By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 8 Feb 2026 Paper 1 Tamil, Question 100

Topic: Poem comprehension

Passage

பாடலைப் படித்து அதனைத் தொடர்ந்து வரும் வினாக்களுக்குச் சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து எழுதவும். (கே.எண். 100 - 105)
ஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட
‘என்னைஎழு’ தென்று சொன்னது வான்!
ஓடையுந் தாமரைப் பூக்களும் தங்களின்
ஓவியந் தீட்டுக, என்றுரைக்கும்!
காடும் கழனியும் கார் முகிலும் வந்து
கண்ணைக் கவர்ந்திட எத்தனிக்கும்!
ஆடும் மயில் நிகர் பெண்களெல்லாம் உயிர்
அன்பினைச் சித்திரம் செய்க, என்றார்!

சோலைக் குளிர்தரு தென்றல்வரும்,பசுந்
தோகை மயில்வரும்அன்னம் வரும்.
மாலைப் பொழுதினில் மேற்றிசையில் விழும்
மாணிக்கப் பரிதி காட்சிதரும்
‘வேலைச் சுமந்திடும் வீரரின் தோள்உயர்
வெற்பென்று சொல்லி வரைக’எனும்
கோலங்கள் யாவும்மலைமலையாய்வந்து
கூவினஎன்னை!-இவற்றிடையே.

இன்னலிலே, தமிழநாட்டினிலேயுள்ள
என்தமிழ்மக்கள்துயின்றிருந்தார்.
அன்னதோர் காட்சி இரக்கமுண்டாக்கியென்
ஆவியில் வந்து கலந்ததுவே
‘இன்பத் தமிழ்க்கல்வி யாவரும் கற்றவர்
என்றுரைக்கும் நிலை எய்திவிட்டால்-
துன்பங்கள் நீங்கும்,சுகம்வரும்நெஞ்சினில்
தூய்மையுண்டாகிடும்,வீரம்வரும்.’

Q100

பெண்களுக்கு நிகராகப் பாரதிதாசன் கூறுவது __________.

  1. (1) குயில்
  2. (2) கிளி
  3. (3) அன்னம்
  4. (4) மயில்Correct answer

Solution.

CBSE answer: (4)

விடை: (4) மயில்

  1. பாடலில் 'ஆடும் மயில் நிகர் பெண்களெல்லாம்' என்று வருகிறது.
  2. 'நிகர்' என்றால் 'போன்ற, ஒப்பான' என்று பொருள்; எனவே பெண்களுக்கு ஒப்பாகக் கூறப்படுவது ஆடும் மயில்.

கவனம்: அன்னமும் பாடலில் வருகிறது; ஆனால் அது சோலைக் காட்சியில் வரும் பறவை மட்டுமே, பெண்களுக்கு உவமை அல்ல. குயில், கிளி பாடலில் இல்லை.