சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து எழுதவும். (கே.எண். 129 - 135)
மனிதனுடைய மனத்திலே உணர்ச்சியை எழுப்பி அழகையும் இன்பத்தையும் அளிக்கிற பண்பு அழகுக் கலைகளுக்கு உண்டு. மனிதன் தன்னுடைய அறிவினாலும் மனோபாவத்திலும் கற்பனையினாலும் அழகுக் கலைகள் அமைத்து அவற்றின் மூலமாக உணர்ச்சியையும் அழகையும் இன்பத்தையும் காண்கிறான். அழகுக் கலைகள், மனத்திலே உணர்ச்சியை எழுப்பி அழகுக் காட்சியையும் இன்ப உணர்ச்சியையும் கொடுத்து மகிழ்விக்கிறபடியினாலே, நாகரிகம் படைத்த மக்கள் அழகுக் கலைகளைப் போற்றுகிறார்கள்; பேணி வளர்க்கிறார்கள்; துய்த்து இன்புற்று மகிழ்கிறார்கள்.
அழகுக் கலையை விரும்பாத மனிதனை அறிவு நிரம்பாத விலங்கு என்றே கூற வேண்டும். அவனை முழு நாகரிகம் பெற்றவன் என்று கூற முடியாது.
அழகுக் கலைகள் எத்தனை ? அழகுக் கலைகள் ஐந்து. அவை கட்டடக் கலை, சிற்பக் கலை, ஓவியக் கலை, இசைக் கலை, காவியக் கலை என்பன. பண்டைக் காலத்தில் நமது நாட்டவர் கட்டடக் கலையையும் சிற்பக் கலையையும் ஒரே பெயரால் சிற்பக் கலை என்று வழங்கினார்கள். ஆனால் கட்டடக் கலை வேறு, சிற்பக் கலை வேறு.
காவியக் கலையுடன் நாடகக் கலையும் அடங்கும். அழகுக் கலைகளில் இசைக்கலை காவியக்கலை இரண்டையும் பண்டைத் தமிழர் இயல் இசை நாடகம் என்று மூன்றாகப் பிரித்தனர். அவர்கள் இயற்றமிழ் என்று கூறியது காவியக் கலையை. செய்யுள் நடையிலும் வசனநடையிலும் காவியம் அமைப்பது இயற்றமிழ் எனப்பட்டது. செய்யுளை இசையோடு பாடுவது இசைத்தமிழ் எனப்பட்டது. இயலும் இசையும் கலந்து ஏதேனும் கருத்தையோ கதையையோ தழுவி வருவது நாடகத் தமிழ் எனப்பட்டது. நாடகத் தமிழில் நடனம் நாட்டியம் கூத்து என்பனவும் அடங்கும். எனவே அழகுக் கலைகள் ஐந்தையும் விரித்துக் கூறுமிடத்தே கட்டடக் கலை, சிற்பக் கலை, ஓவியக் கலை, இசைக் கலை, கூத்துக் கலை (நடனம், நாட்டியம்), காவியக் கலை, நாடகக் கலை என ஏழாகக் கூறப்படும்.

Q129

அழகுக் கலைகள் எத்தனை வகைப்படும் ?

  1. (1) எட்டு
  2. (2) மூன்று
  3. (3) ஆறு
  4. (4) ஐந்து
See answer and solution
Q130

பண்டைக் காலத்தில் கட்டடக் கலையையும் சிற்பக் கலையையும் ஒரே பெயரால் __________ என்று வழங்கினார்கள்.

  1. (1) அழகுக் கலை
  2. (2) ஓவியக் கலை
  3. (3) சிற்பக் கலை
  4. (4) கட்டடக் கலை
See answer and solution
Q131

மனிதனுடைய மனத்திலே உணர்ச்சியை எழுப்பி அழகையும் இன்பத்தையும் அளிக்கிற பண்பு எதற்கு உண்டு ?

