By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 8 Feb 2026 Paper 1 Tamil, Question 98

Topic: Reading comprehension

Passage

பத்தியைப் படித்து அதனைத் தொடர்ந்து வரும் வினாக்களுக்குச் சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து எழுதவும். (கே.எண். 91 - 99)
பண்டையத் தமிழர் ஈடுபட்டிருந்த இரு பெரும் உற்பத்தித் தொழில்களாக உழவும், வாணிகமும் விளங்குகின்றன. உழவுத் தொழிலில் பெற்றிருந்த தன்மையைச் சங்க நூல்களும் பிறவும் நமக்கு நன்கு காட்டுகின்றன. வேளாண்மையைப் போலவே வணிகத் தொழிலிலும் மக்கள் ஈடுபட்டிருந்தனர். வணிகர் நடுவுநிலை தவறாது வாணிகம் செய்தனர். பிறர் கூறும் பழிக்கு அஞ்சி நேர்மையுடன் உண்மையான விலையைக் கூறி நேரிய வாழ்க்கையை நடத்தியதாகப் பட்டினப்பாலை கூறுகிறது. உழவுத் தொழிலை விரும்பிச் செய்யும் உழவர்களின் நீண்ட நுகத்தடியின் நடுவில் வைக்கப்பட்டுள்ள பகலாணி போல நடுவுநிலை என்ற குணம் நிலை பெற்று விளங்கும் நல்ல உள்ளம் உடையவர்களாக வணிகர்கள் இருந்தனர். பொய் உரைப்பின் தம் குடிக்கு பழிச்சொல் வந்து சேரும் என அஞ்சி உண்மையைக் கூறுவர்.
சங்க கால மக்கள் கிரீஸ், ரோம், எகிப்து, சீனம் ஆகிய நாடுகளோடு கடல் வாணிபம் வைத்திருந்தனர் என்பதை டாக்டர் கே.கே. பிள்ளை சான்றுகளால் புலப்படுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் விளைந்த நறுமணப்பொருட்கள் பலவும் பிறநாட்டில் இருந்ததைக் காணலாம். யூதர்களின் ஆதி சமயத்தலைவரான மோசஸ் தாம் நடத்தி வந்த இறைவழிபாட்டில் ஏலக்காயைப் பயன்படுத்தினர் (கி.மு. 1490) என்பர். தென் அராபிய நாட்டு அரசி ஷேபா, இஸ்ரேலின் மன்னன் சாலமனைக் காணச்சென்றபோது ஏலம், இலவங்கம் முதலிய நறுமணப் பொருட்களைக் கொண்டு சென்றதாகக் கூறுவர்.
தமிழகம் பாபிலோனியா இடையே அக்காலத்தில் விரிவான வாணிகம் நடைபெற்று வந்துள்ளது. பாபிலோனியாவில் நிப்பூர் என்னும் இடத்தில் முரசு என்பவரும் அவர் மக்களும் நடத்தி வந்த காசு வணிகத்தில் சில பற்று வரவுப் பதிவுகள் கிடைத்துள்ளன. கணக்குப் பதியப்பட்ட களிமண்ணோடுகள் கிடைத்துள்ளன. தமிழ் வாணிகர்கள் பாபிலோனியாவில் குடியேறித் தொழில் நடத்தி வந்துள்ளனர் என்பது தெரிய வருகின்றது.
தமிழக எகிப்துக்கிடையே இருந்த வணிக தொடர்பு எரித்திரியக் கடலின் பெருளூஸ் (Perilus of the erithir ocean sea) மூலம் தெரிய முடிகின்றது. எகிப்தின் 17 ஆம் அரச பரம்பரையினருக்கு இறக்குமதியான பொருள்களுள் சேரநாட்டுத் துறைமுகங்களில் இருந்து அனுப்பப்பட்டன என்பர். தேக்கு மரம், மஸ்லின் துணி முதலியன கேரளத்திலிருந்து கடல் வழியாக நேராகப் பாபிலோனியாவுக்குச் சென்றிருக்கக் கூடும்.
கிரேக்க அறிஞர்களின் நூல்களில் பல தமிழ்ச் சொற்கள் காணப்படுகின்றன என்பார். அரிஸா (அரிசி), கருவா (இலவங்கம்) கார்ப்பியன், சிஞ்சி பேராஸ் (இஞ்சி வேர்) முதலாய பல சொற்கள் குறிப்பிடத்தக்கவை.
நறுமணப் பொருட்களைத் தமிழகத்தில் இருந்து விரும்பி வாங்கினராம் ரோமாபுரி மக்கள். ரோமாபுரி மக்களின் ஆறு இலட்சம் பவுன் தங்கம் தமிழர் கைக்கு மாறுகிறது என்று அந்நாட்டில் குறிப்பிடுவராம். பழந்தமிழ் மக்களின் வணிக மேலாண்மை இக்குறிப்புகளால் புலனாகும். யவனர்கள் தமிழ் மன்னர்களிடம் பணிபுரிந்தனராம். மணிமேகலை யவனத் தச்சர் என்று குறிப்பிடுகிறது. அவர்கள் கைவினைக் கம்மியர்களாக விளங்கினர்.
‘யவனர் நன்கலம் தந்த தன் கமழ் தேடல் பொன்செய் புனைகலம்’ என்று புறநானூறு கூறுகிறது. பழந்தமிழர்கள் வாணிகக் கலையில் சிறந்திருந்தனர். கடலோடியும் வாணிகம் புரிந்தனர் என்பது இவற்றால் நன்கு புலனாகும்.

Q98

கிரேக்க அறிஞர்களின் நூல்களில் காணப்படும் தமிழ்ச் சொற்கள் :

  1. (1) அரிஸா, சிஞ்சிபேராஸ், இலவங்கம்
  2. (2) அரிசி, இலவங்கம், இஞ்சி வேர்Correct answer
  3. (3) தேக்கு மரம், ஏலக்காய், சிஞ்சிபேராஸ்
  4. (4) அரிஸா, கார்ப்பியன், சிஞ்சிபேராஸ்

Solution.

CBSE answer: (2)

விடை: (2) அரிசி, இலவங்கம், இஞ்சி வேர்

  1. கிரேக்க நூல்களில் காணப்படும் 'தமிழ்ச் சொற்கள்' எவை என்பதே வினா.
  2. அரிஸா, கருவா, சிஞ்சி பேராஸ் என்பவை கிரேக்கர் எழுதிய வடிவங்கள்; அவற்றின் மூலத் தமிழ்ச் சொற்களை அரிசி, இலவங்கம், இஞ்சி வேர் என்று பத்தி அடைப்புக்குள் தருகிறது.
  3. மூலத் தமிழ்ச் சொற்களை மட்டும் கொண்டது (2); (3) இல் உள்ள தேக்கு மரம், ஏலக்காய் அப்பட்டியலிலேயே இல்லை.

கவனம்: பத்தியில் அப்படியே அச்சாகியுள்ள அரிஸா, கார்ப்பியன், சிஞ்சிபேராஸ் (4) ஈர்க்கக்கூடும்; ஆனால் அவை கிரேக்கர் எழுதிய வடிவங்கள், வினா கேட்பது அவற்றின் மூலமான தமிழ்ச் சொற்களை.