By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 8 Feb 2026 Paper 1 Tamil, Question 125

Topic: Reading comprehension

Passage

பத்தியைப் படித்து அதனைத் தொடர்ந்து வரும் வினாக்களுக்குச் சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து எழுதவும். (கே.எண். 121 - 128)
சிறுகதைத் துறையில் தம் இலட்சினையைப் பதித்தவரும் அவர் காலத்தில் பரபரப்பாக பேசப்பட்டவரும் புதுமைப்பித்தனே ஆவார். இவர் 1906 -ம் ஆண்டு தென்னார்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த கடலூரில் பிறந்தார். இவர்தம் இயற்பெயர் சொ. விருத்தாச்சலம். பாளையங்கோட்டை செயின்ட் ஜோசப் உயர்நிலைப்பள்ளியிலும் திருநெல்வேலி இந்துக் கல்லூரியிலும் கல்வி பயின்று 1931 ஆம் ஆண்டு பி.ஏ பட்டம் பெற்றார். மணிக்கொடி இதழில் நடந்த ஒரு விவாதத்தில் கலந்து கொண்டு அவர் ஓர் கட்டுரை ஆசிரியராக எழுத்து உலகிற்கு அறிமுகமானார். வ.ரா. டிஎஸ். சொக்கலிங்கம் முதலியவர்களோடு அவருக்கு ஏற்பட்ட தொடர்பு அவர்தம் எழுத்தார்வத்தைத் தூண்டவே கதைகள் எழுதத் தொடங்கினார். மணிக்கொடி அன்பர்கள் கூட்டு முயற்சியால் தொடங்கப்பட்ட நவயுக பிரசுராலயத்தின் வாயிலாக அவரது முதல் கதைத் தொகுதி வெளிவந்தது. அவரது ஏழு தொகுதிகளிலும் அடங்கிய மொத்த கதைகள் தொண்ணூற்றொன்பது.
தமிழ்ச் சிறுகதை உலகில் புதுமைப்பித்தன் நிலைபேறுடைய இடத்தைப் பெறுவதற்குப் பல காரணங்கள் உண்டு. (1) சமுதாயம் காண மறுத்த - அல்லது காண விரும்பாத எதார்த்த உண்மைகளை அவர் நேருக்கு நேராகக் கண்டு அவற்றை மக்களுக்கு எடுத்துக் காட்டினார். டாக்டர் மு.வ. வின் வார்த்தைகளில் கூறினால் அவர் சிறுகதைக் கலையைத் தன் போர்க் கருவியாகக் கொண்டு சமுதாயக் கொடும் பேய்களோடு போராடினார். இதனால் அவரது கதைகள் பலரது கவனத்திற்கும் கணிப்பிற்கும் ஆளாகின. (2) மரபு வழிபட்ட கதை பின்னல் முறையை உடைத்தெறிந்து விட்டு தன் கதைகளை மன அவசத்தின் உருவங்களாகப் படைத்தார். உணர்வுப் பதிவுகளே முதன்மை பெறும் ‘மன நிழற்’ கதைகளையும் குறியீட்டுருவக் கதைகளையும் ஒட்டுவமைக் கதைகளையும் எழுதிக் காட்டி இலக்கிய சோதனைகளை இலக்கியச் சாதனைகளாக மாற்றினார். (3) வணிக நோக்கில் எழுதப்படும் விதி மரபு கதைகளுக்கே உரிய வியப்பு, முடிவு, எதிர்பார்ப்பு, புதிர் போன்ற உத்திகளை இயன்றவரை நிராகரித்து அவை இல்லாமலே சிறுகதைகளைச் சிறப்புறச் செய்தார். (4) வருணனை மூலம் மனநிலையையும் சுற்றுப்புற சூழலையும் மிகச் செப்பமாக எழுத்தில் வடித்துக் காட்டினார். (5) யாராலும் பின்பற்ற முடியாத - சற்றே வசைபாங்கும் நகையும் கலந்த புதிய மொழி நடையைப் புனைகதைக்கு ஏற்ற வண்ணம் உருவாக்கினார். (6) பாத்திரப் படைப்பு, சூழல் உருவாக்கம் ஆகியவற்றால் கதைகளில் வண்ணப் பொலிவையும் வட்டார நிழலையும் கொண்டு வந்தார். இத்தகு நிறைகளே புதுமைப்பித்தனை ஈடு இணையற்ற சிறுகதை எழுத்தாளராக உலகத்துக்கு காட்டிற்று.
புதுமைப்பித்தனின் படைப்புகளைச் சோதனைப் படைப்புகள் என்பதே சரி. தமிழ்க் கதைகளில் நினைவோட்ட உத்தியை அவரே முதன்முதலாகப் பயன்படுத்தினார். விநாயகர் சதுர்த்தி, கயிற்றரவு, நினைவுப்பாதை, என்பனவற்றுள் அதைக் காணலாம். ஒட்டுவமைக் கதைகளுக்குச் (Allegorical stories) சான்றாக ஞானக் குகை, எப்போதும் முடிவிலே இன்பம் என்பனவற்றைச் சுட்டலாம். வேதாளம் சொன்ன கதை, மனக்குகை ஓவியங்கள் என்பன (Symbolic stories) குறியீட்டுருவக் கதைகள் எனலாம்.
பழங்காலப் புராண-இதிகாச நிகழ்ச்சிகளை தம் நோக்கிற்கு ஏற்பப் புதிய விளக்கம் புலனாகும் வகையிலும் அவர் கதைகளை எழுதினார். சாபவிமோசனம், அன்று இரவு, கபாடபுரம் போன்ற கதைகள் அவ்வகையின.

Q125

__________ அன்பர்கள் கூட்டு முயற்சியால் தொடங்கப்பட்ட __________ வாயிலாக புதுமைப்பித்தனின் __________ தொகுதி வெளிவந்தது.

  1. (1) வ.ரா. டிஎஸ் சொக்கலிங்கம், தொண்ணூற்றொன்பது
  2. (2) வ.ரா. டிஎஸ் சொக்கலிங்கம், முதல் கதை, டாக்டர் மு.வ.
  3. (3) மணிக்கொடி, நவயுக பிரசுராலயம், முதல் கதைCorrect answer
  4. (4) நவயுக பிரசுராலயம், முதல் கதைத் தொகுதி, தொண்ணூற்றொன்பது

Solution.

CBSE answer: (3)

விடை: (3) மணிக்கொடி, நவயுக பிரசுராலயம், முதல் கதை

  1. பத்தியின் வாக்கியம்: மணிக்கொடி அன்பர்கள் கூட்டு முயற்சியால் தொடங்கப்பட்ட நவயுக பிரசுராலயத்தின் வாயிலாக அவரது முதல் கதைத் தொகுதி வெளிவந்தது.
  2. மூன்று இடைவெளிகளையும் வரிசையாக நிரப்புவது (3) மட்டுமே.

கவனம்: (4)-இல் சொற்கள் பத்தியில் உள்ளவை, ஆனால் முதல் இடைவெளிக்கு 'மணிக்கொடி' இல்லை; தொண்ணூற்றொன்பது என்பது மொத்தக் கதைகளின் எண்ணிக்கை.