  1. (1) அழகுக் கலைகளுக்கு
  2. (2) கதைகளுக்கு
  3. (3) மனிதனுக்கு
  4. (4) அழகுக்கு
See answer and solution
Q132

அழகுக் கலையை விரும்பாத மனிதன் :

  1. (1) அறிவு நிரம்பப் பெற்றவன், இன்புற்று வாழ்பவன்.
  2. (2) அறிவு நிரம்பாத விலங்கு, முழு நாகரிகம் பெறாதவன்.
  3. (3) அறிவு நிரம்பிய விலங்கு, முழு நாகரிகம் பெற்றவன்.
  4. (4) முழு நாகரிகம் பெற்றவன், கலையைப் பேணிக் காப்பவன்.
See answer and solution
Q133

நாகரிகம் படைத்த மக்கள் __________ போற்றுகிறார்கள். ஏனெனில், அழகுக்கலைகள், மனத்திலே உணர்ச்சியை எழுப்பி __________ இன்ப __________ கொடுத்து மகிழ்விக்கின்றன.

  1. (1) அழகுக் கலைகளை, அழகுக் காட்சியையும், உணர்ச்சியையும்
  2. (2) அழகுக் காட்சியை, கற்பனையையும், எழுச்சியையும்
  3. (3) கலையை, நாகரிகத்தையும், துன்பத்தையும்
  4. (4) ஓவியக் கலையை, அழகையும், உணர்ச்சியையும்
See answer and solution
Q134

இயலும் இசையும் கலந்து ஏதேனும் கருத்தையோ கதையையோ தழுவி வருவது :

  1. (1) இயற்றமிழ்
  2. (2) நாடகத் தமிழ்
  3. (3) செந்தமிழ்
  4. (4) இசைத்தமிழ்
See answer and solution
Q135

இயற்றமிழ் என்று கூறியது __________ கலையை செய்யுள் நடையிலும் __________ காவியம் அமைப்பது __________ எனப்பட்டது.

  1. (1) காவிய, காவிய நடையிலும், கூத்துக் கலை
  2. (2) அழகு, வசனநடையிலும், செந்தமிழ்
  3. (3) காவிய, வசனநடையிலும், இயற்றமிழ்
  4. (4) நாடகக் கலை, எழுத்து நடையிலும், இசைக் கலை
See answer and solution
Q136

ஓர் ஆசிரியர் பாட அலகிற்கு பொருந்துமாறு ஒரு ஒளிப்படத்தை கண்டறிந்து இணைப்பயிற்சி செயல்பாட்டினை அதே ஒளிப்படத்தின் அடிப்படையில் திட்டமிடுகிறார். இந்த இணைப்பயிற்சி செயல்பாடு மாணவர்களை __________ செய்ய ஊக்குவிக்கிறது.

  1. (1) அதிவிரைவாக இருவரும் சேர்ந்து செயல்பட
  2. (2) ஆசிரியர் இல்லாமல் அவர்களே சுதந்திரமாக செயல்பட
  3. (3) மொழி விழிப்புணர்வை மேம்படுத்த
  4. (4) அவர்களின் சொந்த வேலையை மதிப்பிடச் செய்கிறது
See answer and solution
Q137

மொழிக்கற்றல் சார்ந்த ஒரு துணைப்பாட நூலுக்கு, ஒரு சிறுகதை தொகுப்பும் மற்றும் வேறு கதைவடிவங்களும் பரிந்துரை செய்யப்படுகின்றன. அந்த துணைப்பாடத்தின் தலையாய நோக்கம் என்னவாக இருக்கும் ?

  1. (1) முனைப்பான வாசிப்பினை மேம்படுத்துதல்
  2. (2) நீதிநெறி கற்றலை மேம்படுத்துதல்
  3. (3) பரவலான வாசிப்பை மேம்படுத்துதல்
  4. (4) பன்மொழித்திறன் வளர்த்தெடுத்தல்
See answer and solution
Q138

கூற்று (A) : கற்றல் குறைநிரப்பு கற்பித்தல் (Remedial Teaching) கற்பித்தல்-கற்றல் செயல்முறையின் உள்ளார்ந்த பகுதியாக இருக்கும்.
காரணம் (R) : கற்றல் குறை நிரப்பு கற்பித்தல் என்பது சரிவர கற்காதவைகளை அவசியமாக அதே பழைய முறையில் அல்லாமல் மீண்டும் கற்பித்தல் ஆகும்.
பின்வருவனவற்றுள் மிக பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்க :

