By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 8 Feb 2026 Paper 1 Tamil, Question 101

Topic: Grammar

Passage

பாடலைப் படித்து அதனைத் தொடர்ந்து வரும் வினாக்களுக்குச் சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து எழுதவும். (கே.எண். 100 - 105)
ஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட
‘என்னைஎழு’ தென்று சொன்னது வான்!
ஓடையுந் தாமரைப் பூக்களும் தங்களின்
ஓவியந் தீட்டுக, என்றுரைக்கும்!
காடும் கழனியும் கார் முகிலும் வந்து
கண்ணைக் கவர்ந்திட எத்தனிக்கும்!
ஆடும் மயில் நிகர் பெண்களெல்லாம் உயிர்
அன்பினைச் சித்திரம் செய்க, என்றார்!

சோலைக் குளிர்தரு தென்றல்வரும்,பசுந்
தோகை மயில்வரும்அன்னம் வரும்.
மாலைப் பொழுதினில் மேற்றிசையில் விழும்
மாணிக்கப் பரிதி காட்சிதரும்
‘வேலைச் சுமந்திடும் வீரரின் தோள்உயர்
வெற்பென்று சொல்லி வரைக’எனும்
கோலங்கள் யாவும்மலைமலையாய்வந்து
கூவினஎன்னை!-இவற்றிடையே.

இன்னலிலே, தமிழநாட்டினிலேயுள்ள
என்தமிழ்மக்கள்துயின்றிருந்தார்.
அன்னதோர் காட்சி இரக்கமுண்டாக்கியென்
ஆவியில் வந்து கலந்ததுவே
‘இன்பத் தமிழ்க்கல்வி யாவரும் கற்றவர்
என்றுரைக்கும் நிலை எய்திவிட்டால்-
துன்பங்கள் நீங்கும்,சுகம்வரும்நெஞ்சினில்
தூய்மையுண்டாகிடும்,வீரம்வரும்.’

Q101

பின்வரும் எதுகைகளை வரிசைப்படுத்துக :

  1. (1) சோலை, வேலை, கோலங்கள், மாலை
  2. (2) சோலை, மாலை, வேலை, கோலங்கள்Correct answer
  3. (3) மாலை, கோலங்கள், வேலை, சோலை
  4. (4) கோலங்கள், மாலை, வேலை, சோலை

Solution.

CBSE answer: (2)

விடை: (2) சோலை, மாலை, வேலை, கோலங்கள்

  1. எதுகை என்பது அடிகளின் முதல் சீரில் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது; இங்கு 'ல' ஓசை ஒன்றி வருகிறது.
  2. பாடலின் இரண்டாம் பகுதியில் இவை வரும் வரிசை: சோலை (1ஆம் அடி), மாலை (3ஆம் அடி), வேலை (5ஆம் அடி), கோலங்கள் (7ஆம் அடி).
  3. பாடலில் உள்ள அதே வரிசை (2) இல் உள்ளது.

கவனம்: (1) இல் வேலை, கோலங்கள் முன்னே வைக்கப்பட்டு மாலை கடைசியில் உள்ளது; இது பாடலின் வரிசை அல்ல.