மனிதனுடைய மனத்திலே உணர்ச்சியை எழுப்பி அழகையும் இன்பத்தையும் அளிக்கிற பண்பு எதற்கு உண்டு ?
- (1) அழகுக் கலைகளுக்கு
- (2) கதைகளுக்கு
- (3) மனிதனுக்கு
- (4) அழகுக்கு
பத்தியைப் படித்து அதனைத் தொடர்ந்து வரும் வினாக்களுக்குச் சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து எழுதவும். (கே.எண். 129 - 135)
மனிதனுடைய மனத்திலே உணர்ச்சியை எழுப்பி அழகையும் இன்பத்தையும் அளிக்கிற பண்பு அழகுக் கலைகளுக்கு உண்டு. மனிதன் தன்னுடைய அறிவினாலும் மனோபாவத்திலும் கற்பனையினாலும் அழகுக் கலைகள் அமைத்து அவற்றின் மூலமாக உணர்ச்சியையும் அழகையும் இன்பத்தையும் காண்கிறான். அழகுக் கலைகள், மனத்திலே உணர்ச்சியை எழுப்பி அழகுக் காட்சியையும் இன்ப உணர்ச்சியையும் கொடுத்து மகிழ்விக்கிறபடியினாலே, நாகரிகம் படைத்த மக்கள் அழகுக் கலைகளைப் போற்றுகிறார்கள்; பேணி வளர்க்கிறார்கள்; துய்த்து இன்புற்று மகிழ்கிறார்கள்.
அழகுக் கலையை விரும்பாத மனிதனை அறிவு நிரம்பாத விலங்கு என்றே கூற வேண்டும். அவனை முழு நாகரிகம் பெற்றவன் என்று கூற முடியாது.
அழகுக் கலைகள் எத்தனை ? அழகுக் கலைகள் ஐந்து. அவை கட்டடக் கலை, சிற்பக் கலை, ஓவியக் கலை, இசைக் கலை, காவியக் கலை என்பன. பண்டைக் காலத்தில் நமது நாட்டவர் கட்டடக் கலையையும் சிற்பக் கலையையும் ஒரே பெயரால் சிற்பக் கலை என்று வழங்கினார்கள். ஆனால் கட்டடக் கலை வேறு, சிற்பக் கலை வேறு.
காவியக் கலையுடன் நாடகக் கலையும் அடங்கும். அழகுக் கலைகளில் இசைக்கலை காவியக்கலை இரண்டையும் பண்டைத் தமிழர் இயல் இசை நாடகம் என்று மூன்றாகப் பிரித்தனர். அவர்கள் இயற்றமிழ் என்று கூறியது காவியக் கலையை. செய்யுள் நடையிலும் வசனநடையிலும் காவியம் அமைப்பது இயற்றமிழ் எனப்பட்டது. செய்யுளை இசையோடு பாடுவது இசைத்தமிழ் எனப்பட்டது. இயலும் இசையும் கலந்து ஏதேனும் கருத்தையோ கதையையோ தழுவி வருவது நாடகத் தமிழ் எனப்பட்டது. நாடகத் தமிழில் நடனம் நாட்டியம் கூத்து என்பனவும் அடங்கும். எனவே அழகுக் கலைகள் ஐந்தையும் விரித்துக் கூறுமிடத்தே கட்டடக் கலை, சிற்பக் கலை, ஓவியக் கலை, இசைக் கலை, கூத்துக் கலை (நடனம், நாட்டியம்), காவியக் கலை, நாடகக் கலை என ஏழாகக் கூறப்படும்.
மனிதனுடைய மனத்திலே உணர்ச்சியை எழுப்பி அழகையும் இன்பத்தையும் அளிக்கிற பண்பு எதற்கு உண்டு ?
CBSE answer: (1)
விடை: (1) அழகுக் கலைகளுக்கு
கவனம்: 'அழகுக்கு' என்பது கலை தரும் பயன்; பண்பைக் கொண்டிருப்பது அழகுக் கலைகள்.