  1. (1) (A) மற்றும் (R) இரண்டும் உண்மையானவை, ஆனால் (R), (A)-வின் சரியான விளக்கம் அல்ல.
  2. (2) (A) உண்மையானது ஆனால் (R) தவறானது.
  3. (3) (A) தவறானது ஆனால் (R) உண்மையானது.
  4. (4) (A) மற்றும் (R) இரண்டும் உண்மையானவை மற்றும் (R), (A)-வின் சரியான விளக்கமாகும்.
See answer and solution
Q139

ஒரு மாணவரால் படிக்கப்படும் கதையை அவர் வார்த்தைகளிலேயே மறுபடியும் சொல்லவைத்தல் எதனை மதிப்பிட செய்கிறது ?

  1. (1) சரளம்
  2. (2) புரிதல்
  3. (3) நினைவில் கொள்ளுதல்
  4. (4) துல்லியம்
See answer and solution
Q140

மொழிக் கற்பித்தலில், பின்வருவனவற்றுள் எது தவறான எடுகோளாகும் ?

  1. (1) கற்றலில், கற்பவர்களின் முதல் மொழி முக்கிய பங்கு வகிக்கிறது.
  2. (2) மொழித் தொடர்பு செயல்பாட்டில், மொழிக் கற்பித்தல் ஈடுபாடு காட்ட வேண்டும்.
  3. (3) பேச்சைக் காட்டிலும் எழுத்திற்கு, மொழிக் கற்பித்தல் முக்கியத்துவம் தரவேண்டும்.
  4. (4) கற்பவர்கள், மொழியை உண்மையான சூழ்நிலைகளில் பயன்படுத்தி மொழி கைவரப்படுகின்றனர்.
See answer and solution
Q141

பின்வருவனவற்றுள் எது மொழி ஆசிரியரின் முதன்மை பொறுப்பாகும் ?

  1. (1) கற்பித்தலுக்கான பாட உள்ளடக்கத்தை தேர்ந்தெடுத்தல்
  2. (2) கற்பவரை வேறுபட்ட வகுப்புகளுக்கு குழுக்களாக பிரித்தல்
  3. (3) கற்பவருக்கு அறிவுறுத்தல் செய்தல்
  4. (4) கற்பவரின் மொழி பரிமாற்று தேவைகளை கண்டறிதல்
See answer and solution
Q142

குழந்தைகள் ஆரம்பக்கட்ட நிலையில் மிக வசதியாகவும் மற்றும் நன்றாக கற்பது __________ ஆகும்.

  1. (1) அலுவலக மொழியில்
  2. (2) வீட்டு மொழியில்
  3. (3) பயிற்றுமொழி ஆங்கிலத்தில்
  4. (4) பயிற்று மொழியில்
See answer and solution
Q143

பின்வருவனவற்றுள் குழந்தைகளுக்கு கதை சொல்வது பற்றிய தவறான கூற்று எது ?
கதை கேட்பது குழந்தைகளுக்கு __________ உதவுகிறது.

  1. (1) வாக்கிய அமைப்பினை கற்க
  2. (2) பிரச்சினைகளை தீர்க்கும் திறன்களை வளர்த்து கொள்ள
  3. (3) வாழ்க்கையில் கடைபிடிக்க புதிய நீதி விழுமியங்களை கற்க
  4. (4) புதிய வார்த்தைகளை கற்று கொள்வது மற்றும் சொல்வளத்தை விரிவுப்படுத்த
See answer and solution
Q144

ஓர் ஆசிரியர் மொழிப் பயிற்சி அளிக்கையில், பல்திறன் கொண்ட மாணவர் குழுக்களை உருவாக்குகிறார். இந்த பல்திறன் கொண்ட குழு செய்யும் வேலை __________ ஆகும்.

  1. (1) மாணவர்களுக்கு வெளிப்பாட்டுத்திறன் தாராளமாக வழங்க அவர்களுக்கு ஆதிக்கம் செய்வதற்கு இடம் அளித்தல்
  2. (2) மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்ய ஊக்கமளித்தல்
  3. (3) ஆசிரியர் அனைவர் மீதும் கவனம் செலுத்த இயலாததால், ஆசிரியரின் சுமையைக் குறைத்தல்
  4. (4) பின்தங்கிய மாணவரை அடையாளம் காண்பது
See answer and solution
Q145

குழந்தைகள் உட்படுத்தப்பட வேண்டியது மற்றும் ஆழக்கற்க வேண்டியது __________ ஆகும்.

  1. (1) ஆரம்ப வயதிலிருந்தே இரு எழுத்து மொழிகளில்
  2. (2) ஆரம்ப வயதிலிருந்தே பல பேச்சு மொழிகளில்
  3. (3) ஆரம்ப வயதிலிருந்தே பல எழுத்து மொழிகளில்
  4. (4) ஆரம்ப வயதிலிருந்தே இரு பேச்சு மொழிகளில்
See answer and solution
Q146

கூற்று (A) : வரைதல், கல்வி அறிவு பெறும் முற்பகுதியில், எழுதுதலின் தொடக்கம் எனக் கருதப்படுகிறது.
காரணம் (R) : படங்கள் குறியீடுகளாகவும், பொருள் கொண்டதாகவும் உள்ளன.
பின்வருவனவற்றுள் மிக பொருத்தமான விடையை தெரிந்தெடுக்க :

  1. (1) (A) மற்றும் (R) இரண்டும் உண்மையானவை, ஆனால் (R), (A)-வின் சரியான விளக்கம் அல்ல.
  2. (2) (A) உண்மையானது ஆனால் (R) தவறானது.
  3. (3) (A) தவறானது ஆனால் (R) உண்மையானது.
  4. (4) (A) மற்றும் (R) இரண்டும் உண்மையானவை மற்றும் (R), (A)-வின் சரியான விளக்கமாகும்.
See answer and solution
Q147

‘குறைந்தபட்ச இணை’ டிரில் (drill) பயிற்சி பின்வரும் எதனை மேம்படுத்த ஒரு திறன் வாய்ந்த உத்தியாக இருக்கும் ?

  1. (1) சொல்லாற்றல்
  2. (2) உச்சரிப்பு
  3. (3) வாசித்து பொருளுணர்தல்
  4. (4) இலக்கணம்
See answer and solution
Q148

கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது மொழி கைவரப் பெறுதலின் நடத்தைக் கோட்பாட்டோடு தொடர்புடையது ?

  1. (1) காலி பாத்திரம் (Empty vessel)
  2. (2) சோதனை மற்றும் பிழை (Trial and error)
  3. (3) சமூகத் தொடர்பு (Social interaction)
  4. (4) விளைபயன் சீர்படுத்துதல் (Operant Conditioning)
See answer and solution
Q149

ஒரு ஆசிரியர் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கதை எழுதும் இடுபணி (Task) கொடுத்தார். மாணவர்கள் கதை எழுதும்போது, தவறு செய்யும், மற்றும் புதிய வார்த்தைகளுக்கு பொருள்கேட்கும் மாணவர்களுக்கு உதவியவண்ணம் ஆசிரியர் வகுப்பறையை வலம் வருகிறார். இங்கு ஆசிரியர் பின்வரும் எந்த பாத்திரப் பங்கை ஏற்கிறார் ?

  1. (1) திட்டமிடுபவர் (Planner)
  2. (2) எளிமைப்படுத்துபவர் (Facilitator)
  3. (3) பிரச்சினைகளை கண்டறிபவர் (Diagnostician)
  4. (4) மேலாளர் (Manager)
See answer and solution
Q150

கூற்று (A) : ஒரு வார்த்தையை சற்றே சரியாக உச்சரிப்பதிலிருந்து வாசித்தல் பெரியது.
காரணம் (R) : வாசித்தல் ஒரு குறியீட்டினைப் புரிவதாகும்.
பின்வருவனவற்றுள் மிக பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்க :

  1. (1) (A) மற்றும் (R) இரண்டும் உண்மையானவை, ஆனால் (R), (A)-வின் சரியான விளக்கம் அல்ல.
  2. (2) (A) உண்மையானது ஆனால் (R) தவறானது.
  3. (3) (A) தவறானது ஆனால் (R) உண்மையானது.
  4. (4) (A) மற்றும் (R) இரண்டும் உண்மையானவை மற்றும் (R), (A)-வின் சரியான விளக்கமாகும்.
See answer and solution